2026 Government Holidays Tamilnadu

 


SMC Meeting - 05.12.2025 நடைபெறுதல் - கூட்டுப்பொருள் - SPD Proceedings

 டிசம்பர் - 2025 மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெறுதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - Dec 2025 SMC Meeting - SPD Proceedings - Pdf

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு TET தகுதித்தேர்வில் இருந்து விலக்கு

 

தமிழகத்தில் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளித்ததற்கு முதல்வர், அமைச்சருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ள னர்.

இதுதொடர்பாக தமிழ் நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக் த் குநர் சங்க மாநில செய லாளர் இளங்கோ வெளி யிட்டுள்ள அறிக்கையில் த் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு தாள் 1 எழுத வேண்டும் என கடந்த 19ம் தேதி அறிவிப்பு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், பின்னர் அதனை ரத்து செய்தது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழக அறிவிப்பின்படி 

பாட ஆசிரியர்களுக்கு மட்டும் தான் தகுதித்தேர்வு உண்டு உடற்கல்வி பாடமானது வ் கட்டாய கல்வி உரிமை ன் சட்டத்தின் கீழ் வாராது. மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்ற பாட ஆசிரியராக செல்வதற்கு வேண்டுமானால், தகுதித்தேர்வு எழுத சொல்லலாம். 





PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY PUBLISHED

 IMG_20251127_204531


2025 ஆம் ஆண்டிற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை -1 1996 காலிப் பணியிடங்கள் நேரடி நியமன அறிவிக்கை ( Notification ) எண் .02.2025 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 10.07.2025 அன்று வெளியிடப்பட்டது . அறிவிக்கையின்படி 12.10.2025 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது . இதனைத் தொடர்ந்து அறிவிக்கையின்படி இறுதி விடைக்குறிப்பு , தேர்வு முடிவுகள் மற்றும் 1 : 1.25 விகிதாச்சாரப்படி மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் , சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்களுக்கான வழிமுறைகள் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி ஆகியவை சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து ( i ) அசல் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களுடன் ( ii ) அதனுடைய Self Attested Copies , ( iii ) ஆளறிச் சான்றிதழ் , ( iv ) சுயவிவரப் படிவம் மற்றும் ( v ) Candidate Declaration ஆகியவற்றினை இரு நகல்களில் ( Two Copies ) சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் , அடுத்தக்கட்ட பணித் தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை trbgrievances@tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது . கோரிக்கை மனுக்கள் பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது .

PG TRB - LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION AND FINAL ANSWER KEY - Download here

SSLC Nominal Roll தயாரிக்க 05.12.2025 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 SSLC Nominal Roll தயாரிக்க 05.12.2025 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!






Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - ( Set - 9 ) Lesson Plan

 Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026


Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here


Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 2 - ( Set - 9 ) Lesson Plan - T/M - Download here

புதிய வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 மாநில கல்விக் கொள்கை அடிப்​படையி​லான புதிய வரைவு பாடத்திட்​டம் டிசம்​பரில் தயா​ராகும் என பள்​ளிக்​கல்​வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.


தமிழ்​நாடு மாநிலக் கல்விக் கொள்​கை 2025-ன்​படி, தற்​போதைய பாடத்​திட்​டங்​களை மாற்​றியமைத்து புதிய பாடத்​திட்​டங்​களை உரு​வாக்க, அமைச்சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் உட்பட 13 பேர் உள்​ளனர்.


அதே​போல, பள்​ளிக்கல்விக்கு புதிய கலைத்​திட்​டத்தை வடிவ​மைக்க சுற்​றுச்​சூழல் விஞ்​ஞானி சுல்​தான் அகமது இஸ்​மா​யில் தலை​மை​யில் பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில், பஞ்​சாப் மொஹாலி இந்​திய அறி​வியல் கல்​வி, ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன், வரலாறு மற்​றும் தொல்​லியல் வல்​லுநர் கா.​ராஜன் உட்பட 14 பேர் உள்​ளனர்


இந்நிலையில், உயர்நிலைக் குழு, கலைத்திட்ட வடிவமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் தலைமை வகித்தார். உயர்நிலைக் குழு துணைத் தலைவரான பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் மற்றும் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இஸ்ரோ தலைவர் நாராயணன், மாநில திட்டக்குழு உறுப்பினரும், மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் - செயலருமான இரா.சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் லதா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், இந்திய கணித அறிவியல் நிறுவன முன்னாள் பேராசிரியர் இரா.ராமானுஜம், அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக மூலக்கூறு வரைகலை, கணக்கீட்டு வளமைய இயக்குநர் விஞ்ஞானி ஏ.இரா.அழகியசிங்கம், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணைய வழி யாக பங்கேற்றனர்..


கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: மாணவர்களுக்கு தியரியைவிட செய்முறை பாடம் அதிகம் இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. மாணவர்கள் வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்யாமல், நன்கு புரிந்து படித்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதிப்பீடு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.



புதிய பாடத்திட்டத்தை ஒன்றாக செயல்படுத்தாமல், முதலில் 1, 2, 3-ம் வகுப்புகள், அடுத்து 4 முதல் 10, பின்னர் பிளஸ் 1, பிளஸ் 2 என படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சி, ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதற்கான வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும். இவ்வாறு கூறினார்.



இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறும்போது, “புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. மாணவர்கள் படிப்பில் மட்டுன்றி கலை, விளையாட்டு, வாழ்வியல் திறன், தகவல் தொடர்புத் திறன், விருந்தோம்பல், சகிப்புத்தன்மை என அனைத்திலும் சிறந்து விளங்கும் கல்வி வேண்டும்” என்றார்.

12th Maths - 2019 To 2025 - All Public Creative Question Answer ( Updated Upto June 2025 )

 Yellow%20Learning%20Materials%20For%20Kids%20Facebook%20Cover%20Photo_20250217_200944_0000

12th Maths - 2019 To 2025 - All Public Creative Question Answer ( Updated Upto June 2025 ) - Mr S.Puratchivendhan - Download here

TNTET Paper 1 & 2-2025 Book Proof & Doubted Questions

 IMG_20251127_083016

TNTET Paper 1 & 2-2025 Book Proof & Doubted Questions - Download here

Paper II 
Question 39 - Download here
Question 77 - Download here

ஆசிரியர் நண்பர்களே, வணக்கம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள PDF-கள், தற்போது TRB வெளியிட்டுள்ள பேப்பர்–2 ஆசிரியர் தகுதி தேர்வு Objection Tracker-க்கு பயன்படுத்துவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டவை.

இந்த PDF-களை அனைத்து ஆசிரியர் குழுக்களிலும் பகிர வேண்டுகிறேன்.
தற்போது 79, 80, 81 மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள், இந்த Objection Tracker மூலம் 82, 83 மதிப்பெண்களுக்கு உயர வாய்ப்பு உள்ளது.

அவர்களுக்கு இது ஒரு முக்கியமான உதவியாக இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, அனைவரின் முன்னேற்றத்திற்கும் துணை நிற்போம்.

நன்றி.

TNTET 2025 - தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யீடு?

 தமிழகத்​தில் 4.24 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் எழு​தி​யுள்ள 'டெட்' தேர்​வுக்​கான ‘கீ ஆன்​ஸர்’ டிஆர்பி இணை​யதளத்தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்​து, தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தி்ன்​படி பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களும் பட்​ட​தாரி ஆசிரியர்​களும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். இதைத்தொடர்நது டெட் தேர்வு கடந்த நவ.15 மற்​றும் 16-ம் தேதி நடந்தது.


இந்​நிலை​யில் இந்தத் தேர்​வுக்கான உத்​தேச விடைகளை (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரி​யம் இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வாரி​ய தலை​வர் ஜெயந்தி வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு:


டெட் தேர்​வு​களுக்​கான உத்​தேச விடைக்​குறிப்​பு​கள் வினாக்​களு​டன் https://trb1.ucanapply.com என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இவை மீது ஆட்​சேபணை​கள் தெரிவிக்க விரும்​புவோர் டிச.3 மாலை 5.30 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவுசெய்ய வேண்​டும். அங்​கீகரிக்​கப்​பட்ட பாடப்​புத்​தகங்​கள் (standard Text Books) ஆதா​ரங்​கள் மட்​டுமே சான்று ஆவண​மாக ஏற்​றுக்​கொள்​ளப்​படும். கைடு​கள் ஏற்​கப்​ப​டாது. மேலும், பாட​வல்​லுநர்​கள் முடிவே இறு​தி​யானது. இவ்​வாறு கூறி​யுள்ளார்.


டெட் தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தால் விரை​வில் தேர்வு முடிவு​களும் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கிடையே, டெட் தேர்​வுக்​கான தேர்ச்சி மதிப்​பெண் ஒடிசா உள்​ளிட்ட இதர மாநிலங்​களில் இருப்​ப​தைப் போல் 50 சதவீத​மாக குறைக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.


இதுதொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்​கங்களும் அமைச்சர் அன்​பில் மகேஸிடம் வலி​யுறுத்​தியுள்ளன. இதை ஏற்று தேர்ச்சி மதிப்​பெண் குறைக்​கும்பட்​சத்​தில் முதலில் அது தொடர்​பான அரசாணை வெளி​யிடப்​படும். அதைத்​தொடர்ந்து தேர்வு முடிவு​கள் வெளி​யாகும்.


ஆந்​தி​ரா, தெலங்​கானா மாநிலங்​களில் டெட் தேர்ச்சி மதிப்​பெண் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 40 சதவீத​மாக​வும் உள்​ளது. ஹரி​யா​னா​விலும் ஒடி​சாவிலும் அனைத்து பிரி​வினருக்​கும் 50 சதவீதமாக உள்ளது.


தமிழகத்​தில் பொது பிரிவுக்கு 60, பிசி, எம்​பிசி, எஸ்சி வகுப்பினருக்கு 55, எஸ்டி (இந்த ஆண்டு மட்​டும்) 40 சதவீதம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தர விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும்.

இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்தப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பொறுப்பு ஆசிரியர் பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும், படத்தின் அடிப்படை பின்னணியையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!

 IMG_20251126_173754


TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!

Revised TRUST 2025 Instructions-.pdf

👇👇👇👇

Download here

Gratuity Rules 2025: விதிகளில் மாற்றம், இனி எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்? கணக்கீடு இதோ

 Gratuity Rules 2025: பணியில் இருக்கும் அனைவருக்கும் மாத சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஓய்வூதியம், கிராஜுவிட்டி போன்றவையும் முக்கியமாகும். பணியில் இருக்கும்போது பொதுவாக இதன் முக்கியத்துவம் புரிவதில்லை. பணியில் இருந்து ஓய்வுபெறும்போதுதான் இதன் அவசியமும், முக்கியத்துவமும் நமக்கு விளங்குகிறது. 


Gratuity Rules: பணிக்கொடை விதிகளில் மாற்றம்

இந்தியாவில் பணிக்கொடை விதிமுறைகள் 2025 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இவற்றை பற்றி இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.


நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தப் புதிய விதிகளின் காரணமாக பணிக்கொடை இப்போது முன் எப்போதையும் விட நேரடியானதாக, விரைவானதாக, எளிதானதாக மேம்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட தொழில்கள், கிக் தொழிலாளர்கள், ஃபிக்ஸ்ட் டர்ம் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரது நிதி நிலையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.


பணிக்கொடை என்றால் என்ன?

பணிக்கொடை என்பது ஊழியரின் நீண்டகால வேலை மற்றும் விசுவாசத்திற்காக அவரது நிறுவனம் நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு கொடுக்கும் ஒரு தொகையாகும். ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​ராஜினாமா செய்யும்போது அல்லது தனது சேவைக் காலத்தை முடிக்கும்போது இந்த மொத்தத் தொகை அவருக்கு அளிக்கப்படுகின்றது. புதிய தொழிலாளர் குறியீடுகள் அமலுக்கு வந்தது முதல், பணிக்கொடை இப்போது சமூகப் பாதுகாப்புக் குறியீட்டின் கீழ் வருகிறது. இது முழு செயல்முறையையும் எளிதாக்கியுள்ளது. ஊழியர் வேலை மாறும்போது அல்லது ஓய்வு பெறும்போது அவருக்கு நிதி பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்வதே இதன் குறிக்கோளாகும்.


முன்னர், பணிக்கொடையை பெற குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை தேவைப்பட்டது. 2025 விதிகள் இந்த அம்சத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளன. ஃபிக்ஸ்ட் டர்ம் ஊழியர்கள் இப்போது ஒரு வருட சேவைக்குப் பிறகு பணிக்கொடைக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இது ஒப்பந்த தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள், ஸ்டார்ட் அப் ஊழியர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.


Gratuity Calculation: பணிக்கொடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


பணிக்கொடையை கணக்கிடுவதற்கான சூத்திரம் அப்படியே உள்ளது. 



பணிக்கொடை கணக்கீட்டு சூத்திரம் = (அடிப்படை + டிஏ) × (15/26) × மொத்த சேவை ஆண்டுகள். 



இங்கே, 15/26 என்பது வருடத்திற்கு 15 நாட்கள் சம்பளத்தைக் குறிக்கிறது, ஏனெனில் ஒரு மாதம் 26 வேலை நாட்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.


ரூ.25000 சம்பளத்தில் கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்?


ஓரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.25,000 என்றால், அவருக்கு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்?




பணிக்கொடை சூத்திரம் எளிமையானது: (அடிப்படை + DA) × (15/26). இதன் பொருள், ஒரு மாதத்திற்கு 26 வேலை நாட்கள் இருப்பதாகக் கருதி, ஒவ்வொரு முழு வருட சேவைக்கும் நிறுவனம் ஊழியருக்கு 15 நாட்கள் சம்பளத்தை வழங்குகிறது. இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி, ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபரின் பணிக்கொடையை கணக்கிட்டால், அது 



(25000) × (15/26) = ரூ.14,423.



5 ஆண்டுகளுக்கு கிராஜுவிட்டியைக் கணக்கிடுவது எளிது. ரூ.25,000 அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் 1 வருட கிராஜுவிட்டி தோராயமாக ரூ.14,423 ஆகும். 5 ஆண்டுகளுக்கு, இதை 5 ஆல் பெருக்கவும். கிராஜுவிட்டி தொகை தோராயமாக ரூ.72,115 ஆக இருக்கும். 7, 10 அல்லது 12 வருட சேவைக்கும் இதே முறை பொருந்தும்.



இந்தக் கணக்கீட்டில் சில காரணிகள் ஊழியர்களுக்கு சாதகமாக உள்ளன. உதாரணமாக, ஊழியர் ஒரு வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் வேலை செய்தால், அது ஒரு முழு ஆண்டாகக் கணக்கிடப்படும். இருப்பினும், ஒருவர் ஆறு மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்தால், அது ஒரு வருடமாகக் கணக்கிடப்படாது. குறுகிய கால வேலைகளுக்கும் ஊழியர்கள் ஒரு விகிதாசார கிராஜுவிட்டியைப் பெறுவார்கள். அதாவது ஒரு ஊழியர் திட்டமிட்டதை விட முன்னதாகவே ஒரு வேலையை விட்டு வெளியேறினாலும், அவர் கிராஜுவிட்டி சலுகைகளை இழக்க மாட்டார்.

வரிச் சலுகைகளும் முன்பை விட சிறப்பாக உள்ளன. தனியார் துறை ஊழியர்களுக்கு, ரூ.20 லட்சம் வரையிலான கிராஜுவிட்டிக்கு இப்போது முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு, இந்த வரம்பு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய காலக்கெடு மற்றும் வரிச் சலுகைகள்


புதிய கிராஜுவிட்டி செலுத்தும் விதி ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக வந்துள்ளது. ஏனெனில் நிறுவனங்கள் இப்போது கிராஜுவிட்டி தொகையை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். முன்பு, தாமதங்கள் பெரும்பாலும் மாதங்கள் வரை நீடித்தன. ஆனால் இப்போது, தாமதமானால், நிறுவனங்கள் 10% வருடாந்திர வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அதாவது பணிக்கொடை கிடைக்க தாமதம் ஏற்பட்டால், அது ஊழியர்களுக்கு அதிக வரருவாயை அளிக்கும்.





TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு TRB வெளியீடு - Key Answer Direct Link

 IMG_20251125_214851_wm


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .03 / 2025 , நாள் 11.08.2025 . ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 115.11.2025 அன்றும் தாள் II 16.11.2025 அன்றும் நடைபெற்றது. 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I -ல் 92412 தேர்வர்கள் தேர்வெழுதினர் . தாள் II -ல் 331923 தேர்வர்கள் தேர்வு எழுதினர் . தாள் I மற்றும் தாள் II -ற்கான உத்தேச விடைக்குறிப்பு மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபணைகள் தெரிவிக்க Objection Tracker URL 
https://trb1.ucanapply.com ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

உத்தேச விடைக்குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.30 மணி வரை உரிய ஆட்சேபணையினை பதிவு செய்திடல் வேண்டும்.

 ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக்குறிப்புகளுக்கான சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் . அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ( Standard Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு TRB வெளியீடு - Key Answer Direct Link

Download here

TNTET 2025 - Paper I & II - TRB Official Key Answer Published

 IMG_20251125_224838


TNTET 2025 - Paper I & II - TRB Official Key Answer 

TNTET 2025 - Paper I - TRB Official Key Answer 

 👉Question With Answer Key - Download here

TNTET 2025 - Paper II - TRB Official Key Answer 

 👉Maths & Science - Question With Answer Key -  Download here

👉Social - Question With Answer Key -   Download here