சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.

324159

சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு.

சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்வு; பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.

குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வனக்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்பு

அரசு கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதிய உயர்வு அறிவிப்பு*

வரும் மார்ச் முதல் இது அமலுக்கு வரும்; 9646 கெளரவ விரிவுரையாளர்கள் இதன் மூலம் பயனடைவர் எனவும் தெரிவிப்பு

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழக அரசு ஊழியர் வாகனம் வாங்க இனி முன் அனுமதி தேவையில்லை - புதிய டிஜிட்டல் நடைமுறை அமல்

screenshot-2026-02-22-082655-2026-02-22-08-27-16

இனி வாகனப் பரிவர்த்தனை தகவல்களை ‘கலஞ்சியம்’ போர்டல் வழியாகவே எளிதாகப் பதிவு செய்யலாம் என்றும், இதற்காகப் பழைய காகித முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய டிஜிட்டல் முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனங்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான நடைமுறைகளில் இருந்த சிக்கல்களைக் கலைந்து, முழுமையான டிஜிட்டல் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாகனப் பரிவர்த்தனை தகவல்களை ‘கலஞ்சியம்’ போர்டல் வழியாகவே எளிதாகப் பதிவு செய்யலாம் என்றும், இதற்காகப் பழைய காகித முறையைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு அரசாங்கம் அரசு ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனங்களை கையகப்படுத்துதல் மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) போர்டல் அல்லது ‘கலஞ்சியம்’ வழியாக முழுமையான டிஜிட்டல் தகவல் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுவரை பின்பற்றப்பட்ட காகித அடிப்படையிலான அறிக்கை சமர்ப்பிக்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இனி அனைத்து தகவல்களும் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வாகனங்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு அவர்களின் மொத்த ஊதியத்தின் மூன்று மாதத் தொகையை விட அதிகமாக இருந்தால், அவை கட்டாயமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த சுய அறிவிப்பு பரிவர்த்தனை நடைபெற்ற நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் IFHRMS போர்டலில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக முன் அனுமதி பெற தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வாகனங்களை வாங்குவதற்காக வங்கிகள், பொது நிதி நிறுவனங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு முன் அனுமதி அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களும் பணியாளரின் டிஜிட்டல் சேவை பதிவுடன் தானாக இணைக்கப்பட்டு நிரந்தரமாக சேமிக்கப்படும். இதன் மூலம் சொத்து விவரங்களில் வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்கள் இந்த கொள்முதல் தனிப்பட்ட சேமிப்புகள் அல்லது சட்டபூர்வமான நிறுவனக் கடன்கள் மூலமே நிதியளிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி, விற்பனையாளர் அல்லது தொடர்புடையவர்களுடன் எந்த வித நலவாசி மோதலும் இல்லை என்பதை அறிவிக்க வேண்டும்.

தவறான தகவல் வழங்குதல், உண்மைகளை மறைத்தல் அல்லது விதிமுறைகளை மீறுதல் போன்ற செயல்கள் தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் (Discipline and Appeal) விதிகளின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய டிஜிட்டல் நடைமுறையால் நிர்வாக தாமதங்கள் குறையும், தகவல் பரிமாற்றம் வேகமாகும், ஊழியர்கள் மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும் என அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அரசு எடுத்துள்ள இந்த டிஜிட்டல் முன்னெடுப்பு, ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், தவறான தகவல்களைப் பதிவு செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை, இந்த நடைமுறையில் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. மொத்தத்தில், நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசுப் பணிகளை வேகப்படுத்தவும், ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் இந்த புதிய 'கலஞ்சியம்' அப்டேட் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

321508

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

02.03.2026 - உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

322792

 தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 14.03.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது அரசு

மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 9 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

1,2,3 rd Ennum Ezhuthum Empty Format - Download here

4 & 5th Ennum Ezhuthum Empty Format -  Download here

Term III Lesson Plan

March - 2026

SET : 9

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 9 ) Lesson Plan - E/M - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஓய்வுக்கால நிதியை எங்கே முதலீடு செய்வது? SCSS Vs Senior citizen FD ? எது பெஸ்ட்?

ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை, ஓய்வு பெற்ற பிறகு எங்கே முதலீடு செய்வது என்பது ஒவ்வொரு முதியவரின் மனதிலும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. ஒரு புறம் வட்டியே வராவிட்டாலும் பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பயம். மறுபுறம் விலைவாசி உயர்வை சமாளிக்க அதிக வட்டி கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு. இந்த இரு தேடலில் நம் முன்னே நிற்கும் இரண்டு அம்சங்கள், ஒன்று மத்திய அரசின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ( SCSS), இரண்டாவது வங்கிகளின் மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் (Senior Citizen FD).

தற்போதைய சூழலில் SCSS திட்டத்திற்கு வட்டி விகிதம் 8.2% வழங்கப்படுகிறது., வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு வட்டி விகிதம், வழக்கமான திட்டங்களை விட சற்று அதிகம். இருப்பினும் இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்? வரிச் சலுகை என்று வரும்போது எது கை கொடுக்கும்? அவசரத் தேவைக்கு எதில் பணத்தை எளிதாக எடுக்கலாம்? எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பணத்திற்கு 100% கியாரண்டி தருவது எது? இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசங்களையும், உங்கள் தேவைக்கு எது கச்சிதமாக பொருந்தும் என்பதையும் விரிவாக பார்ப்போம்.

வழக்கமாக மாத வருமானம் நின்றுவிடும் போது, நாம் செய்யும் முதலீடுகளே, நமக்கான மாதாந்திர ஓய்வூதியமாக மாறுகின்றன. ஆக ஓய்வு காலத்திற்கு பிறகு முதலீடு என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அப்படி மூத்த குடிமக்களிடையே அதிகம் விவாதிக்கப்படும் திட்டங்கள் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டம். இதில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது மத்திய அரசு வழங்க கூடிய ஒரு சிறப்பு திட்டமாகும். இது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். மேற்கொண்டு 3 ஆண்டுகள் அதிகரித்து கொள்ளலாம். இதில் அதிகபட்ச முதலீடாக 30 லட்சம் ரூபாய் செய்து கொள்ளலாம். இதற்கு 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு உண்டு. இது அஞ்சலகத்தின் மூலம் வழங்கப்படுவதால், அரசின் பாதுகாப்பு உண்டு. ஆக மிகவும் பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டமானது எந்த வங்கியில் வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். இதற்கு வழக்கமான திட்டங்களை விட 0.25% முதல் 0.75% வரை அதிகமாக வட்டி கிடைக்கிறது. வங்கிகள் சுமார் 7.1% என்ற விகிதத்தில் வழங்குகின்றன. ஆனால் சிறு நிதி நிறுவனங்கள் 8% வரையில் வட்டி கொடுக்கின்றன.
மூத்த குடிமக்கள் எஃப்டி திட்டத்தில் வங்கிக்கு வங்கி வட்டி மாறுபடும். உத்தரவாதமாக இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் வரையில் கவர் செய்யப்படுகிறது. இதில் 7 முதல் 10 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் இருக்கும். வட்டி விகிதம் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கூட பெற்றுக் கொள்ள முடியும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆக உங்களுக்கு முதலீட்டு காலம் நெகிழ்வாக இருக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் இது பெஸ்ட்டாக இருக்கும்.

ஓய்வுக்கால முதலீட்டை பொறுத்த வரை முழுமையான பாதுகாப்பு மற்றும் தவறாத வருமானம் ஆகியவற்றுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் SCSS சற்று முன்னிலையில் உள்ளது. ஆனால் மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமல்ல. ஆக பணத்தின் ஒரு பகுதியை SCSS-லும், மீதமுள்ள பகுதியை வங்கி FD-களிலும் பிரித்து முதலீடு செய்வது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கும், அதே சமயம் அவசரத் தேவைக்கான பணப்புழக்கமும் இருக்கும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அப்பாவுக்கு வாடகை கொடுத்து வரி மிச்சப்படுத்தலாமா? 2026 புதிய வரைவு வரி விதிகளில் அதிரடி மாற்றம்!

சொந்த வீட்டிலேயே வாடகைக்கு இருந்து கொண்டு வரி மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் யுக்திக்கு வருமான வரித்துறை இப்போது ஒரு பெரிய செக் வைத்துள்ளது எனலாம். ஏனெனில் இதுவரை அப்பாவிடமோ அல்லது மனைவியிடமோ ஒரு வாடகை ஒப்பந்தம் போட்டு, ஹெச்.ஆர்.ஏ (HRA) கிளைம் செய்து வந்த காலம் மெல்ல மாறி வருகிறது.

ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வரைவு விதிகள் படி, நீங்கள் யாருக்கு வாடகை கொடுக்கிறீர்கள் என்பதை மட்டும் சொன்னால் போதாது. அந்த வீட்டு உரிமையாளருக்கும், உங்களுக்கும் என்ன உறவுமுறை என்பதையும் இனி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கென படிவம் 124 (Form 124) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலி வாடகை ரசீதுகளை ஒழித்து கட்டவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் வரித்துறை கையில் எடுத்துள்ள இந்த ஆயுதம், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? 2026-ல் உங்கள் ஹெச்.ஆர்.ஏ கிளைம் தள்ளுபடி ஆகாமல் இருக்க, நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்.

புதிய வரைவு விதி 205 பெற்றோருக்கோ, துணைவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ வாடகை கொடுப்பதை தடை செய்யவில்லை. இது ஒரு சட்டப்பூர்வ வரி சேமிப்பு திட்டமே. ஆனால் அந்த வாடகை ஒப்பந்தம் உண்மையானதாக இருக்க வேண்டும். இதற்கு முன்பெல்லாம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி வாடகை வரம்பானது ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டினால், வீட்டு உரிமையாளர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும், படிவம் 12BA மூலம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது வரி ஏய்ப்பை தடுக்க கொண்டு வரப்பட்ட திட்டமே தவிர, தடை அல்ல.

உதாரணத்திற்கு 36 வயதான அனிதா என்பவர், தனது தாய்க்கு சொந்தமான சென்னை வீட்டில் வசிக்கிறார். முறையான வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார். மாதம் 20,000 வாடகையை வங்கி கணக்கு மூலம் செலுத்துகிறார். தாயாரோ தனது மகளிடம் இருந்து வரும் வாடகையைத் தனது வருமான வரித் தாக்கலில் வருமானம் என காட்டுகிறார். அனிதா தனது தாயுடனான உறவை வெளிப்படுத்தினாலும், அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருப்பதால், அவரது ஹெச். ஆர்.ஏ கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படாது.

புதிய விதிகளின் படி அனிதா 12BA - தனது வீட்டு உரிமையாளர் தாய் என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். நீங்களும் உங்கள் உறவினர்களுக்கு வாடகை கொடுக்க திட்டமிட்டால், கட்டாயம் வாடகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். வாடகையை வங்கி பரிமாற்றம் மூலம் செய்தல், வீட்டு உரிமையாளரின் வருமான வரி தாக்கல் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. புதிய விதிமுறைகள் உறவினர்களுக்கிடையிலான பணப்பரிமாற்றத்தை முடக்கவில்லை, மாறாக அதைத் தெளிவுபடுத்துகின்றன. ஆக உண்மையான வாடகை பரிமாற்றங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.

புதிய வரைவு விதிகளின் சாராம்சம் மிகவும் தெளிவானது. நீங்கள் முறையாக வாடகை செலுத்தினால் உங்களுக்கு பயமில்லை. ஆனால், வரியை சேமிக்க திட்டமிட்டால் கடும் அபராதம் காத்திருக்கிறது. வருமான வரிச் சட்டம் 270A-ன் படி, தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பு செய்தால், அதாவது குறைவான வருமானம் காட்டினால் செலுத்த வேண்டிய வரி தொகையில் 50% அபராதம். அதுவே போலி ரசீதுகள், பணப்பரிமாற்றம் இல்லாத வாடகை ஒப்பந்தங்கள் போன்ற போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால், வரித் தொகையில் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம்.

எவையெல்லாம் ஆபத்தான செயல்கள்?
• உண்மையில் வசிக்காத ஒரு வீட்டிற்கு வாடகை ரசீது சமர்ப்பித்தல்.
• பணத்தை அனுப்பி விட்டு, அதை மீண்டும் ரகசியமாகத் திரும்ப பெறுதல்.
• முறையான வாடகை ஒப்பந்தம் அல்லது வங்கிப் பரிமாற்றம் இல்லாமல் இருப்பது.
• நீங்கள் கொடுக்கும் வாடகையை, வாங்கும் உரிமையாளர் (பெற்றோர்/உறவினர்) தனது வரித் தாக்கலில் காட்டாமல் இருப்பது.

நிபுணர்கள் கூறுவது என்ன?
உண்மையில் வாடகை முறையாக செலுத்தப்பட்டு, சரியான ஆவணங்கள் இருந்து, அது சந்தை நிலவரப்படி இருந்தால், அந்த ஹெச்.ஆர்.ஏ (HRA) சலுகையை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது. இந்த விதி குடும்ப உறுப்பினர்களுக்குள் நடக்கும் வாடகை ஒப்பந்தங்களை ஒழிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக யார் யாருக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தவும், வெறும் வாய்மொழி பேச்சாக இல்லாமல், ஆவண ரீதியாகப் பரிமாற்றங்களை உறுதிப்படுத்தவும் வேண்டும். அப்படி இருந்து விட்டால் அது உங்கள் பெற்றோரோ அல்லது உறவினரோ அல்லது துணையோ யாராக இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஆசிரியர்களுக்கு பயிற்சி..

பள்ளிக்கல்வி - சமூக நலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013 ( தடுப்பு, தடை (ம) தீர்வு ) - இன் படி துறைத்தலைவர்கள் மற்றும் கிளை அலுவலக தலைமை அதிகாரிகள் இணையதளத்தில் அறிக்கை சமர்பித்தல் மற்றும் உள்ளக குழு (IC) மற்றும் பாதுகாப்பு பெட்டி செயல்பாடு, அதன் சட்டம் குறித்து பயிற்சி வழங்கும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுதல் - தொடர்பாக,...

308456

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சென்னை ஐஐடியில் பிஎஸ் மேலாண்மை, தரவு அறிவியல் பட்டப்படிப்பு அறிமுகம்

hindutamil-prod%2F2026-02-22%2Ft0gq5duw%2FIMGIndianInstituteof21T9BTOT4F

பிஎஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் 4 ஆண்டு இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை, சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய பட்டப் படிப்புகள் தொடர் பான அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காம கோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி சார்பில் ஏற்கனவே தரவு அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், ஏரோனாட்டிக்ஸ் ஸ்பேஸ் டெக் ஆகிய 3 பிஎஸ் இளநிலை அறிவியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது 4-வதாக மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் 4 ஆண்டு இளநிலை அறிவியல் படிப்பை அறிமுகப் படுத்துகிறோம்.

இந்த பிஎஸ் படிப்பில் சேரு வோரை வணிக ரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடியின் இளநிலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இது ஐஐடி வழங்கும் இதர இளநிலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.

பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுள்ள டிப்ளமோ முடித்தவர்கள் உட்பட எவரும் இப்படிப்பில் சேரலாம். இதை தனிபட்டப் படிப்பாகவோ அல்லது வேறு கல்வித் திட்டத்துடன் இணைந்தோ அல்லது பணியில் இருந்து கொண்டே தொடரலாம். தகுதித் தேர்வு மூலமாகவோ அல்லது ஜேஇஇ பிரதானத் தேர்வில் கலந்துக் கொள்ளும் தகுதியைப் பெறுவதன் மூலமாகவோ இந்த படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

இதன் வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்கும். இதற்கு மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த புதிய பிஎஸ் படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விவரங்களை ஐஐடி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், ஃபோர்டு மோட் டார் நிறுவனத்தின் இந்தியா பிரிவுத் தலைவர் கங்கப்ரியா சக்ரவர்த்தி, சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை ஐஐடி மேலாண்மைக் கல்வித் துறை தலைவர் சஜி மேத்யூ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிளஸ்-2 படித்த ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு மார்ச் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

     hindutamil-prod%2F2026-02-23%2F383m3bug%2F16

பிளஸ்-2 படித்து முடித்த ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யின மாணவர்​கள், 3 ஆண்டு இளங்​கலை ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்​புக்கு விண்​ணப்​பிக்​கு​மாறு மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழ்​நாடு ஆதி​தி​ரா​விடர் வீட்டு வசதி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் மூலம் பிளஸ்-2 முடித்த ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள், தேசிய தேர்வு முகமை சார்​பில் நடத்​தப்​படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு மூல​மாக, தரமணி​யில் இயங்கி வரும் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி அண்ட் அப்​ளைடு நியூட்​ரிஷன் நிறு​வனத்​தில் 3 ஆண்டு முழு நேர இளங்​கலை அறி​வியல் பட்​டப் படிப்​பில் சேர்ந்து பயில விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்டு வரு​கின்​றன.

தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்​சில் இணை நுழைவுத் தேர்வு வரும் ஏப்​.25-ம் தேதி ஆன்​லைன் வாயி​லாக நடை​பெறவுள்​ளது. இத்​தேர்வை எழுத மாணவர்​கள் மார்ச் 25-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். தேர்வு தொடர்​பான கூடு​தல் விவரங்​களை அறிய​வும், முன்​ப​திவு செய்​ய​வும் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணை​யதளத்தை அணுகலாம்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்​டரிங் டெக்​னாலஜி​யில் பயில, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யின மாணவர்​கள் பிளஸ்-2 வகுப்​பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும்.

குடும்ப ஆண்டு வரு​மானம் ரூ.3 லட்​சத்​துக்​குள் இருக்க வேண்​டும். தாட்கோ மூல​மாக படிப்​பில் சேர www.tahdco.com என்ற இணை​யதளத்​தில் பதிவு செய்ய வேண்​டும்.

படிப்​புக்​கான செலவை தாட்கோ ஏற்​கும். படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடிக்​கும் பட்​சத்​தில் மாணவர்​களுக்கு நட்​சத்​திர விடு​தி​கள், உயர்தர உணவகங்​கள், விமானத் துறை, கப்​பல் துறை மற்​றும் சேவைத் துறை சார்ந்த நிறு​வனங்​களில் பணிபுரிய வழி​வகை செய்​யப்​படும். ஆரம்ப கால மாத ஊதி​ய​மாக ரூ.25 ஆயிரம்​ முதல்​ ரூ.35 ஆயிரம்​ வரை பெறலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

3500

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194ஆவது அவதாரத் திருவிழாயொட்டி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

 பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

hindutamil-prod%2F2026-02-22%2F6sm8rqnj%2Fexams-students-1761794920285

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுகளை எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (பிப்.23) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்களும் அவரவர் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

     hindutamil-prod%2F2026-02-24%2F4fbfmpsy%2F11

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இதில் பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவர்கள் 7,99,692, தனித் தேர்வர்கள் 27,783 என 8,27,475 பேர் எழுதவுள்ளனர். அதேபோல், பிளஸ் 1 அரியர் தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 மற்றும் தனித் தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் வரை எழுதுகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 2, பிளஸ் 1 அரியர் பாடத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று மதியம் வெளியானது.

இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://dgeapp.tnschools.gov.in/ எனும் வலைத் தளத்தில் சென்று மாணவர்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.

அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

ஒரே ஹால்டிக்கெட்: அதே நேரம், தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

ஹால்டிக்கெட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.