கலைத்திருவிழா 2025 - Entry Option Enabled In EMIS - Important Dates

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

கலைத்திருவிழா 2025 Option Enabled In EMIS Web Portal

பள்ளி அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

4.8.2025 முதல் 18.8.2025 வரை

வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள் - 20.8.2025

குறுவட்டம் அளவில் Cluster

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

25.8.2025 முதல் 29. 8.2025 வரை

வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள் - 02.09.2025

வட்டார அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

13.10.2025 முதல் 17. 10.2025 வரை

வெற்றியாளர்களின் விவரங்கள் EMIS ல்உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள் - 23.10.2025

மாவட்ட அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

27.10.2025 முதல் 31. 10.2025 வரை

வெற்றியாளர்களின்  விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள் - 3.11.2025

மாநில அளவில்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை

பங்கேற்பாளர்களின் விவரங்கள் EMIS ல் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள்

24.11.2025 முதல் 28. 11.2025 வரை

வெற்றியாளர்களின் விபரங்கள் EMIS ல் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள் - 03.12.2025

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

G.O 792 - தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் 2025 அறிவிப்பு - அரசாணை வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

G.O 792 - 2025 - Public Holiday List 

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன்படி மொத்தமாக 2025 ஆம் ஆண்டு 24 நாட்கள் பொது விடுமுறையாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணியை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது 

01. ஆங்கில புத்தாண்டு( ஜன.,01)- புதன்

02. தைப்பொங்கல் (ஜன.,14) - செவ்வாய்

03. மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்(ஜன.,15) - புதன்

04. உழவர் திருநாள்(ஜன.,16) - வியாழன்

05. குடியரசு தினம் (ஜன.,26)- ஞாயிறு

06.தைப்பூசம்(பிப்.,11) - செவ்வாய்

07. தெலுங்கு வருட பிறப்பு( மார்ச்.,30)- ஞாயிறு

08. ரம்ஜான் பண்டிகை(மார்ச் 31)- திங்கள்

09. வங்கி கணக்கு முடிவு(ஏப்.,01)- செவ்வாய்

10. மகாவீர் ஜெயந்தி(ஏப்.,10)- வியாழன்

11.தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

12 புனித வெள்ளி(ஏப்.,18)- வெள்ளி

13. தொழிலாளர் தினம்( மே 1) -வியாழன்

14. பக்ரீத் பண்டிகை(ஜூன் 07) -சனி

15. மொஹரம் பண்டிகை( ஜூலை 06) -ஞாயிறு

16. சுதந்திர தினம்( ஆக.,15)- வெள்ளி

17. கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.,16) - சனி

18. விநாயகர் சதுர்த்தி( ஆக.,27) -புதன்

19. மீலாடி நபி( செப்.,09) - வெள்ளி

20. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை( அக்.,01)- புதன்

21.விஜயதசமி( அக்.,02) - வியாழன்

22. காந்தி ஜெயந்தி( அக்.,02) - வியாழன்

23. தீபாவளி ( அக்.,20) - திங்கள்

24. கிறிஸ்துமஸ் பண்டிகை(டிச.,25) - வியாழன்

ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 

Click Here to Download - G.O 792 - தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு - அரசாணை - Tamil - Pdf

Click Here to Download - G.O 792 - தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு - அரசாணை - English - Pdf

இந்த பட்டியலில், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு முதல் பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், தீபாவளி, கிறிஸ்துமஸ் என டிசம்பர் 25ஆம் தேதி வரை மொத்தம் 24 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 23 பொதுவிடுமுறை நாள்களில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாள், தெலுங்கு புத்தாண்டு நாள், மொஹரம் என மூன்று நாள்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துள்ளன. முக்கிய பண்டிகை நாள்கள் எதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வராததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடை வள்ளலாகும் ஜனவரி

ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து விடுமுறை நாள்கள் உள்ளன. ஆனால், அதில் குடியரசு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டது.

ஒரே நாளில் இரண்டு விடுமுறை

அக்.2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தி. வழக்கமாக அன்று விடுமுறைதான். ஆனால், அதே அக்.2ஆம் தேதியே இந்த ஆண்டு விஜயதசமியும் வருவதால் ஒரு நாள் விடுமுறை வீணாகிப் போனதாக மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.

விடுமுறை இல்லாத நவம்பர்

மொத்தமுள்ள 12 மாதங்களில் பிப்ரவரி மாதத்தில் கூட, தைப்பூசத்துக்காக ஒரு நாள் விடுமுறை இருக்கிறது. ஆனால், நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இல்லை.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

TNPSC Group 2/2A English Class - 3 | AIM TN

TNPSC Group 2/2A English Class - 2 | AIM TN

TNPSC Group 2/2A English Class - 1 | AIM TN

IBPS Clerk 2025 அறிவிப்பு வெளியானது – 10,277 பணியிடங்கள் | தமிழ்நாட்டுக்கு 894 இடங்கள்!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IBPS (Institute of Banking Personnel Selection) வாரியம் மூலம் Clerical Cadre – Customer Service Associate (CSA) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 894 இடங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தகவல்கள்:

விபரம்விவரம்
️ விண்ணப்ப தொடக்கம்01 ஆகஸ்ட் 2025
️ விண்ணப்ப முடிவு21 ஆகஸ்ட் 2025
தேர்வு தேதிகள்Prelims – அக்டோபர் 4, 5, 11; Mains – நவம்பர் 29
பணியிடங்கள்10,277 (TN – 894)
கல்வித் தகுதிAny Degree (UG)
வயது வரம்பு20 முதல் 28 (1.8.2025க்கு அடிப்படையில்)
கட்டணம்₹850 (GEN/OBC), ₹175 (SC/ST/PwBD)
தேர்வு முறைPrelims + Mains (நேர்காணல் இல்லை)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ibps.in

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்த துறையிலும் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை:

✅ Prelims தேர்வு:

  • English Language – 30 கேள்விகள் – 30 மதிப்பெண்கள்

  • Numerical Ability – 35 கேள்விகள் – 35 மதிப்பெண்கள்

  • Reasoning Ability – 35 கேள்விகள் – 35 மதிப்பெண்கள்
    மொத்தம்: 100 கேள்விகள் – 100 மதிப்பெண்கள் – 60 நிமிடம்

✅ Mains தேர்வு:

  • General/Financial Awareness – 50 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்

  • General English – 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்

  • Reasoning & Computer Aptitude – 50 கேள்விகள் – 60 மதிப்பெண்கள்

  • Quantitative Aptitude – 50 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்
    மொத்தம்: 190 கேள்விகள் – 200 மதிப்பெண்கள் – 160 நிமிடம்

    விண்ணப்பிக்கும் முறை:

    1. அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in ஐ சென்று “CRP Clerks XV” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

    2. “New Registration” என்பதை கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பதிவு செய்யவும்.

    3. புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை பதிவேற்றவும்.

    4. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய 10 மிகப்பெரிய வேலைவாய்ப்புகள்; தமிழக, மத்திய அரசு வேலைகளின் லிஸ்ட்!

 Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்) 

ஜூலை மாதத்திற்கு பின்பு கல்லூரிகளில் படிப்பை முடித்து, வேலைக்கு தயாராக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய டாப் 10 அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

படிப்பை முடித்து வேலை தேடுக்கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கான சரியான மாதம் ஆகஸ்ட் ஆகும். தமிழ்நாடு அரசு மட்டுமின்றி, மத்திய அரசு துறைகளில் இருக்கும் மிகப்பெரிய பணி வாய்ப்புகள் இந்த மாதம் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும் டாப் 10 தமிழக மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் என்னென்ன, அவற்றுக்கான தகுதிகளை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் வேலை 2025
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் 1,996 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நிரப்ப (TRB PG Teacher Recruitment 2025) அறிவிப்பு ஜூலை 10-ம் தேதி வெளியானது. முதுகலை டிகிரியுடன் பி.டெட் முடித்தவர்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 28.09.2025 தேதி தேர்வு நடைபெறும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://trb.tn.gov.in/

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு அறிவிப்பு 645 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 15-ம் தேதி வெளியானது. குரூப் 2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்கள், குரூப் 2ஏ பதவிகளில் 595 காலிப்பணியிடங்கள் ( TNPSC Group 2 Exam 2025) உள்ளன. முதல்நிலை, முதன்மை என தேர்வு நடத்தப்படும். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 13-ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://tnpsc.gov.in/ 

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலை

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் (TN Environment Dept Jobs 2025) உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. டிகிரி, பி.காம். பிஜி டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ம் தேதியே கடைசி நாள் ஆகும். இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக ரூ.68,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://environment.tn.gov.in/

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படும் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள், அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களில் அதிகபடியாக 1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://naanmudhalvan.tn.gov.in/

புலனாய்வுத் துறையில் அதிகாரி வேலை 2025
மத்திய அரசின் உள்துறையில் கீழ் செயல்படும் புலனாய்வுத்துறையில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு ஜூலை 19-ம் தேதி வெளியானது. மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.mha.gov.in/en

எய்ம்ஸ் செவிலியர் வேலை 2025
தேசிய அளவில் உள்ள 17 எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், டெல்லி ESIC மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். மொத்தம் 3,500 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. நர்சிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆகஸ்ட் 11 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 14.09.2025 தேதியும், முதன்மைத் தேர்வு 27.09.2025 தேதியும் நடைபெறும்.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.aiimsexams.ac.in/

புலனாய்வுத்துறை பாதுகாப்பு உதவியாளர் வேலை 2025

புலனாய்வுத்துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. மொத்தம் 4,987 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10-ம்வ் அகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தமிழ்நாட்டில் 285 பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பணி வாய்ப்பை பெற தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 17.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/94478/Index.html

யுபிஎஸ்சி EPFO வேலைவாய்ப்பு 2025
யுபிஎஸ்சி மூலம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கீழ் அமலாக்க அதிகாரி அல்லது கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருமான நிதி ஆணையர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 230 காலிப்பணியிடங்களுக்கு 18.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://upsc.gov.in/

வங்கி கிளார்க் வேலை 2025

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் பொத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தாண்டு மொத்தம் 10,277 கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 21.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://www.ibps.in/

எல்லை பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் வேலை 2025
எல்லை பாதுகாப்புப் படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு இந்த மாதம் வெளியானது. மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு ஐடிஐ, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 23.08.2025 தேதியே கடைசி நாள் ஆகும். உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க : https://rectt.bsf.gov.in/

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

TNPSC மூலம் 1,850 உதவியாளர் தேர்வுக்கு மின் வாரியம் ஒப்புதல்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1371796

டிஎன்​பிஎஸ்சி மூல​மாக, 400 உதவி பொறி​யாளர்​கள், 1,850 கள உதவி​யாளர்​களை தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மின் வாரி​யத்​தில் உதவி பொறி​யாளர், கள உதவி​யாளர், கேங்​மேன், லைன்​மேன் போன்ற பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என தொழிற்சங்கங்கள் வலி​யுறுத்​துகின்​றன.

மின் வாரிய பணி​யாளர்​கள் வாரி​யத்​தின் வாயி​லாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக தேர்வு செய்​யப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறி​யாளர் உட்பட ஒரு சில பணி​யிடங்​களை நிரப்ப டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்​கள் விரை​வில் பணி​யில் சேர்க்​கப்பட உள்​ளனர்.

இந்​நிலை​யில். தற்​போது 400 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் 1850 கள உதவி​யாளர்​களை டிஎன்​பிஎஸ்சி மூல​மாக தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. டிஎன்​பிஎஸ்​சி​யின் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப சேவை​கள் தேர்​வு​கள் மூல​மாக இந்த பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வுள்​ளன.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

6 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கப் பயிற்சி: மாணவர்களுக்கு வாரம்தோறும் தேர்வு நடத்த உத்தரவு

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்​கத்​தில் பயிற்சி பெறும் மாணவர்​களுக்கு வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை தேர்​வு​கள் நடத்​தப்பட வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ‘திறன்’ எனும் இயக்​கம் 6 மாதம் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இந்த திறன் இயக்​கம் பள்​ளி​களில் சிறப்​பாக செயல்​படுத்​தப்பட வேண்​டும். திறன் இயக்க மாணவர்​கள் தனி​யாக அமர வைக்​கப்​பட்டு வகுப்​பறைச் செயல்​பாடு​கள் தொடங்​கப்​பட்​டிருக்க வேண்​டும்.

அந்த வகை​யில் மாணவர்​களுக்கு அடிப்​படை கற்​றல் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். அதில் தமிழ், ஆங்​கிலம் மற்​றும் கணித பாடங்​களின் மதிப்​பெண்​கள் அடிப்​படை​யில் மாணவர்​களைச் சேர்த்து பயிற்சி தரவேண்​டும். வகுப்​பு​களுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்​கள் பயிற்​று​விக்க வேண்​டும்.

இதுத​விர வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை, அந்த வாரத்​தில் நடத்​தப்​பட்ட பாடங்​களில் இருந்து 10 மதிப்​பெண்​களுக்கு தேர்​வு​களை நடத்த வேண்​டும். ஒரு பாடத்​தலைப்பு முடிந்த பின்பு அதற்​கான பயிற்​சித்​தாள் செய்​வதை​யும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்​டும். இதற்​கான ஆசிரியர் கையேடு மற்​றும் மாணவர் பயிற்சி புத்​தகம் பள்​ளி​களுக்கு வழங்​கப்​படும். மேலும், இது​சார்ந்த வழி​முறை​களை பின்​பற்றி திட்​டத்தை சிறப்​பாக செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.