Health Tips: நுரையீரலில் சேரும் அழுக்கையும் நச்சுக்களையும் நீக்கும் வெல்லம்!

 

Health Tips: நுரையீரலில் சேரும் அழுக்கையும் நச்சுக்களையும் நீக்கும் வெல்லம்!

தற்போதைய வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, புகை பழக்கம் போன்றவற்றினால், நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், நுரையீரல் பலவீன்மடைகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக் கூடும். அதனை அலட்சியம் செய்தால், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரலில் நீர் நிரப்புதல் போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நுரையீரலை சுத்தம் செய்யும் முறை

பொதுவாகவே அனைவரும் நுரையீரலின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் மாற்றங்களைச் செய்வது உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும். இதற்கு வெல்லத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெல்லம் எப்படி நுரையீரலுக்கு கவசமாக செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

நுரையீரலின் பாதுகாவலர் வெல்லம் 

வெல்லம் ஒரு இயற்கை இனிப்பு என்று அறியப்படுகிறது. இதன் நுகர்வு மூலம் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ஆனால் சுவாசம் அல்லது நுரையீரல் தொடர்பான கோளாறுகள் வரும் போது, ​​இது ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.

நுரையீரலை உள்ளே இருந்து சுத்தப்படுத்தும் வெல்லம்

வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் உணவியல் நிபுணர் கூறுகின்றனர். உங்கள் நுரையீரலில் சிக்கிக்கொள்ளக்கூடிய கார்பன் துகள்களை மாற்றும் திறன் இதற்கு உள்ளது. இது நுரையீரலில் சேரும் மாசுகளை வெளியேற்றுகிறது.

நுரையீரலை சுத்தம் செய்ய மருந்து - வெல்லம்

வெல்லம் நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். நிலக்கரி சுரங்கம் அல்லது தூசி-மண் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு வெல்லம் கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுதான்.

வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

குளிரில் சூடாக வைத்திருக்கும் சூடான உணவான வெல்லம் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க உதவுகிறது

இரும்புச்சத்தின் நல்ல ஆதாரம் மற்றும் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது

மலிவான இரத்த சுத்திகரிப்பு பொருள் 

மலச்சிக்கலுக்கு மருந்து

சர்க்கரைக்கு மலிவான மற்றும் சிறந்த மாற்று

நுரையீரல் சுத்தமாக இருக்க வெல்லம் சாப்பிடுவது எப்படி?

வெல்லம் தேநீர் குடிக்கலாம் என்று உணவியல் நிபுணர் கூறினார். இதன் மூலம் நோய்களுக்கு மூல காரணமான சர்க்கரையை தவிர்க்கலாம். வெல்லம், நெய், கருப்பட்டி கலந்து லட்டுக்களை செய்து சாப்பிடுவது மற்றொரு வழி. மூன்றாவது வழி, சாப்பிட்டவுடன் நேரடியாக வெல்லம் சாப்பிடுவது. எனினும் எப்போதும் ரசாயனம் இல்லாத வெல்லத்தை பயன்படுத்துங்கள்.


 Click here to join whatsapp group for daily health tip

குளிர்காலத்தில் சூப் ஏன் குடிக்க வேண்டும்? 4 காரணங்கள்

 குளிர்காலத்தில் எங்கு பார்த்தாலும் சூப் கடைகளாக இருக்கும். அது சரியான உணவா? ஏன் சூப் குடிக்கிறார்கள்? என்ற கேள்வி அதனைப் பற்றி கேள்விப்படாத பலருக்கும் இருக்கிறது. அப்படியான சந்தேகம் உங்களுக்கு இருந்தால், சூப் மூலம் கிடைக்கும் பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

குளிர்காலத்தில், சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், வெப்பநிலை குறைவாக இருப்பதை சூப் குடிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கலாம். இதுமட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க உதவுகிறது. குளிர்காலங்களில், ப்ரோக்கோலி, கீரை அல்லது உருளைக்கிழங்கு போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள சூப்களைச் சேர்த்து கொள்ளலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் பாதுகாக்கவும்.

சளிக்கு சிறந்த நிவாரணி

சளி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு, சூப், குறிப்பாக சிக்கன் சூப் பரிந்துரைக்கப்படுகிறது. சூப்பில் உள்ள குழம்பு அறிகுறிகளைத் தணிக்க எவ்வளவு உதவுகின்றன. பசியின்மை குறைவாக இருக்கும் போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. சளி ஓட்டத்தை அதிகரிக்கும். 

நீரேற்றமாக வைத்திருக்கும்

குளிர்ச்சியாக இருந்தாலும், உங்கள் உடல் செயல்பட குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் உட்கொள்ளலில் கவனம் செலுத்தவில்லை என்றால், குளிர்காலத்தில் கூட நீரிழப்பு ஏற்படலாம். சூப் குடிக்கும்போது உங்கள் உடலில் ஏற்பட்ட நீரிழப்பை தடுக்கலாம் அல்லது சமச்சீராக்கலாம். காய்கறிகளில் இருக்கும் புரதம், போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும்.  

புரதத்தின் ஆதாரம்

மாட்டிறைச்சி, கோழி மற்றும் வான்கோழி போன்ற புரதம் நிறைந்த உணவுகளில் சுவையான சூப்களை உருவாக்கலாம். கடல் உணவு சூப்களுக்கு இறால் ஒரு சிறந்த புரதம். சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்து நிறைந்த சூப்களில் இருந்து பயனடையலாம். கீரை போன்ற பல இலை கீரைகளில் வியக்கத்தக்க அளவு புரதம் உள்ளது. பருப்பு வகைகள் புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.

Click here to join whatsapp group for daily health tip

ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.... எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.. வேலூர் சிறையில் வேலை

 வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு முடி திருந்துநர், வேலூர் சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் ஆகிய பணியிடங்க களுக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். வேலூர் மத்திய சிறையில் இந்த தேர்வுகள் நடைபெறும். முடிதிருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம்  வழங்கப்படும்.

வயது வரம்புல்: பட்டியலின மக்கள்., பட்டியலின அருந்ததியர்., பட்டியல் பழங்குடியினர் 18 முதல் 37 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் 34 வயது வரையும்,  பொது பிரிவினர் 32 வயது வரையும் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி, சாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றையும் இணைத்து விண்ணப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப் பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு டிசம்பர் 20- ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


தேர்வு இல்லை...நேர்காணல் மட்டுமே... திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு!

 திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

திருப்பூர் மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 13.12.2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி (Walk In Interview) நடைபெற உள்ளது.

எனவே, தகுதியான நபர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள் விவரம்: 

நிபந்தனைகள்: 

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுள்ள நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.  இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertakings) அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து,விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம்(Self Attested) செய்யப்பட்ட நகல்களை இணைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.

இந்த காலிப்பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:

அறை எண்.240 - DME / 120 - DPH&DMS, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு திருப்பூர். நாள்: 13.12.2022 நேரம்: 10.00 முற்பகல் முதல் பிற்பகல் 2 மணி வரை மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண். 0421-2478503 ஆகும்.

தொண்டையில் "கிச்... கிச்..." ஏற்படுகிறதா...?

 சிலருக்கு அடிக்கடி தொண்டையில் கரகரப்பு காணப்படும். சிலருக்கு புண்கள் ஏற்படுவதும் உண்டு. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம். இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகள்: 

மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர வேண்டும். காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம். ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். 

திரிகடுகு சூரணத்தை 500 மில்லி கிராம் அல்லது அரை டீ ஸ்பூன் வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி வடகம், துளசி வடகம் போன்ற மாத்திரைகளை 2 வீதம் இருவேளை கடித்துச் சாப்பிடலாம். வசந்த குசுமாகர மாத்திரை 2, லவங்கம் 2 எடுத்து, இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சுவைத்து சாப்பிடலாம்.

உடல் பாகங்களை ஒத்திருக்கும் உணவுப்பொருட்கள்..

 உடல் உறுப்புகளுக்கும், சாப்பிடும் சில உணவு பொருட்களுக்கும் இடையே நெருக்கமான ஒற்றுமை இருக்கின்றன. அவை ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகின்றன. அவைகளை சாப்பிடுவது குறிப்பிட்ட அந்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மை பயக்கும். உடல் பாகங்களை ஒத்திருக்கும் சில உணவுகள் குறித்து பார்ப்போம். 

1. கண்-கேரட் வட்ட வடிவத்தில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? கூர்ந்து பார்த்தால் கேரட், கண்களின் உள் அடுக்குகளை ஒத்திருப்பது தெளிவாக தெரியும். கேரட், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற தாவர ரசாயனத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தை பெறுகிறது. இந்த பீட்டா கரோட்டின் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது. 

2. இதயம்-தக்காளி இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்ட தக்காளி, இதயத்தின் உள் அமைப்பை போலவே நான்கு அறைகளை கொண்டது. தக்காளியில் இருக்கும் லைகோபின், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, தக்காளியில் நிறைந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் தக்காளி சாப்பிடலாம். 

3. அல்வியோலி-திராட்சை நுரையீரலின் கட்டமைப்பு சிறிய காற்றுப்பாதைகளை கொண்ட கிளைகளை உள்ளடக்கியது. அவை அல்வியோலி எனப்படும் திசுக்களால் ஆனவை. இது பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல காட்சியளிக்கும். இந்த கட்டமைப்புதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை ரத்த ஓட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்கின்றன. திராட்சை பழம் அதிகம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். திராட்சை விதைகளில் புரோஆந்தோசையானிதின் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்க உதவும். 

4. சிறுநீரகம்-கிட்னி பீன்ஸ் பீன்சின் பெயர் முதல், வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் துணைபுரியும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவும். 

5. கருப்பை-அவகொடா கருப்பையின் வடிவத்தை போலவே அவகொடா பழத்தின் உள் பகுதியும், விதையும் அமைந்திருக்கும். கருப்பை மற்றும் கருப்பை வாய் பகுதியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவகொடா உதவும். வாரம் ஒருமுறை அவகொடா சாப்பிடுவது பிறப்பு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும் துணைபுரியும்.

6. மூளை-வால்நட் வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். பெருமூளை மற்றும் சிறுமூளையில் காணப்படும் சுருக்கங்கள், மடிப்புகளையும் ஒத்திருக்கும். மூளைக்குள் மூன்று டஜன் நியூரான்-டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்க வால்நட் உதவும். மேலும் வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தவும் செய்யும். 
7. கணையம்-சர்க்கரைவள்ளிக் கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. 
8. வயிறு-இஞ்சி இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல்வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். செரிமானத்திற்கு உதவுவதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களும், சீனர்களும் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு இஞ்சியை அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். 

9. காது-காளான் காளானை இரண்டாக வெட்டினால் காதுகளை போலவே காட்சியளிக்கும். காளான்கள் செவிப்புலன் திறனை மேம்படுத்த உதவுகின்றன. அவற்றில் இருக்கும் வைட்டமின் டி, செவிப்புலன் இழப்பை தடுக்க உதவும். எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

10. புற்றுநோய் செல்கள்-புரோக்கோலி புரோக்கோலியின் தலைப்பகுதி புற்றுநோய் செல்களின் தோற்றத்தை ஒத்திருக்கும். புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 45 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்கவும் புரோக்கோலி சாப்பிடலாம்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் கருஞ்சீரகம்

 சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம்.

 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும். 

இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

 கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. 

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து. இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம். 

கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. 

ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உடல் எடையை குறைக்க... ஆரோக்கியத்திற்கு... தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி அவசியம்..?

 

உடற்பயிற்சி செய்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. உடலை ஃபிட்டாக வைத்திருப்பது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது மற்றும் சில காலப்போக்கில் ஏற்படும் மருத்துவ நிலைமைகள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. 
பொதுவாக ஒர்க் அவுட்டில் ஈடுபடுபவர்களின் குறிக்கோள் உடல் எடையை குறைப்பது, தசைகளை ஃபிட்டாக உருவாக்குவது அல்லது ஆரோக்கியமாக உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வாரத்தில் அடிக்கடி எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா.? 
எடை குறைப்பு அல்லது ஃபிட்டான தசைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு தொடர்ந்து ஒர்க் அவுட்களில் ஈடுபட்டிருந்தாலும் பலருக்கு இந்த சந்தேகம் அடிக்கடி வந்து போகும்.

உண்மையை சொல்வதானால், இதற்கு வாரத்தில் இவ்வளவு நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற வரையறை எல்லாம் இல்லை. 

ஒர்க் அவுட் செய்வதன் குறிக்கோள்கள், உடற்பயிற்சி பின்னணி மற்றும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறது மற்றும் நாட்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை பொருத்தது. எனினும் என்ன காரணத்திற்காக எவ்வளவு ஒர்க் அவுட்கள் செய்தல் போதுமானதாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 உங்கள் நோக்கம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற பயிற்சிகள் அல்லது உடல் செயல்பாடுகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு நிலையான பயிற்சி வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு எந்த நாட்களில் நிறைய ஃப்ரீ டைம் இருக்கிறதோ அந்த நாட்களில் 30 நிமிடங்கள் வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம்.


இல்லையெனில் விரைவாக அதிக தீவிர இடைவெளி பயிற்சி எனப்படும் HIIT-யில் 15 நிமிடங்கள் ஈடுபடலாம். 

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வாக்கிங் அல்லது ஜாகிங் செய்வது கூட உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவும். குறிப்பாக ஜிம்மிங் பற்றி சொல்வதென்றால் ஆரோக்கியமாக இருக்க 2 நாட்கள் வலிமை பயிற்சியும் (strength training ), 2 நாட்கள் கார்டியோவும் (cardio) செய்வது போதுமானது. 

உடல் எடையை குறைப்பது தான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால் உங்கள் எடையிழப்பு இலக்கை மனதில் வைத்து ஒர்க் அவுட்களில் வழக்கமாக ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். துவக்கத்தில் நாளொன்றுக்கு சீரான இடைவெளியில் 3 முறை வரை ஒர்க் அவுட்களில் ஈடுபடலாம். ஒரு மாதத்திற்குப் பின் இதை 5 முறை ஆக்கலாம்.


வழக்கமான பயிற்சிகள், இதயத்திற்கு வலு சேர்க்கும் கார்டியோ மற்றும் உடலை வலிமையாக்கும் பயிற்சிகளின் கலவையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். 

உடல் எடையை குறைக்க அதிக கலோரிகளை எரிக்க வேண்டும் என்பதால் தீவிர ஒர்க் அவுட்கள் செய்வதன் மூலம் இலக்கை எளிதாக அடைய முடியும். தீவிர உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் என்றால் வாரத்திற்கு சராசரியாக 150 நிமிடங்கள், மிதமான உடற்பயிற்சி என்றால் வாரத்திற்கு 300 நிமிடங்கள் ஒர்கவுட்களில் ஈடுபடலாம். 

உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தசைகளை கட்டமைப்பது உங்கள் நோக்கம் என்றால் வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் ஒர்க் அவுட்கள் செய்வது போதுமானது. இருப்பினும் இதற்கான ஒர்க் அவுட்கள் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். 

உளி போன்றதொரு உடற்கட்டை பெற விரும்பினால் பளு தூக்குதலில் ஈடுபடலாம். இதற்காக கார்டியோ பயிற்சிகளை முழுமையாக கைவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. 

மிதமான எடையில் மீண்டும் மீண்டும் தம்புல்ஸ் தூக்கி ஒர்க் அவுட் செய்வது கொழுப்பை எரிக்கவும், தசைகளை உருவாக்கி கட்டமைக்கவும் உதவும். தினமும் 40 முதல் 50 நிமிடங்கள், வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் வரை இதற்கான ஒர்க் அவுட்களில் ஈடுபட்டால் போதும்.


 Click here to join whatsapp group for daily health tip

மழை நேரங்களில் வரும் ஜலதோஷம், இருமலுக்கு தீர்வு தரும் சித்தமருந்துகள்...

 ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குளிர்காற்று வீசுவதாலும், உடலில் பித்தம் அதிகரிப்பதாலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து காணப்படும். ஆகவே சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றவை எளிதில் வருகிறது. 

இதற்கு பயன்தரும் சித்தமருந்துகள்: 

1) நிலவேம்பு குடிநீர் 60 மி.லி. வீதம் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் குணமாகும். 

2) இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. வீதம் காலை-மாலை இருவேளை குடிக்க வேண்டும். இதனால் சளித்தொந்தரவு குணமாகும். 

3) தாளிசாதி வடகம் மாத்திரைகள் இரண்டு எடுத்துக்கொண்டு காலை, மதியம், இரவு கடித்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு நீங்கும். பொதுவாக குளிர்காலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள். 

பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடியுங்கள். கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip


ஊட்டச்சத்தும்... உடல்நலமும்

 ஊட்டச்சத்து தனிமனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. அது சமூகம் சார்ந்தது, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடியது. ஏனென்றால், வலுவான மனிதனால்தான் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து வீட்டுப் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். 

இந்தியாவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமை மட்டுமே காரணமல்ல. எது சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது குறித்த அறியாமையும் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டுக்குக் காரணமாக அமைகிறது. 

கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்கு ஆற்றல் தருபவை. நம் அன்றாட உடலியக்கச் செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை இவை தருகின்றன. 

தானியங்கள், கிழங்குகள், தண்டுகள், காய்கறிகள், உலர் பழங்கள், எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை ஆற்றல் தரும் உணவுகளில் சில. புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் உடலின் கட்டமைப்பை உருவாக்க உதவுகின்றன. பால், இறைச்சி, முட்டை, மீன், பருப்பு வகைகள், கொட்டைகள் ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்திருக்கிறது. இவை உடலைக் கட்டமைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் ஆற்றலும் தருகின்றன. 

புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை நம் உடலை பாதுகாத்து, உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கின்றன. உடல் வெப்பநிலையை சீராகப் பராமரித்தல், தசை சுருக்கம், உடலின் நீர் சமநிலையை கட்டுப்படுத்துதல், ரத்தம் உறைதல், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல், இதயத் துடிப்பைப் பராமரித்தல் போன்ற வேலைகள் இதில் அடங்கும். 

நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாது உப்புகளும் கிடைத்தால்தான், இந்த செயல்கள் தொய்வின்றி நடக்கும். காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, ஈரல், பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்திருக்கின்றன. எனவே, அவற்றைப் போதுமான அளவு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்..

 

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்

சுத்தமாகப் பராமரியுங்கள்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பற்களில் சொத்தை ஏற்படும். அதனால் பற்களைச் சுத்தமாகப் பராமரிப்பது மிக முக்கியம். காலை எழுந்தவுடனும் இரவு தூங்கும் முன்பும் மறக்காமல் பற்களைச் சுத்தமாகத் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதேபோல பற்களை அரைகுறையாகத் துலக்கக் கூடாது. சரியான வழியில் துலக்கினால் மட்டுமே இடுக்குகளில் புகுந்து அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

இவற்றைச் செய்யாதீர்கள்

குண்டூசி,ஹேர் பின் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து பற்களை நோண்ட வேண்டாம். இது பற்களையும் வேர்களையும் பாதிக்கும். சில சமயம் ஈறுகளில் புண் ஏற்பட்டு வீக்கம் வந்து விடும். சில சமயங்களில் சீழ் கூட பிடித்துவிடும்.

எனவே இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல வெற்றிலை ,பான்மசாலா ,புகையிலை போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும். இவை அனைத்துமே முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பரிசோதனை

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையையும் முளையிலே கிள்ளி விட்டால் பெரிய பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

பழ வகைகள்

அன்னாசி ,ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த பழ வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகளவு கைகொடுக்கும்.



 Click here to join whatsapp group for daily health tip

எந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவது நல்லது? குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

 தின்பண்டங்கள் முதல் முக்கிய உணவு வரை, புதிதாக தயாரிக்கப்பட்ட தயிருடன் சேர்த்து சாப்பிடும் போதுதான் அந்த உணவு முழுமையடையும்.

இந்த பால் தயாரிப்பு இந்திய உணவின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது, இருப்பினும் தயிர் நுகர்வு மற்றும் அதை உட்கொள்ள சிறந்த நேரம் மற்றும் வழி என்ன என்பதில் சில கவலைகள் மற்றும் குழப்பங்கள் உள்ளன.


தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

காலங்காலமாக, தயிர் நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது, இது அதன் அமைதியான மற்றும் குணப்படுத்தும் பண்புகள் காரணமாகும். தொடர்ந்து தயிர் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும். அதுமட்டுமின்றி, குளிர்ச்சியான ஆற்றலையும் மீறி ஆண்டு முழுவதும் தயிர் உட்கொள்வதற்கு முக்கியக் காரணம், குடல் ஆரோக்கியம், செரிமானம், வீக்கத்தைக் குறைத்தல், உடல் பருமன் போன்றவற்றை மேம்படுத்த உதவும் ஆரோக்கியமான புரோபயாடிக்குகள் மற்றும் ப்ரீபயாடிக்குகள் உள்ளன.

ஆய்வு என்ன சொல்கிறது?

விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வளர்சிதை மாற்ற நிலைமைகள் குறித்த ஆய்வின்படி, தயிர் சாப்பாட்டுடன் அல்லது உணவுக்குப் பிறகு சாப்பிடுவதை விட உணவுக்கு முன் சாப்பிடுவது நல்லது என்று கண்டறியப்பட்டது. உணவு உண்பதற்கு முன் தயிர் சாப்பிடும் பெண்கள் குடல் அழற்சியில் கணிசமான குறைப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது கண்டறியப்பட்டது.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின்படி, குளிர்காலத்தில் தயிர் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது உங்கள் சுரப்பிகளில் இருந்து சுரப்பை அதிகரிக்கிறது, இது சளி சுரப்பை மேலும் அதிகரிக்கிறது. தாஹி இயற்கையில் கபா-கர் ஆகும், இதனால் ஏற்கனவே ஆஸ்துமா, சைனஸ் அல்லது சளி மற்றும் இருமல் போன்ற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது கடினமாக இருக்கும். எனவே ஆயுர்வேதம் குளிர்காலத்தில் மற்றும் குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் தவிர்க்க அறிவுறுத்துகிறது.

குளிர்காலத்தில் தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?

தயிர் குளிர்ச்சியான ஆற்றலைக் கொண்டுள்ளது, ஆனால் குளிர்காலத்தில் அதை உட்கொள்ளும் போது தேன் மற்றும் கருப்பு மிளகு அல்லது வறுத்த சீரகப் பொடி போன்ற மசாலாப் பொருட்களுடன் கலந்து ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பாக இருக்கும், இது ஆற்றலை சமநிலைப்படுத்த உதவுகிறது, உடலில் சளி உருவாவதைக் குறைக்கிறது. செரிமானம் மற்றும் மலச்சிக்கலை மேம்படுத்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

எத்தனை மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது?

தயிரில் உங்கள் குடலுக்கு நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, அவை உங்கள் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இந்த புளித்த உணவு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குளிர்கால நாட்களில் தயிர் சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மாலை 5 மணிக்குப் பிறகு தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சளியை உருவாக்கும், குறிப்பாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.


 Click here to join whatsapp group for daily health tip

சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் - டிஎன்பிஎஸ்சி

 சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு டிசம்பர் 22க்கு பதிலாக 26ம் தேதி நடைபெறும்  என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

முன்னதாக,  தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான ஆதிசேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கணினி வழியில்,  சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி, திருநெல்வேலி,சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில்  டிசம்பர் 22 அன்று கணினி வழியில் நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தேர்வை டிசம்பர் 26ம் தேதிக்கு டிஎன்பிஎஸ்சி மாற்றி வைத்துள்ளது.  அதன்படி, டிசம்பர்  26 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும்.  


 Click here to join WhatsApp group for Daily employment news 

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 7301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 நிலை தேர்வை கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடத்தியது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாநிலம் முழுவதும் 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்ததது.

குரூப்- 4 பதவிகளுக்கான தெரிவு முறை குறித்த விவரங்களை இங்கே காண்போம்.  

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு வகையாக தெரிவு முறைகளை (Selection procedure) பின்பற்றுகிறது.

குரூப் 1, குரூப் 2  உள்ளிட்ட பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

சிறைக் காவலர், கல்வித் துறையில் உள்ள நிதியாளர், கால்நடை உதவி மருத்துவர் ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தெரிவு முறை:  முதற்கட்டமாக,  குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் Interactive mode-ல் வெளியிடும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


சில தினங்களுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும்.

2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும்,6366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:

இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான, விவரங்களை Interatcive Mode-ல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர்  மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.  தெரிவுப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிடும்.

கலந்தாய்வு:      

ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில்    விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள்  Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். `அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு நாள் கலந்தாய்வு முடிந்த பிறகும், துறை வாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

வெளியானது குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிக்கான  முதல்நிலை போட்டி தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்த உத்தேச விடைக் குறிப்பை மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு  கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணப்பித்த 3.22 லட்சம் பேரில், 1.9 லட்சம் பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். 05.12.2022 அன்று மாலை 5.45 மணிக்குள்  தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம். மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவுப்படுத்தியுள்ளது.

பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், இறுதியான விடைகள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியானது தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

05.12.2022 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

COMBINED CIVIL SERVICES EXAMINATION- I IN

GROUP- I SERVICES TENTATIVE ANSWER KEYS

 Click here to join WhatsApp group for Daily employment news 


 Click here to join WhatsApp group for Daily employment news