TET தேர்வில் தகுதிப் பெற்றவரா நீங்கள்? தமிழ்நாடு அரசில் அடுத்து வரும் மெகா வாய்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இந்த வருடமே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணியாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரவுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 30-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் அடுத்தது என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டுள்ளனர். டெட் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு இந்தாண்டே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் மாதம் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2025

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி, இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகுதித் தேர்வு அந்தந்த மாநிலங்களின் அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) விதிமுறைகளின் படி, ஆண்டிற்கு 2 முறை டெட் தேர்வை நடத்த வேண்டும். இருப்பினும், தமிழ்நாட்டில் இடைவெளிக்கு பின்னர் 2025-ம் ஆண்டு நவம்பர் 15,16 தேதிகளில் இரண்டு தாள்களுக்கான தேர்வு நடைபெற்றது.

2 தாள்களைக் கொண்டு நடைபெறும் டெட் தேர்வு 

1 - 5-ம் வகுப்புகளுக்கு முதல் தாளும், 6 - 8 வகுப்புகளுக்கு இரண்டாம் தாளும் என தகுதித் தாளாக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளை, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 வருட தொடக்கக்கல்வி டிப்ளமோ அல்லது 4 வருட பட்டப்படிப்பு முடித்தவர்கள் எழுதலாம்.

அதே போன்று, 2-ம் தாலை பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் அம்ற்றும் 4 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மற்றும் பி.எட்ட் முடித்தவர்கள் எழுதலாம்.

​டெட் தேர்வில் தகுதிப் பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட ஜனவரியில் அரசாணை வெளியாகியது. அதன்படி, 150 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பிசி/எம்பிசி பிரிவினர் 75 மதிப்பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

2 தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு

​டெட் தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியானது. இதில் தகுதிப் பெற்றவர்கள், அரசு பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு தேர்வை எழுத வேண்டும். அந்த வகையில், டெட் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு அரசு பணியில் சேர ஒரு வாய்ப்பு வரவுள்ளது. டிஆர்பி-யின் 2026 ஆண்டு திட்ட அட்டவணையின்படி,

2000 காலிப்பணியிடங்கள் எதிர்பார்ப்பு 

2025-ம் ஆண்டு திட்ட அட்டவணையின்படி, 1,205 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி, டிசம்பர் மாத தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும். இருப்பினும், பல்வேறு காரணங்களினால் இத்தேர்விற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. தொடர்ந்து, 2026-ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையிலும் BT Assistants / BRTE பதவிக்கான தேர்வு இடம்பெற்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டே இத்தேர்வு நடத்தப்பட்டது. திட்ட அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படாத நிலையில், இந்தாண்டு 2,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெடியா இருங்க

பட்டப்படிப்பிற்கு பின்னர் 2 வருட டிப்ளமோ அல்லது பி.எட் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 4 வருட B.El.Ed அல்லது 4 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் பி.எட் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டெட் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்கள் பிடி உதவியாளர்/ வட்டாரவள மைய பயிற்றுநர் (BT Assistants / BRTE) தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாதும் https://trb.tn.gov.in/ என்ற டிஆர்பி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான பாடத்திட்டத்தையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க தொடங்கலாம்.

இதுமட்டுமின்றி, இந்தாண்டு மே மற்றும் அக்டோபரில் இரண்டு முறை டெட் தகுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

EE Training - பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்புகள் - Proceedings

ஆசிரியர் கல்வி - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 2025-2026 . 1 முதல் 5 ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவம் - விடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சி - கருத்தாளர்கள்/ ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல்

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான 1 முதல் 5 வகுப்பிற்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்று முடிவுற்ற நிலையில் அப்பயிற்சியில் கலந்துகொள்ளாமல் விடுப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி 05.02.2026 அன்று காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை  நடைபெற உள்ளது. 

எனவே, பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தாளர்களையும் அனைத்து ஒன்றியங்களிலும் விடுபட்ட ஆசிரியர்களையும் இப்பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுவிப்பு செய்ய உரிய கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்

*தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்

*TNTET - Genuineness Certificate  & SR Entry Format

*TNTET - Genuineness Certificate பெற  & SR Entry செய்ய தேவையான படிவங்கள்

(Attach  TET certificate & Hall ticket)

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Income Tax - Kalanjiyam Appல் - மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு

 *மாத வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு....*

        *KALANJIYAM WEBSITE*

                       ⬇️

                 *LOGIN*

                       ⬇️

             *e service (HR & pin)*

                        ⬇️

           *EMPLOYEE SELF SERVICE*

                        ⬇️

                   *REPORT*

                        ⬇️

*INCOME TAX PROJECTIONS REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON* 

                        ⬇️

*Write month name* (Jan-2025) & *CLICK Continue button*

                         ⬇️

               *CLICK Submit*

                          ⬇️

        (new screen) *OK* 

                          ⬇️

*CLICK MONITORING REQUEST STATUS*

                           ⬇️

        *CLICK VIEW OUTPUT* 

                           ⬇️

                     *DOWNLOAD*🙏

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Passport NOC பெறுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையின் விளக்கம் (ந.பழனிச்செல்வம்)

கடவுச்சீட்டு மற்றும் தடையில்லாச் சான்று பெறுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசாணையின் விளக்கம்

தகவல் தொகுப்பு

ந.பழனிச்செல்வம்,

முதுகலை ஆசிரியர் (வணிகவியல்), 

அரசு மேல்நிலைப் பள்ளி, 

ஹைவேவிஸ் (மேகமலை)

 உத்தமபாளையம் -வட்டம் 

தேனி  மாவட்டம் - 625515

Click Here to Download - Foreign Trip NOC to Gov't Servants - Explained - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மதிப்பீட்டு புலம் - Future Ready-பிப்ரவரி-2026

மதிப்பீட்டு புலம் - Future Ready-பிப்ரவரி-2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 03.02.26 - 09.02.26.

இணையதள முகவரி : 

https://exam.tnschools.gov.in.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧  மாணவர்கள் *NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை* எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக *Future  Ready* வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து   பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்பறை செயல்பாடாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு -2026 ( Direct Link...)

Professional Tax Slab Details

தொழில்முறை வரி (Professional Tax)  Slab Details

தொழில்முறை வரி (Professional Tax) என்பது இந்தியாவில் உள்ள மாநில அரசுகளால், தொழில், வணிகம் அல்லது வேலைவாய்ப்பு மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள் மீது விதிக்கப்படும் ஒரு நேரடி வரியாகும். இது உள்ளாட்சி அமைப்புகளால் (மாநகராட்சி/நகராட்சி) ஆறு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வருமான வரிக்கு (Income Tax) தனித்துவமானது மற்றும் கட்டாயமானதாகும்

Professional Tax Slab Details

மேலும் கண்டறிக