20000க்கும் மேற்பட்ட அரசு பணிகள்: இந்த வாரத்தில் (ஆகஸ்ட் 18 - 24) விண்ணப்பிக்க வேண்டிய காலியிடங்கள்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய மாநில அரசுகளும், பொது துறை நிறுவனங்களும் பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கூட்டுறவு சங்களில் உதவியாளர் வேலை:  தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைநகர கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம்உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாகக் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு2025ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (தாள்-மற்றும் தாள் - II) அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் படிப்பு முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதி தேர்வாகும். இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது 

வங்கி வேலை வாய்ப்பு 
IBPS Customer Service Associate Post Recruitment :   நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக  உள்ள  Customer Service Associate பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) 202526 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டிற்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுவிண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2025ஆர்வமுள்ளவர்கள் https://www.ibps.in/ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும் 
SBI Clerk Recruitment :  எழுத்தர் நிலையில் (clerical cadre) காலியாக உள்ள 5180 ( ஜுனியர் அசோசியேட்ஸ்காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை இந்திய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வெளியிட்டதுமொத்தம் 5180 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 26ம் தேதியாகும்.
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... எல்லை பாதுகாப்பு படையில் 3588 காலியிடங்கள் : எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 3588 கான்ஸ்டபிள் (ட்ரேட்ஸ்மேன்பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளதுஇப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறதுகுறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பத்தினை https://rectt.bsf.gov.in/ இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
எல்ஐசி உதவி நிர்வாக அலுவலர் வேலை:  இந்திய  நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டுக் நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உதவி நிர்வாக அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 350 உதவி நிர்வாக அலுவலர் (Generalist), 410 உதவி நிர்வாக அலுவலர் (நிபுணத்துவம்) 91 உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 08.09.2025 அன்றைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்இணைய தள முகவரி licindia.in ஆகும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment