Office Assistant Jobs : 8ம் வகுப்பு படிப்பு போதும்... ரூ.50000/- வரை சம்பளம் ... தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Village Assistant) காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையருக்கு  எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, " வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும் இதுவரை அக்காலிபணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



எனவே, மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்

எனவே, மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில்  கிராமங்களுக்கு  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தினசரி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கான, கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருந்திருக்க வேண்டும். ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை (நிலை-1, தளம்-1) என்ற ஊதிய ஏற்ற அலகில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான, வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடருக்கு மட்டும் அதிகபட்ச வயது 35 வயதுக்குள்ளாக வேண்டும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment