ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் 'கட்'

ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் 'கட்'

நடைமுறைப்படுத்த 3 ஆண்டு தாமதம்

493585

தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மே மாதம் ஊதியம் வழங்கும் நடைமுறையை (மறுநியமனக் காலத்தில்) 'கட்' செய்வதற்கு, அதாவது நிறுத்துவதற்கு அரசு 3 ஆண்டு கால அவகாசம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.. இதனால் ஏப்ரல் 30-க்கு பின் மே மாத சம்பளம் கிடைக்காது.முக்கியத் தகவல்கள்:

புதிய நடைமுறை: கல்வியாண்டின் இடையில் (ஏப்ரல் 30-க்கு முன்) ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளான ஏப்ரல் 30 வரை மட்டுமே பணி நீட்டிப்பு (Re-appointment) வழங்க அனுமதிக்கப்படுகிறது. மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படாது.

மறுநியமனக் காலம்: மறுநியமனக் காலத்தில் (ஏப்ரல் 30 வரை) ஆசிரியர்கள் பணியில் இருந்தால் மட்டுமே, அந்த மாதங்களுக்கான முழு ஊதியம் வழங்கப்படும். மே மாதம் பணி நீட்டிப்பு இல்லாததால், மே மாத ஊதியம் 'கட்' (Cut) செய்யப்படும்.

தாமதத்திற்கான காரணம்: இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படாமல், 3 ஆண்டு கால அவகாசத்துடன், அடுத்த கல்வியாண்டுகளில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளப் பிடித்தம்: இந்த விதிமீறல்கள் அல்லது தணிக்கைத் தடையின் காரணமாக, ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கும் சூழலும் ஏற்படுவதாகப் புகார்கள் உள்ளன.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

494491

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -1 மற்றும் Paper-II 2026 தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக பள்ளிக் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள்

BC & MBC - BT , SGT Warden- Emis number creation- Instructions.pdf

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 492064

திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 DSE - Thiran Proceedings - Download here

திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு) சார்ந்த தகவல்கள் :

 திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு)  சார்ந்த தகவல்கள் :

- திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல்  1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 

- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 

அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 

Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும். 

- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 

*மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்*:

 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60. 

- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.

Emis-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை நிரப்ப வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம். 

குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். 

 - மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை 01.04.2026 முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம். 

 நன்றி.

தேர்தல் பணியாற்றும் பெண்களுக்கு அந்த தொகுதியிலேயே பணி - கோரிக்கை

 தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி வழங்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அஞ்சல் வாக்குகளை உரிய நேரத்தில் அளிக்கும் வகையில் முன்கூட்டியே வழங்கிட வேண்டும். தேர்தல் பணியாற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்கிட வேண்டும்.

நூறு சதவீதம் அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், மகப்பேறு விடுப்பில் உள்ளோர் மற்றும் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விலக்கு கோருபவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து தவிர்ப்பு வழங்கிட வேண்டும். 

தேர்தல் பணியில் ஈடுபடுவோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதியிலேயே பணி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: மே 20 முடிவுகள் வெளியீடு

 தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவு பெற்​றது. இதில், பிர​தான பாடங்​களுக்​கான தேர்​வு​கள் ஏப்​.2-ம் தேதி​யுடன் முடிந்த நிலை​யில், நேற்று மலை​யாளம், கன்​னடம் உள்​ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெற்​றது. இந்த தேர்வை 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் எழு​தினர். தேர்வு எளி​தாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

பொதுத் தேர்வு முடிவடைந்​ததை அடுத்​து, விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​.10 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​காக தமிழகம் முழு​வதும் 80-க்​கும் மேற்​பட்ட முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இப்​பணி​களில் சுமார் 50 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். தொடர்ந்​து, மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்​து, திட்​ட​மிட்​டபடி மே 20-ம் தேதி தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் தேர்​வுக்கு இது​வரை இல்​லாத அளவுக்கு நடப்பு ஆண்​டில் 26 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஹோமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல, ராணுவக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கும் நீட் தேர்வு கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​துகிறது.

அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் மே 3-ம் தேதி பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெற உள்​ளது. தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடக்​கிறது. துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 16 இடங்​களில் தேர்வு நடை​பெறுகிறது.

ஆன்​லைனில் (https://neet.nta.nic.in) இந்த தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​பது கடந்த பிப்​.8-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி முடிவடைந்​தது. விண்​ணப்​பங்​களை பரிசீலனை செய்​யும் பணி​கள் இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. சில நாட்​களில் ஹால் டிக்​கெட்டை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய தேசிய தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்​களின் எண்​ணிக்கை ஆண்​டு​தோறும் அதி​கரித்து வரு​கிறது. அதன்​படி, 2017-ல் 11.38 லட்​சம் பேர், 2018-ல் 13.26 லட்​சம், 2019-ல் 15.19 லட்​சம், 2020-ல் 15.97 லட்​சம், 2021-ல் 16.14 லட்​சம், 2022-ல் 18.72 லட்​சம், 2023-ல் 20.87 லட்​சம், 2024-ல் 24.06 லட்​சம், 2025-ல் 22.76 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர். இது​வரை இல்​லாத அளவுக்கு தற்​போது 26 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடை​பெறும். இத்​தேர்​வில் 180 கேள்வி​கள் கேட்​கப்​படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண்​கள் வீதம் மொத்​தம் 720 மதிப்​பெண்​களுக்கு தேர்வு நடை​பெறுகிறது. தவறான பதி​லுக்கு 1 மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தொடக்கக் கல்வித் துறையில் ஊதியக் கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு - DEE Proceedings

 தொடக்கக் கல்வி 2028-2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்ட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் உள்ள கணக்குத் தலைப்புகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது தகவல் தெரிவித்தல் தொடர்பாக

SSLC - VALUATION CAMP SCHEDULE REVISED

SSLC மைய மதிப்பீட்டுப் பணி - விடைத்தாள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

 478884

SSLC மைய மதிப்பீட்டுப் பணி - விடைத்தாள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

DGE - SSLC Valuation_Proceedings

👇👇👇👇

Download here

ஓட்டுச்சாவடி பெண் பணியாளர் தேர்வு : தலைமை தேர்தல் அதிகாரி புது உத்தரவு

 ஓட்டுச்சாவடி பெண் பணியாளர் தேர்வு : தலைமை தேர்தல் அதிகாரி புது உத்தரவு.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சட் டசபை சுற்றறிக்கை: தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சட்டசபை பொதுத்தேர்தலுக்கு ஒட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சா வடிகளில் பணிபுரிய வேண்டிய பெண் பணியாளர்களை கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யக் கூடாது. அதற்கு பதிலாக, அவர்கள் தேர்தல் பார்வையாளர்களின் வழிகாட்டுதலின்படி அருகிலுள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு 'மேனுவல்' அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.

இதன்மூலம் ஓட்டுப்பதிவு நாளில் பெண்கள் காலையில் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று உரிய நேரத்தில் கடமையை செய்ய முடியும். தொலைதூரங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பெண் பணியாளர்கள் யாரையும் பணியமர்த்த கூடாது. ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் செய்து தர வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு! வெயில் அதிகமாக இருந்தால் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு!!

 தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றுள்ளது. தொடா்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இத்தோ்வு ஏப். 6-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு முழு ஆண்டு, இறுதி பருவத் தோ்வு நடைபெறவுள்ளது.

அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஏப். 6-ஆம் தேதி முதல் ஏப். 16-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஏப். 1 முதல் 16-ஆம் தேதி வரையிலும் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து 1 முதல் 9-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ளது. தொடா்ந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்

நிகழாண்டு ஏப். 23-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக மாணவா்களுக்கு தோ்வுகளை நடத்தி விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தோ்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவா்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 48 நாள்கள் கோடை விடுமுறை விடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.