இடைநிலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் திருத்த மீண்டும் வாய்ப்பு

    Education News (கல்விச் செய்திகள்)

.com/

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஏப்ரல் 30-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதை சரிசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்குமாறு சில தேர்வர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களில் யாரேனும் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை அளித்திருந்தால் அதை சரிசெய்வதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஆதார சான்றிதழ்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர் மின்னஞ்சலுக்கு (trbgrievances@tn.gov.in) மே 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் செயல்படும் குறைதீர் பிரிவிலும் நேரடியாகவும் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம். மே 8-ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

அரசு கலைக் கல்லூரியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    Education News (கல்விச் செய்திகள்)

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கும் நாளை முதல் விண்ணப்ப பதிவு செய்யலாம்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை அனுப்ப உத்தரவு

    Education News (கல்விச் செய்திகள்)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01062025 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களில் நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இணைப்பிலுள்ள படிவத்தில் 07.06.2026 காலை 1100 மணிக்குள் பூர்த்தி செய்து , இவ்வலுவலக ceokpmbzgmailcom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ( Excel Sheet ) அனுப்பிவிட்டு அதன் கையொப்பிமிட்ட பிரதியை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு படிவம்

IMG-20250507-WA0000

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாள் விடுமுறை அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)

1360716

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அங்கன்வாடி, குழந்தைகள் மையங்களுக்கு மே 11 முதல் மே 25 வரை 15 நாட்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டில் மே 8 முதல் மே 22-ம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு அளவை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவு கோடை விடுமுறை தொடங்கும் முன்பாகவே வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடப்பாண்டும் குழந்தைகள் மையங்களுக்கு மே 11-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் வரும் மே 11-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்கும் முன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் பயனாளிகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் மே மாதத்தில் குழந்தைகளின் வருகை 50 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதன் அடிப்படையில், அந்த அளவுக்கு மட்டும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கூடுதல் தேவை இருந்தால் அதுகுறித்து தனியே பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது!

    Education News (கல்விச் செய்திகள்)

1360707

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. அத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஒரு நாளைக்கு முன்னதாக அதாவது மே 8-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் மே 8-ம் தேதி (வியாழன்) காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உளளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அறிந்துகொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை அறிய, தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் அவர்கள் பள்ளியில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

CA ஆவது எப்படி? என்ன தேர்வு எழுத வேண்டும்?மாணவர்களுக்கு உதவும் முழு விவரம்

பட்டயக் கணக்காளர் எனப்படும் சிஏ (CA) படிப்பிற்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வருவானம் மற்றும் நிதி சார்ந்த தேவைகளுக்கு ஆடிட்டர்கள் அவசியம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. சிறு நிறுவனங்கள் முதல் பெரிய தொழில்கள் வரை பட்டயக் கணக்காளர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஆனால், சிஏ என்ற அந்தஸ்த்தை பெற ஒருவர் 4 கட்ட நிலையை கடந்து வர வேண்டும். இந்தியாவில் சிஏ ஆவது எப்படி, அதற்கு எழுத வேண்டிய தேர்வுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

பட்டயக் கணக்காளர் எனப்படும் சிஏ (CA) படிப்பிற்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆடிட்டர்களின் தேவை என்பதை தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில், லட்சக்கணக்கில் ஊதியத்துடன் நிதித்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிஏ ஆக தேர்ச்சி பெற 4 கட்ட நிலையை கடக்க வேண்டி உள்ளது. அந்த வகையில், 12-ம் வகுப்பிற்கு பின்னர் சிஏ படிப்பை தொடர்வது எப்படி? தகுதிகள் என்ன, தேர்வு முறை ஆகிய தகவல்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

CA ஆவது எப்படி?
பட்டயக் கணக்காளர் (CA) ஆக வேண்டும் என்றால், அதற்கு இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் (ICAI) நடத்தும் 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிஏ முதல்நிலை (Foundation Examination), இடைநிலை தேர்வு (Intermediate Examination) மற்றும் இறுதித் தேர்வு (Final Examination) என நடத்தப்படும்.

முதல் கட்டம் - சிஏ பவுண்டேஷன் தேர்வு

12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகம் நடத்தும் சிஏ பவுண்டேஷன் தேர்வை எழுத வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 6 மாதங்களில் இந்த தேர்வை எழுத முடியும். ICAI வழங்கும் பவுண்டேஷன் படிப்பில் சேர வேண்டும். கணக்கு, அக்கவுண்டன்சி, சட்டம், பொருளாதாரம் ஆகிய நான்கு பாடங்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சிஏ இன்டர்மீடியட் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். தோல்வி அடைபவர்கள், ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்ற விதம் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் முயற்சி செய்து தேர்ச்சி பெறலாம்.

இரண்டாம் கட்டம் - சிஏ இன்டர்மீடியட் தேர்வு
சிஏ பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். அவையில்லாமல், பிகாம், பிஎஸ்சி போன்ற மூன்று வருடப் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள், சிஏ பவுண்டேஷன் தேர்வு எழுதாமல் நேரடியாக சிஏ இன்டர்மீடியட் தேர்வை எழுதலாம். இந்த படிப்புக்கான காலம் 9 மாதங்கள். இந்தத் தேர்வு நான்கு பகுதிகள் கொண்ட இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அக்கவுண்டன்சி, ஆடிட்டிங், வரி, சட்டம் போன்ற முக்கியமான பாடங்களை இந்தத் தேர்வில் படிக்க வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற, ஒரு குரூப்பில் உள்ள நான்கு பாடங்களிலும் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். மேலும், நான்கு பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 200-க்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குரூப்பில் ஒருவர் தேர்ச்சி பெற முடியும். ஆனால், இந்த நான்கு பாடங்களில் எந்தப் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தாலும், அந்தத் தேர்வு மட்டும் தேர்ச்சி அடைந்ததாக எடுத்துக் கொள்ளப்படும்.இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடைபவர்கள், சிஏ ஃபைனல் தேர்வுக்குத் தேர்ச்சி அடைவார்கள்.

மூன்றாம் கட்டம் - பயிற்சி ஆடிட்டர்
சிஏ இன்டர்மீடியட் தேர்வுகளில் ஒரு குரூப்பில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள், பயிற்சி ஆடிட்டர்களாக பணி செய்யலாம். ஆடிட்டிங் கம்பெனியில் 3 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். இதற்கு சம்பளம் வழங்கப்படும்.

நான்காம் கட்டம் -சிஏ ஃபைனல் தேர்வுகள்
பயிற்சி காலம் முடித்து இன்டர்மீடியட்டில் இரண்டு குரூப்புகளிலும் தேர்ச்சி அடைந்தவர்கள், சிஏ ஃபைனல் தேர்வை எழுதலாம். இத்தேர்வு எட்டு பாடங்கள் கொண்டு 2 குரூப்புகளாக நடத்தப்படும். இரண்டு குரூப்பிலும் தேர்ச்சி அடையும் மாணவர்கள், சிஏ தேர்ச்சி பெறுவார்கள்.

இத்தனை கட்டங்களை கடந்துதான் ஒருவர் சிஏ ஆக முடியும். அதனைத்தொடர்ந்து, மத்திய, மாநில அரசு முதல், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புகளை பெறலாம். சிஏ தேர்வில் தேர்ச்சி அடைபவர்களில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DX Product Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant பணியிடங்கள்:

DX Product Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

Accenture நிறுவனத்தில் Business Architect காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Accenture நிறுவனத்தில் Business Architect காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business Architect பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

Business Architect பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Accenture-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Accenture தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Technical Screening, Aptitude Test, Technical Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசில் Social Worker காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசில் Social Worker காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Occupational Therapist, Social Worker, Special Educator பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Occupational Therapist, Social Worker, Special Educator பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.23,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

ரூ.37,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ரூ.37,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Tech (ECE) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

SJVN நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்..!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

SJVN நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 100+ காலிப்பணியிடங்கள் || ரூ.1,60,000/- சம்பளம்..!

SJVN Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SJVN காலிப்பணியிடங்கள்:

Executive Trainee பணிக்கென மொத்தம் 114 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc /M.Tech / MBA / Post Graduate Degree / Diploma / Post Graduate Diploma / Graduate / Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJVN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJVN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் CBT / Group Discussion / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

JIPMER ஆணையத்தில் Project Technician-III காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.28,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

JIPMER ஆணையத்தில் Project Technician-III காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.28,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Project Technician-III பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.28,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Project Technician-III பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.28,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.