School Calendar - September 2025

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

large_b



2025 செப்டம்பர் மாதம் - "ஆசிரியர் டைரி"


02.09.2025 - செவ்வாய்க்கிழமை

கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்


05.09.2025 - வெள்ளிக்கிழமை `

  • ஆசிரியர் தினம்`டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
  • `மீலாடி நபி` - அரசு விடுமுறை


06.09.2025 - சனிக்கிழமை

  • ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - BEO அலுவலகம்


08.09.2025 - திங்கள் கிழமை

  • TNTET தாள் I & II விண்ணப்பிக்க கடைசி நாள்


13.09.2025 - சனிக்கிழமை

  • ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - DEO அலுவலகம்


15.09.2025 - திங்கள் கிழமை

  • 6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.
  • Inspire Award - விண்ணப்பிக்க கடைசி நாள் 
  • கா.ந.அண்ணாதுரை முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள்


18.09.2025 - வியாழக்கிழமை

  • 1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.


20.09.2025 - சனிக்கிழமை

  • ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - CEO அலுவலகம்


26.09.2025 - வெள்ளிக்கிழமை

  • முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு


27.09.2025 - சனிக்கிழமை

  • முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.


06.10.2025 - திங்கள் கிழமை

  • இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு


`குறிப்பு` :

இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது



Sep%201



Sep%202


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Kalanjiyam App New Version -1.22.6 Update Now

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250901_063820


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.6

KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.6


* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


* Version 1.22.6


* Updated on 18-11-2025


*Whats New?


👉 Performance Enhancement.


👉 Minor Bug Fixes.


App Update செய்ய Direct link 


👇👇👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6-12ஆம் வகுப்பு; காலாண்டுத் தேர்வு பாட வாரியாக அட்டவணை முதல் செப்டம்பர் மாத விடுமுறை நாட்கள் வரை

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கிறது. விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை என மகிழ்ச்சியுடன் இருந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு மாதமாக அமைகிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்விற்கான அட்டவணை, அரசு விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை ஆகிய விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் 2025-26 கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கியது. தொடர்ந்து, 3 மாதங்கள் முதல் பருவ பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதத்தில் 10-ம் தேதி முதல் தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் எத்தனை நாட்கள் செயல்படும், எந்தந்த நாட்களில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும், அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் தெரிவாக அறிந்துகொள்ளலாம்.

செப்டம்பர் மாதத்தின் மொத்த வேலை நாட்கள்
செப்டம்பர் மாதத்தில் முதல் வாரமே வேலை நாள் ஆகும். செப்டம்பர் 5-ம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை நாள் ஆகும். அந்த தினம் ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதை தவிர அனைத்து சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்கள் ஆகும். இவையில்லாமல் காலாண்டு விடுமுறை நாட்கள் வேற உள்ளது. இவை அனைத்து போக மொத்தம் செப்டம்பர் மாதத்தில் 19 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்./

விடுமுறை நாட்கள் எத்தனை?
மேல் குறிப்பிட்டப்படி, செப்டம்பரில் ஒரே ஒரு அரசு விடுமுறை தினம் மட்டுமே வருகிறது. வார விடுமுறை நாட்கள் மற்றும் மிலாடி நபி விடுமுறை மற்றும் 27-ம் தேதியில் இருந்து விடுக்கப்படும் காலாண்டு விடுமுறை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை ஆகும்.

காலாண்டுத் தேர்வு நாட்கள் 2025
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு முன்னரே 10-ம் தேதி முதல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும்.
இதில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு காலையில் தேர்வு நடைபெறும். மேலும், 6 மற்றும் 8-ம் வகுப்பிற்கு காலையிலும், 7, 9 மற்றும் 11-ம் வகுப்பிற்கு மதியமும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த தேதிகளில் காலாண்டுத் தேர்வு நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

6 முதல் 9-ம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதி6-ம் வகுப்பு7-ம் வகுப்பு8-ம் வகுப்பு9-ம் வகுப்பு
15.09.2025தமிழ்தமிழ்தமிழ்தமிழ்
16.09.2025உடற்கல்விவிருப்ப மொழிஉடற்கல்விவிருப்ப மொழி
17.09.2025ஆங்கிலம்உடற்கல்விஆங்கிலம்உடற்கல்வி
18.09.2025விருப்ப மொழிஆங்கிலம்விருப்ப மொழிஆங்கிலம்
22.09.2025கணிதம்கணிதம்கணிதம்கணிதம்
24.09.2025அறிவியல்அறிவியல்அறிவியல்அறிவியல்
25.09.2025சமூக அறிவியல்சமூக அறிவியல்சமூக அறிவியல்-
26.09.2025சமூக அறிவியல்

  • காலை தேர்வு - 10 மணி முதல் 12 மணி வரை
  • மதியம் தேர்வு - 2 மணி முதல் 4 மணி வரை
10-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதிபாடம்
15.09.2025தமிழ்
17.09.2025ஆங்கிலம்
18.09.2025விருப்ப மொழி
22.09.2025கணிதம்
24.09.2025அறிவியல்
26.09.2025சமூக அறிவியல்
  • தேர்வு நேரம் - காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
11-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதிபாடம்
10.09.2025தமிழ்
11.09.2025ஆங்கிலம்
15.09.2025உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியில்
17.09.2025கணினி அறிவியல், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல்
19.09.2025வேதியியல், கணிக்கியல், புவியியல்
22.09.2025இயற்பியல், பொருளாதாரம்
25.09.2025கணிதம், விலங்கியல், வணிகம்
  • தேர்வு நேரம் - பிற்பகல் 1.45 முதல் 5 மணி வரை
12-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு அட்டவணை 2025
தேதிபாடம்
10.09.2025தமிழ்
11.09.2025ஆங்கிலம்
15.09.2025கணிதம், விலங்கியல், வணிகம்
17.09.2025கணினி அறிவியல், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
19.09.2025இயற்பியல், பொருளாதாரம்
22.09.2025உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
25.09.2025வேதியியல், கணக்கியல், புவியியல்
  • தேர்வு நேரம் - காலை 9.45 முதல் பிற்பகல் 1 மணி வரை
9 நாட்கள் காலாண்டு விடுமுறை
அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனுடன் தொடர்ந்து 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறை விடுக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இதனிடையே விடுமுறை நாட்களில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய அரசு விடுமுறை நாட்கள் இடம்பெறுகிறது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

செப். 2, 5-ல் இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பு முகாம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை: 
இந்​தி​ய வி​மானப் ​ படை ஆள்​ சேர்ப்​பு முகாம் தாம்​பரத்​தில்​ வரும்​ செப்​. 2, 5 ஆகிய தேதி​களில் நடைபெறவுள்​ள​தாக சென்னை மாவட்​ட ஆட்​சி​யர்​ ரஷ்மி சித்​தார்த்​ ஜகடே தெரி​வித்​துள்​ளார்​. இந்​தி​ய வி​மானப்​ படைக்​கான அக்​னிவீர்​ வா​யு ஆள்​சேர்ப்​பு முகாம் தாம்​பரத்​தில்​ உள்​ள வி​மானப்​படை பயிற்​சி நிலை​யத்​தில்​ வரும்​ செப்​.2 மற்​றும்​ செப்​.5 ஆகிய தேதி​களில்​ நடை​பெறவுள்​ளது.

இதில்​ ஆண்​களுக்​கான ஆள்​சேர்ப்​பு செப்​.2-ம்​ தேதி​யும்​ (காலை 4 மணி​முதல்​), பெண்​களுக்​கான ஆள்​சேர்ப்​பு செப்​.5-ம்​ தேதி​யும்​ (காலை 5 மணி​முதல்​) நடை​பெறுகின்​றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி 12-ம்​ வகுப்​பு தேர்ச்​சி பெற்​று ஆங்​கிலத்​தில்​ 50 சதவீதம்​ மதிப்​பெண்​ பெற்​றவர்​கள்​ சேர தகு​தி​யுடைய​வர்​களாவர்​. விண்​ணப்​ப​தா​ரர்​கள்​ 17.5-ல்​ இருந்​து 21 வயதுக்​கு உட்​பட்​ட​வர்​களாக இருக்​க வேண்டியது அவசி​யம்​.

ராணுவ வி​மானப்​ படை முகாம் தொடர்​பான கூடு​தல்​ விவரங்​களை https://agnipathvayu.cdac.in/AV/ என்​ற இணை​யதளத்​தில்​ தெரிந்​து​கொண்​டு பயனடை​யு​மாறு சென்னை மாவட்ட ஆட்​சி​யர்​ ரஷ்மி சித்​​தார்​த்​ ஜகடே தெரி​வித்​துள்​ளார்​.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Office Assistant Jobs : 8ம் வகுப்பு படிப்பு போதும்... ரூ.50000/- வரை சம்பளம் ... தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Village Assistant) காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையருக்கு  எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, " வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும் இதுவரை அக்காலிபணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



எனவே, மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்

எனவே, மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில்  கிராமங்களுக்கு  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தினசரி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கான, கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருந்திருக்க வேண்டும். ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை (நிலை-1, தளம்-1) என்ற ஊதிய ஏற்ற அலகில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான, வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடருக்கு மட்டும் அதிகபட்ச வயது 35 வயதுக்குள்ளாக வேண்டும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தேர்வில் வெற்றியை எட்ட சில வழிகாட்டுதல் முறைகள் :
* தேர்வர்கள் பாடவாரியாக நாட்கள் ஒதுக்கி முழு முயற்சியுடன் படிக்கவும்.


* தேர்வு காலம் அருகில் உள்ளதால் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 14-15 மணி நேரம் படிப்பது பயனளிக்கும்.
* ஆன்லைனில் காலம் செலவழிப்பதை குறையுங்கள். காலை மாலை  1 மணி நேரம் மட்டும் மொபைலை பயன்படுத்தி படியுங்கள்.
* முழு புத்தக வாசிப்பு அவசியம்.
*எந்நிலை வந்தாலும் மனம் தளராதீர் . உழைபிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் உண்டு.
*தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடப்பகுதியை வரி விடாமல் வாசிப்பதன் மூலம் 28, 28, 55  மதிப்பெண் வரை பெறலாம்
* அறிவியல் பகுதி அதிக பாட திட்டம் கொண்டது. குறிப்பெடுத்து திருப்புதல் செய்தல் பயனளிக்கும்
*சமூக அறிவியல் நிகழ்வுகளை பட்டியலிட்டு படிக்கலாம்
* உளவியல் குறைவான பாட அளவுடையது. ஆனால் மிக ஆழமாக உட்கூர்ந்து படித்தல் அவசியம்
*கணிதம் புரிதல் இன்றி படிப்பது பலனளிக்காது. நடைமுறை கணக்குகள் அதிகளவில் பயிற்சி எடுத்தல் சிறந்தது
*ஆங்கிலம் மொழி ஆளுமை அடிப்படையில் கேட்கபடும் வினாக்கள் அமையும்.
*வகுப்பு 6, 7 படிப்பதற்கு எளிமையானவை இவற்றை படிக்க கால அளவு குறைவாக பயன்படுத்தவும்
*9, 10 வகுப்பு பாட பகுதிகள் அதிகமான கடின தன்மை உடையது. இவற்றை ஆழ்ந்து படிக்கவும். கால அளவு அதிகம் தரவும்
* தமிழ், அறிவியல், ச.அறிவியல் படிப்பதை முதலில் துவங்குங்கள். இவை சுவாரஸ்யம் மிக்கவை. எனவே சலிப்பு வராது
* நேர மேலாண்மை அவசியம். கால அளவு குறைவு என்பதால் விரைவாக மற்றும் ஆழ்ந்து படிக்கவும்
* எதிர்வினை எண்ணங்களை தவிருங்கள். இங்கு எல்லோரும் திறமை மிக்கவரே
* தண்ணீர் இயன்ற வரை குடிக்கவும். சோர்வை போக்கும்
* கவன சிதறல் தரும் இடங்களை தவிர்த்து அமைதி நிறைந்த இடத்தில் படிக்க பழகவும்
* வெற்றி வாய்ப்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணியுங்கள். எண்ணமே செயலாகிறது
By ,
K.PRATHEEP, BT ASST
GHSS-POONGULAM
VELLORE DT


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )