குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லையெனில் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

500x300_1818623-school

அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது, 1 முதல் 5-ம் வகுப்புக்கு 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும்.

இது தவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை 50-க்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.

அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியர்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவர் வீதம்) அனுமதிக்க வேண்டும். மேலும், 9, 10-ம் வகுப்பில் தலா 40 மாணவர் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 60-க்கு அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். பணி நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகேயுள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.

இது தவிர ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கிலவழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள காலஅவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SMC : ஆகஸ்ட் -2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025 - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு.

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)IMG_20250819_194106

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் -2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025 , வெள்ளிக் கிழமை நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு .

Proceedings for SMC Meeting scheduled on 29.08.2025 - Including Annnexure.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

20000க்கும் மேற்பட்ட அரசு பணிகள்: இந்த வாரத்தில் (ஆகஸ்ட் 18 - 24) விண்ணப்பிக்க வேண்டிய காலியிடங்கள்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய மாநில அரசுகளும், பொது துறை நிறுவனங்களும் பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கூட்டுறவு சங்களில் உதவியாளர் வேலை:  தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைநகர கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம்உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாகக் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு2025ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (தாள்-மற்றும் தாள் - II) அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் படிப்பு முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதி தேர்வாகும். இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது 

வங்கி வேலை வாய்ப்பு 
IBPS Customer Service Associate Post Recruitment :   நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக  உள்ள  Customer Service Associate பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) 202526 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டிற்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுவிண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2025ஆர்வமுள்ளவர்கள் https://www.ibps.in/ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும் 
SBI Clerk Recruitment :  எழுத்தர் நிலையில் (clerical cadre) காலியாக உள்ள 5180 ( ஜுனியர் அசோசியேட்ஸ்காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை இந்திய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வெளியிட்டதுமொத்தம் 5180 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 26ம் தேதியாகும்.
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... எல்லை பாதுகாப்பு படையில் 3588 காலியிடங்கள் : எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 3588 கான்ஸ்டபிள் (ட்ரேட்ஸ்மேன்பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளதுஇப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறதுகுறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பத்தினை https://rectt.bsf.gov.in/ இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
எல்ஐசி உதவி நிர்வாக அலுவலர் வேலை:  இந்திய  நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டுக் நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உதவி நிர்வாக அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 350 உதவி நிர்வாக அலுவலர் (Generalist), 410 உதவி நிர்வாக அலுவலர் (நிபுணத்துவம்) 91 உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 08.09.2025 அன்றைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்இணைய தள முகவரி licindia.in ஆகும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN TET Paper 2 - Science - Important Problem Questions

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET / TRB / TNPSC - தேர்வுக்கு ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் முன் அனுமதி / தடையின்மைச் சான்று பெற தேவையான ஆவணங்கள் :

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250819_143749

பள்ளிக் கல்வித்துறை :

அரசு உயர்நிலை ( ம ) மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள முன் அனுமதி / தடையின்மைச் சான்று கோரும் போது கீழ்கண்ட ஆவணங்கள் இணைத்து கருத்துரு அனுப்பிட சார்ந்த பள்ளி தலைமையிசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

IMG-20250818-WA0026_wm

தொடக்கக் கல்வித்துறை :

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அமைச்சுப் பணியாளர்கள் - அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு போன்றவற்றால்நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளுதல் - தேர்வுகளில் விண்ணப்பிக்க துறை அனுமதி மற்றும் தடையின்மைச் சான்று கோருதல் - அறிவுரை வழங்குதல்- தொடர்பாக

IMG-20250818-WA0025_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

+2 துணைத் தேர்வுகள் , ஜூன் / ஜூலை 2025 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் , ஜூன் / ஜூலை 2025 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு

IMG-20250819-WA0025

நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2025 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் ( Re - total ) மற்றும் மறுமதிப்பீடு ( Revaluation கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) 20.082025 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

 இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் , மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

01.08.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250819_102447

01.08.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

இணைப்பு: படிவங்கள் Pdf & Excel வடிவில்...

👇👇👇👇

DSE - Staff Fixation - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

IGNOU - தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு.

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250819_075036

* இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புகளுக்கு இந்த நீட்டிப்பு பொருந்தும், ஆனால் சான்றிதழ் படிப்புகளுக்கு பொருந்தாது.

* மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

* சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை www.ignou.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?

கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. பிரபலமான இந்த நடிகரின் சினிமா பிரபலத்துக்காக அல்ல; இவர் சமூகத்திற்குச் செய்யும் தன்னிகரில்லா சேவை தான் காரணம்.

இவரது தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை இதுவரை சுமார் 7000 மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.

சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’யில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.

அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டியது அவசியம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.

அகரம் ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள் :

ஆதார் கார்டு

நிரந்தரமான வீட்டு முகவரி சான்று

ரேஷன் அட்டை

ஜாதி சான்றிதழ்

வங்கிக் கணக்கு

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை :

AGARAM Foundation Application Form

AGARAM Foundation Application Form - PDF Download Here

அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.agaram.in/ க்கு சென்று அதில் தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் விண்ணப்பத்தில் கூறிய தகவல்கள் உண்மை தானா என்பதையும், நிதி நிலைமையையும் சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்ந்து அதன் பின்னரே மாணர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.