viksit bharat buildathon 2025 - Team Registration செய்ய தேவையான விவரங்கள்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

viksit bharat buildathon 2025 - Team Registration செய்ய தேவையான விவரங்கள்

▪️team name

▪️e-mail id

▪️5 students

👉Name

👉disability details

👉age

👉class

👉gender

👉PEN NO (UDISE + portal-லில் இருக்கும்)

இந்த விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு குழு அமைக்கவும்.

ஒரு குழுவில் 5 - 7 மாணவர்கள் இருக்கலாம்.

ஒரு பள்ளியில் ஒன்றிற்கு மேற்பட்ட குழுக்களை பதிவு செய்யலாம்...

https://vbb.mic.gov.in/

💁‍♂️VIKSIT BHARAT BUILDATHON 2025

 Registration and login process

💁‍♂️6-12 ஆம் வரை உள்ள பள்ளி மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை 

💁‍♂️மற்றும்  படைப்பாற்றலை புகைப்படமாகவோ அல்லது வீடியோ வடிவிலோ பதிவு செய்ய வேண்டும்.

👇👇👇

https://youtu.be/jpFoOqHA35E

💁‍♂️பதிவு செய்வதற்கான இணையதள முகவரி

https://vbb.mic.gov.in

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பருவ மழையை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251005_170727

பருவ மழையை முன்னிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!

DSE - Safety Measures During North East Monsoon - Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதல்வர் திறனறித் தேர்வு கையேடு: அமைச்சர் வெளியிட்டார்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதல்வர் திறனறித் தேர்வு கையேடு: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்

1. தமிழக அரசு சார்பில் பிளஸ் 1 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நோக்கில் முதல்வர் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

2. இந்தத் தேர்வுக்கான வழிகாட்டி கையேடுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

3. இந்தத் தேர்வு 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

4. தேர்வு நோக்கம்: அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பது.

5. இந்தத் தேர்வில் மாநில பாடத்திட்டம் (வகுப்பு 9 மற்றும் 10) அடிப்படையிலான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் இடம்பெறும்.

6. தேர்வு இரு தாள்களாக நடைபெறும்.

7. மொத்தமாக 1,000 மாணவர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவிகள்) தேர்ந்தெடுக்கப்படுவர்.

8. தேர்வு வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வீதம், 10 மாதங்களுக்கு ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும்.

9. உதவித்தொகை இளநிலைப் பட்டப்படிப்பு வரை தொடரும்.

10. அரிமா சங்கம் (வேளச்சேரி, சென்னை) இந்தத் தேர்வுக்கான வழிகாட்டி கையேடுகளை தயாரித்துள்ளது.

11. கையேடுகள் உருவாக்கத்தில் 54 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

12. வெளியீட்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு கையேடுகளை வெளியிட்டார்.

13. 2,500 பிரதிகள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

14. மேலும் கூடுதல் பிரதிகளையும் அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

15. இந்த வழிகாட்டி கையேடுகள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற உதவும் என்று சங்கத்தின் கல்விசேவை பிரிவு தலைவர் பி.செல்வகுமார் தெரிவித்தார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் தரநிலை அறிக்​கையை பயன்​படுத்த வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின்​கீழ் நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் தரநிலை அறிக்கை அச்​சிட்டு அனைத்து மாவட்​டங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அரசுப் பள்​ளி​களுக்கு பிரித்து வழங்க வேண்​டும். இந்த அறிக்​கையை எவ்​வாறு பயன்​படுத்த வேண்​டும் என்​பது குறித்து வழி​காட்​டு​தல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதை பின்​பற்றி செயல்​படு​மாறு தலைமை ஆசிரியர்​களை அறி​வுறுத்த வேண்​டும்.

இதுத​விர, தரநிலை அறிக்​கை​யில் மாணவர்​களின் அடிப்​படை விவரங்​களை நிரப்​பி, அவரது பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை ஒட்ட வேண்​டும். ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மொத்த வேலை நாட்​கள், மாணவர் பள்​ளிக்கு வந்த நாட்​களின் எண்​ணிக்​கையை நிரப்ப வேண்​டும். திறன் அடிப்​படையி​லான பகு​தி​கள், மொழித் திறன்​கள், கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் திறன்​களில் குழந்​தை​யின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்​டும்.

இதே​போல, கல்வி இணைச் செயல்​பாடு​கள், விளை​யாட்டு பங்​கேற்​பு, குழுப்​பணி, படைப்​பாற்​றல் போன்ற பகு​தி​களில் குழந்​தை​யின் ஈடு​பாட்டை கருத்​தில் கொண்​டு, அதற்​கான தரநிலையை பதிவுசெய்ய வேண்​டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்​பு, பெற்​றோரின் கருத்​துப் பதிவு, கையொப்​பம் போன்ற பகு​தி​களும் இடம்​பெற்​றுள்​ளன. மதிப்​பெண் அட்​டையை பெற்​றதும் பெற்​றோர் தங்​கள் கருத்​துகளை எழுத ஊக்​கமளிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அக்டோபர் 5, சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

யுனெஸ்கோ அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.

ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 % டிஏ உயர்வு வழங்க கோரிக்கை

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 % டிஏ உயர்வு வழங்க கோரிக்கை

IMG-20251005-WA0001

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB) இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய CEO உத்தரவு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB)   இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய CEO உத்தரவு

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.

இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) அவர்களின் வழிகாட்டலில்படி பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் Viksit Bharat Buildathon (VBB)   இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.

நாளை (03.10.2025) மதியம் 2.00 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்யும்படி தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு வழிகாட்டி இந்த பணியினை உடனடியாக முடிக்க உத்தரவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மதியம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர் மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

ஆகவே இதில் தனிக்கவனம் செலுத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் நாளை தகவல் தெரிவித்து இப்பணி முழுமையாக முடிக்க உரிய வழியில் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

திருப்பூர்.

Link for registration 

https://vbb.mic.gov.in/

>>> Viksit Bharat Buildathon Registration Process Video...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எண்ணும் எழுத்தும் பயிற்சி ; ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித் துறை அறிவுறுத்தல்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

எண்ணும் எழுத்தும் பயிற்சி ; ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித் துறை அறிவுறுத்தல்

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்; தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க கல்வித்துறை அறிவுறுத்தல்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; 

தமிழகத்தில் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசாணையின்படி இந்தத் திட்டம் 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2025-26) 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2 ஆம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஏற்றவாறு குழுக்களாகப் பிரிந்து கருத்தாளர்கள், குழுக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பயிற்சி நாள்களை முடிவு செய்து, மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக் கூடாது. பயிற்சி நடைபெறும் நாளில் ஆசிரியர் இல்லாத நிலையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்றுப் பணியில் ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். ஒன்றிய அளவிலான இந்த பயிற்சியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும்.. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வி - பொதுப்பணி /அமைச்சுப்பணி - Mutual Transfer / Promotion - Director Proceedings

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி /அமைச்சுப்பணி - இணை இயக்குநர் / மாவட்டக் கல்வி அலுவ்லரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் - விருப்ப மாறுதல் / மனமொத்த மாறுதல் (Service completed one year in Present Post / Present Station) மற்றும் பதவி உயர்வு வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

Click Here to Download - Non Teaching Willing Transfer and Promotion Counselling - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NHIS - பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் - தமிழ்நாடு அரசின் கடிதம்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தீர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கடிதம்!

Click Here to Download - Letter No.5259-9 - NHIS Claim Clarification - Govt Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளா் பணியிடங்கள்: அக்.6-இல் கலந்தாய்வு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி சாா்பில் 2024-ஆம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2ஏ (நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்கள்) தோ்வுகள் மூலம் தோ்ச்சி பெற்று பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அக்.6-ஆம் தேதி (திங்கள்கிழமை) அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.

எனவே, மேற்கண்ட உதவியாளா் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவா்கள் தங்களுடைய தெரிவுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்.6-ஆம் தேதி கலந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வோா் டிஎன்பிஎஸ்சி தெரிவுக் கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகலை சரிபாா்ப்புக்கு எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் உதவியாளா் பணியிடத்துக்கு மொத்தம் 160 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளின் சிரமத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு திட்டம்?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1. நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் சிரம நிலை 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு இணையாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2. பயிற்சி மையங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூற்றுப்படி, தேர்வுகளின் சிரமம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

3. இது தொடர்பாக, அந்த வட்டாரங்கள் கூறியதாவது: "12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இருப்பினும், சில பெற்றோர்கள் மற்றும் பயிற்சி மையங்களின் ஆசிரியர்கள் இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் மாணவர்கள் பயிற்சி மையங்களையே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது."

4. பயிற்சி மையங்கள் தொடர்பான குழுவின் கருத்தின் அடிப்படையில், நுழைவுத் தேர்வுகளின் சிரமம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

5. பள்ளிக் கல்வி முறையில் உள்ள தற்போதைய குறைபாடுகளை இந்தக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் பயிற்சி மையங்களைத் தேடத் தொடங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

6. மாணவர் தற்கொலைகளின் அதிகரிப்பு, பயிற்சி மையங்களில் அதிக கட்டணம், தீ விபத்துகள் மற்றும் பிற அடிப்படை வசதி பிரச்சினைகள் நாட்டில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.

இந்த நிலையில், உயர்கல்வி செயலாளர் வினீத் ஜோஷி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்காக மாணவர்கள் பயிற்சி மையங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கப் போகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வேளாண் இளங்கலை படிப்புகளுக்கு மத்திய அரசு புதிய நுழைவுத் தேர்வு அறிவிப்பு!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1. மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான 20% இடங்கள் இப்போது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

2. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தொடர்பான இளங்கலைப் படிப்புகள் உள்ளன.

3. இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் விவசாயம் தொடர்பான படிப்புகளுக்கு மொத்தம் 6,921 இடங்கள் உள்ளன. இவை ஆலோசனை மூலம் நிரப்பப்படுகின்றன.

4. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளுக்கான 20% இடங்கள் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5. சேர, 12 ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மை போன்ற அறிவியல் தொடர்பான பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.

6. ஒருவர் விரும்பும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் நுழைவுத் தேர்வுகளை அடையாளம் கண்டு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

7. விண்ணப்பத்தை உரிய தேதிக்குள் சமர்ப்பித்த பிறகு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உட்பட இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்த பல்கலைக்கழகங்களில் வேளாண்மை மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் பல்வேறு இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு பயன்படுத்தப்படுகிறது.

8. மற்ற பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் கல்வித் திறனை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கைக்கான தேர்வு செயல்முறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து.

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து.

7–15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து; 6 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும் - ஆதார் அமைப்பு.

கட்டணங்களுக்கான தள்ளுபடி கடந்த அக்-1 முதல் அமல்; இந்த நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும்.