G.O.267 - ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund - FSF) வழங்கும் அதிகாரத்தை ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அனுமதித்து அரசாணை வெளியீடு!

 Pension Tamil Nadu Government Pensioners ' Family Security Fund Sanction of payment at the Pension Disbursing Officers level Scheme Permitted Orders - Issued. Date - 22.12.2025

ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund - FSF) வழங்கும் அதிகாரத்தை ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அனுமதித்து அரசாணை வெளியீடு!

Click Here to Download - G.O.267 - FSF - Pension Disbursing Officer Level - Pdf

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புதிய வருமான வரிச் சட்டம் அமல்: ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு

  IT

புதிய வருமான வரிச் சட்டம் 2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மசோதா நிறைவேற்றம்

64 ஆண்டுகால பழமையான வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டுவருதல், சட்டப் பிரிவுகளை எளிமைப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த ஆண்டு புதிய வருமான வரி மசோதா-2025 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ள இந்தச் சட்டம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பொருளாதார விளைவுகள்

புதிய சட்டத்தின் மூலம், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தனிநபர்களின் கைகளில் அதிகப் பணம் புழங்கும் என்றும், அவர்கள் பொருட்களை அதிகம் வாங்குவதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) உயரும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க வரி மாற்றங்கள்

புதிய வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக, சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) வரி அடுக்குகள் 4-லிருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டன. இந்த மாற்றம் செப்டம்பர் 22-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.

அதே சமயம், சிகரெட், பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் ஆகியவை மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை மத்திய அரசு முடிவு செய்யும் தேதியில் அமலுக்கு வரும். அடுத்தகட்டமாக, சுங்க வரிகளை எளிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20251226_181226

உதவி பெறும் பள்ளிகள் - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் 2025-2026 ஆம் மாணவர் ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது சார்ந்து - அறிவுரைகள் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டிற்கான விகிதாச்சாரத்தின்படி வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

DEE aided Deployment action taken report.pdf

👇👇👇

Download here

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஆங்கில ஆசிரியர்கள் 1,991 பேருக்கு திறன் பயிற்சி: ஜனவரி 19 முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது

hindutamil-prod%2F2025-12-25%2Fjx0boawr%2F112454661

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1,991 பட்டதாரி ஆசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜன. 19-ம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்டக் கல்விநிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல், சேலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜன. 19 முதல் 23-ம் தேதி வரை உண்டு உறைவிட பயிற்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1,991 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், பயிற்சி வழங்கும் கருத்தாளர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் மாவட்டக் கல்விஅலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர்கள் உரிய அட்டவணையின்படி பயிற்சி மேற்கொள்ளதேவையான முன்னேற்பாடு களை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களை 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகங்களை உடன் கொண்டுவர அறிவுறுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய நாள்களில் பணிவிடுப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இணைய சேவை : சுற்றறிக்கை :Smart class, Hi tech lab problem complaints Number..

   Smart class, Hi tech lab problem complaints Number..

இணைய சேவை : சுற்றறிக்கை

 அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு...

 1. Smart Board , Hi - Tech Lab வசதி பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளிகளும் BSNL நிறுவனம் மூலம் இணைய இணைப்பு பெற்றிருந்தல் வேண்டும் . 

2. ஆனால் இதுநாள் வரை அவ்வாறு இணைப்பு பெறாத 30 அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் BSNL நிறுவனத்திற்கு விரைந்து இணைப்பு வழங்க கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது . 

3.BSNL இணைய சேவை தடைப்பட்டாலோ அல்லது பழுது ஏற்பட்டாலோ 18004444 - என்ற எர் மூலமாக புகார் தெரிவிக்க வேளர்டும் . 

4. தொடர்ந்து 5 நாட்களுக்குள் புகார் சரி செய்யப்படவில்லை எனில் 14417 - என்ற பள்ளிக் கல்வித் துறை எண்ணிற்கு புகார் தெரிவித்தல் வேண்டும் . 

5. அனைத்து பள்ளிகளிலும் ICT Nodel Teacher- ஐ Emis- ல் Assign செய்து Hi - Tech Lab தொடர்பான LMS Video வழி பயிற்சியினை முடித்தல் வேண்டும் 

6. TN - SPARK திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ( 60 ) பள்ளிகளில் 6 , 7 , 8 , மற்றும் 9 கற்பிக்கும் ஆசிரியர்களை Al Teacher களாக EMIS- ல் பதிவு செய்து TN - SPARK தொடர்பான LMS Course- யினை முடித்தல் வேண்டும் .

 Smart வகுப்பறை மற்றும் திறன் மிகு வகுப்பறை👇👇👇

IMG-20251226-WA0009_wm

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஸ்கிரைப்' மாணவர் உண்மை தன்மை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு

   மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 'ஸ்கிரைப்' (சொல்வதை கேட்டு எழுதுதல்) மாணவர்களின் மாற்றுத்திறன் (உடல் உறுப்பு பாதிப்பின் தன்மை) உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய கல்வி ஒன்றியம் வாரியாக 15 குழுக்களை சி.இ.ஓ., தயாளன் அமைத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்வில் அனுமதிக்கப்பட்ட 'ஸ்கிரைப்' மாணவர்களின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யாமல் அனுமதிக்கப்பட்டதாகவும், திட்டமிட்டு சிலர் 'ஸ்கிரைப்' ஆக பங்கேற்றதாகவும் சர்ச்சை எழுந்தது. அடுத்தாண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்கு பிளஸ் 2வில் 236, பத்தாம் வகுப்பில் 382 பேர் 'ஸ்கிரைப்' கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சி.இ.ஓ., தயாளன் தலைமையில் நடந்தது. தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிரதீபா, உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யகலா பங்கேற்றனர்.

இதில், கல்வி ஒன்றியம் வாரியாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் உள்ளடக்கிய கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமையாசிரியர், சிறப்பு பயிற்றுனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு மாணவர்களின் மருத்துவ ஆவணங்கள், மாற்றுத்திறன் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். மாவட்டங்களில் 'ஸ்கிரைப்' மாணவர் உண்மை தன்மையை ஆய்வு செய்ய முதன்முறையாக குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local%20holiday

ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

என்.சி.இ.ஆர்.டி.,யில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு

  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி.,யில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, பாடத்திட்டங்களை உருவாக்குவது, புத்தகங்கள் அச்சிடுவது உள்ளிட்ட பணிகளை என்.சி.இ.ஆர்.டி., செய்கிறது.

இதன் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஏ, பி, சி என, மூன்று நிலைகளில் மொத்தம், 2,844 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 1,219 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 1,625 பணியிடங்கள் காலியாக உள்ளன

அவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க இலக்கு: தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு கூடுதல் கவனம்

 பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் (2025 - 2026) பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 105 உயர்நிலைப் பள்ளிகளும், 115 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 37,883 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வை 34,966 மாணவர்களும் எழுத உள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில், தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, அனயூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகியது.

85 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு

சிறப்பு பயிற்சி: சி.இ.ஓ.,தகவல்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், '' 2024ல் 96.97 ஆக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், 2025ல் 97.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதனை மேலும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாடங்களைப் புரிந்துகொள்ளத் தடுமாறும், 'மெல்லக் கற்கும் மாணவர்களை' கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை, தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், என்றார்.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

போட்டி தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்தது என்.டி.ஏ.,

  kalvi_L_251224121608000000

பொறியியல், மருத்துவம் மற்றும் மத்திய பல்கலைகளின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில், கடந்த ஆண்டு ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது என பல சர்ச்சைகள் எழுந்தன.

தேர்வில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அப்போது குழு அமைக்கப்பட்டது. அவர்கள் விரிவாக ஆய்வு நடத்தி பரிந்துரைகளை சமர்ப்பித்தனர். அதை படிப்படியாக தேசிய தேர்வு முகமை செயல்படுத்தி வருகிறது.

இனி, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நிகழ்நேர புகைப்பட பதிவு, தேர்வின் போது, 'டிஜிட்டல்' வாயிலாக முக அடையாளத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்த உள்ளது.

அடுத்த மாதம் ஜே.இ.இ., எனப்படும் ஐ.ஐ.டி., மற்றும் நாட்டின் முக்கிய பல்கலைகளுக்கான முதன்மை நுழைவுத் தேர்வில் இதை அறிமுகப்படுத்த உள்ளனர்.

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாடு அரசின் கிராமம் தோறும் புத்தொழில் திட்டம்: ரூ. 1 லட்சம் மானியம்

 TN%20CM

தமிழ்நாடு அரசின் கிராமம் தோறும் புத்தொழில் திட்டம்: ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் கீழ் இயங்கும் StartupTN (தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்), கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தவும், அங்குள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.

திட்டத்தின் பெயர்: கிராமம் தோறும் புத்தொழில் திட்டம்

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் புத்தொழில் (Startup) நிறுவனங்கள் உருவாவதற்கான சூழலை வலுப்படுத்துதல்.

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தேவையான மூலதனம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.

யார் விண்ணப்பிக்கலாம்?

கிராமப்புறங்களில் புதிதாக புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் அல்லது தற்போது தொடங்கியுள்ள தொழில்முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

கிடைக்கும் முக்கிய உதவிகள்:

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு இரண்டு வகையான ஆதரவுகள் வழங்கப்படும்:

நிதி உதவி (மானிய நிதியாக): தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியம் (Grant Fund) வழங்கப்படும்.

தொழில் வழிகாட்டுதல்: வெறும் நிதி உதவி மட்டுமின்றி, தொழிலில் நிலையான வளர்ச்சி அடையத் தேவையான நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் (Mentorship) மற்றும் சிறப்புப் பயிற்சிகள் (Training) வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கும் விண்ணப்பிக்கவும்:

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு அணுக வேண்டிய இணையதளம்: https://gtp.startuptn.in/

🔻🔻🔻