நாள் ஒன்றுக்கு ரூ.800... கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்திலேயே 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.45 கோடியே 21 லட்சம் மதிப்பில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிற்சிகள்: மேசன், பார்பெண்டர், மின் பணியாளர், தச்சர், பிளம்பர், வெல்டர், கொல்லர், கண்ணாடி அறுத்தல், ஏ.சி மெக்கானிக், வர்ணம் பூசுதல், சலவைக்கல் ஒட்டுதல் மற்றும் கூலியாள் போன்ற 12 தொழில் இனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,300 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி மையத்தில்

(Government ITI) வருகிற 18 ஆம் தேதி தொடங்கி வாரந்தோறும் ஒரு அணிக்கு 20 தொழிலாளர்கள் வீதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்குபெறும் தொழிலாளர்களுக்கு பயிற்சி சான்றிதழும் மற்றும் கட்டணமில்லாமல் உணவும் வழங்கப்படும்.

மேலும், பயிற்சி முடிவுற்றதும் நாள் ஒன்றுக்கு ரூ.800/- வீதம் 7 நாட்களுக்கு உதவித் தொகையாக ரூ.5,600/- தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.  எனவே, பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி, அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தெரிவித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC, SSC போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க ஆட்கள் தேவை... சென்னை பலக்லைக்கழகம்

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னைப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரங்கள், விண்ணப்பிக்க கடைசி தேதி, விண்ணப்பிக்க வேண்டிய முகவரி,சம்பள விவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ /மாணவிகள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வசதியாக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அந்தந்த  கல்லூரிகளின் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த போட்டித்தேர்வுகளுக்கான (TNPSC, TNSURB, SSC,RRB,etc..) வகுப்புகளைக் கையாள திறமையும், அனுபவமும் மிக்க பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ரூ 400 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்புடன் 30/09/2025 க்குள் அலுவலக வேலைநாட்களில் சென்னை-32. கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளிக்கு முன் அறிவிக்க அரசு முடிவு - எவ்வளவு தெரியுமா?

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தீபாவளிக்கு முன்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மனதை குளிர் விக்கும் விதமாக இரண்டு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 1.2 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தில் (DR) 3% உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

அறிவிப்பு 1 - அகவிலைப்படி உயர்வு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கடந்த வாரம் பல ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கியதுடன், வரி விதிப்புப் பிரிவுகளையும் முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. செப்டம்பர் 22, 2025 முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.

இந்த அறிவிப்பு மூலம் பல பொருட்கள் ஜீரோ ஜிஎஸ்டி வரிக்கு கீழ் வந்துள்ளன.அதாவது முன்பு 5% - 12% வரிகள் விதிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பல வருட கோரிக்கையை பாஜக நிறைவேற்றி உள்ளது. தீபாவளி பரிசாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியாக உள்ளது.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வெளியிடப்படும் இந்த அறிவிப்பு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகலாம். இந்த உயர்விற்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 55% லிருந்து 58% ஆக உயரும். இந்த அதிகரிப்பு ஜூலை 2025 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும், மேலும் அக்டோபர் மாத ஊதியத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகை வழங்கப்படும்.

மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை திருத்துகிறது. முதல் திருத்தம் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஜனவரி-ஜூன் காலத்திற்கும், இரண்டாவது திருத்தம் தீபாவளியையொட்டி ஜூலை-டிசம்பர் காலத்திற்கும் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20-21 தேதிகளில் வருவதால், அகவிலைப்படி உயர்வை தீபாவளி பரிசாக அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு, மோடி அரசு அக்டோபர் 16 அன்று, தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி கணக்கீடு எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் பார்க்கலாம்.

அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?

7வது ஊதியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதிகளின் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. இதில், தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) 12 மாத சராசரி கணக்கில் கொள்ளப்படுகிறது. ஜூலை 2024 முதல் ஜூன் 2025 வரையிலான சராசரி 143.6 ஆக இருந்தது. இதன் அடிப்படையில், அகவிலைப்படி 58% ஆக வருகிறது. அதாவது, ஜூலை-டிசம்பர் 2025 க்கு, அகவிலைப்படி 55% லிருந்து 58% ஆக உயரும்.

ஊதிய மற்றும் ஓய்வூதிய உதாரணங்கள் மூலம், ஊழியர்கள் மாதந்தோறும் எவ்வளவு கூடுதலாக பெறுவார்கள் என்பதை அறியலாம். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ₹18,000 (7வது CPC படி குறைந்தபட்ச அடிப்படை) எனில், பழைய அகவிலைப்படியின்படி (55%) ₹9,900 கிடைத்தது. புதிய அகவிலைப்படியின்படி (58%) இது ₹10,440 ஆக இருக்கும். அதாவது, மாதத்திற்கு சுமார் ₹540 கூடுதலாக கிடைக்கும்.

புதிய சம்பளம் எவ்வளவு?

மறுபுறம், ஒருவரின் அடிப்படை ஓய்வூதியம் ₹20,000 ஆக இருந்தால், சுமார் ₹600 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு முழுமையாக CPI-IW தரவுகளின் அடிப்படையிலானது. இந்த அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் நடைபெறும் கடைசி உயர்வு என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8வது ஊதியக் குழு செயல்முறையை அரசு எவ்வாறு விரைவுபடுத்துகிறது என்பதில் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது.

அறிவிப்பு 2 - மகளிர் உரிமை தொகை:

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் விண்ணப்பித்தவர்களுக்கான முதல் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன. தீபாவளி பரிசாக இவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

மகளிர் உரிமை தொகை

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடங்கி 45 நாட்கள் நிறைவடைகின்றன. எனவே, முதல் நாளில் அல்லது முகாம் தொடங்கிய முதல் வாரத்தில் விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 28 முதல் பதில்களைப் பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கான பதில்கள் அனுப்பப்படவில்லை. எனவே இவர்கள் பெரும்பாலும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக பதிலகளாய் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20250919_181242

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - SSLC NR Preparation - Download here

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய முன்மொழிவு அனுப்புதல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்!!!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250919_223835

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய முன்மொழிவு அனுப்புதல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள் - 17.09.25

CPS Final Settlement Letter.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஒவ்வொரு மாதமும், 'பியூச்சர் ரெடி' என்ற தலைப்பில் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு!!!

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250919-WA0018

அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அ ரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி சார்ந்த எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், 'பியூச்சர் ரெடி' என்ற தலைப்பில் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சார்பில், மாநில கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வாயிலாக வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அந்த வினாத்தாள்கள், மாணவர்கள் சுயமாக சிந்தித்து, விடையளிக்கும் வகையில் அமைய உள்ளன.

இந்த தேர்வுகளை மாதந்தோறும் நடத்தி, மாணவர்களின் சிந்தனை மேம்பாடு மற்றும் கல்வியின் மீதான ஆர்வம் மற்றும் புரிதலை கவனித்து, ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம்: மாணவர்களுக்கு யுஜிசி அலர்ட்

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377058

திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் திறந்த நிலை மற்றும் இணையவழியில் பட்டம், பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) அங்கீகாரம் பெறுவது அவசியமாகும். எனினும், பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் யுஜிசியின் முறையான அங்கீகாரமின்றி படிப்புகளை வழங்கி வருகின்றன. இதனால் அவற்றில் சேரும் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிக்கல்கள் எழுகின்றன. இதையடுத்து, திறந்தநிலை மற்றும் இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலை மானியக் குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், திட்டமிடல், ஓட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு, இயன்முறை சிகிச்சை, கட்டிடக்கலை, சட்டம், வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவ சேவை சார்ந்த படிப்புகள் உட்பட பல்வேறு படிப்புகள் திறந்த நிலை மற்றும் இணைய வழியில் பயிற்றுவிக்க அனுமதி கிடையாது.

எனவே, அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக் கழகம், ராஜஸ்தான் சுரேஷ் கியான் விகார் பல்கலைகழகம் ஆகியவற்றில் 2024– 25, 2025– 26 கல்வியாண்டுகளில் இணைய வழி கல்வி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மாணவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கான கட்டுப்பாடு தேவையற்றது: உயர் நீதிமன்றம் கருத்து

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Chennai_High_Court

பள்ளிகளில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாடு தேவையற்றது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சிவகிரி எஸ்ஆர்பி நடுநிலைப் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவில், ஒரு பள்ளியில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்று உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கு அரசு ஒரு வரம்பு வைத்திருப்பது ஆச்சரியமாகவும், கவலையாகவும் உள்ளது.

சோம்பேறித்தனமாக இருக்கும் குழந்தைகள் உருளை சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களின் உடல் நிலை மட்டும் அல்ல, மனநிலையையும் பாதிக்க செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு நீரிழிவு, மனச்சோர்வு போன்றவை அதிகரித்து வருகின்றன. சுறுசுறுப்பான மனதைக் கொண்டிருக்க சுறுசுறுப்பான உடல் தேவை.

பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி உடற்கல்விக்கு ஒரு நாளைக்கு 2 பாடப் பிரிவு வேண்டும். அப்படியிருக்கும் போது அரசின் இந்தக் கட்டுப்பாடு பொறுத்தமற்றதாக தெரிகிறது. எனவே, உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் தொடர்பான கல்வித் துறையின் முடிவு மிகவும் விசித்திரமானது. உடற்கல்வி இல்லாத ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் தொடர்பான அரசின் கொள்கை மற்றும் கட்டுப்பாடுக்கான காரணம் குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சித் திட்டம்: மாணவர் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377051

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது.

அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின்படி மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Now teachers can apply your festival advance in kalanjiam app..

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250920_105316

Now  teachers can apply  your festival advance in kalanjiam app...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தருமபுரி மாவட்டத்தில் பயிற்சியாளர் & கணக்காளர் வேலைவாய்ப்பு

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தருமபுரி மாவட்ட மகளிர் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், பயிற்சியாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அறிவித்துள்ளார்.

 காலியிட விவரங்கள்:பயிற்சியாளர் (Trainer/Manager) – 1 இடம்
  • தகுதி:
    • மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்
    • குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி
    • வயது: 25க்கு மேல்
    • 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் அனுபவம்
    • குறைந்தது 1 ஆண்டு பயிற்சி அளித்த அனுபவம்

கணக்காளர் (Accountant) – 1 இடம்

  • தகுதி:
    • மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்
    • வயது: 25க்கு மேல்
    • கணினியில் Tally, Accounts, AMP software தெரிந்திருக்க வேண்டும்
    • 2–5 ஆண்டுகள் கணக்காளராக அனுபவம்

கடைசி தேதி:செப்டம்பர் 22, 2025

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

📍 முகவரி:
திட்ட இயக்குநர், மகளிர் திட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2வது தளம்
தருமபுரி
எனவே, தகுதியான பெண்கள் இந்த அரிய வேலை வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும்!

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Govt Jobs : கல்வித் தகுதியே இல்லை... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... சமுதாய வள பயிற்றுநர் பணி

 சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விழுப்புரம் மாவட்டம் 2025-26 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) மையத்திற்கு சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளரை தேர்வு செய்திட தகுதியான சுய உதவிக் குழு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் www.Villupuram.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 17.09.2025 முதல் 25.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
சமுதாய வளப்பயிற்றுநர்களுக்கான தகுதிகள் : குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது. சுயஉதவிக் குழுவில் குறைந்தப்பட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது சார்ந்த சுயஉதவிக் குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வள பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். (சமுதாய வளப் பயிற்றுநர் மாதிரி விண்ணப்படிவம் இணைப்பு-1)
பயிற்சி நடைபெறும் போது மட்டும் பயிற்சி நடத்தியதற்கான மதிப்பூதியம்
வழங்கப்படும்.மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படாது.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இணைப்பு மாதிரி படிவம் தொடர்புக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக தொலைபேசி எண். 04146 2237362. உதவி திட்ட அலுவவர் (CB), தொலைபேசி எண். 9442992115 தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.