IOCL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 IOCL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Civil Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Civil Engineer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் சமபந்தபட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.11.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Air India Express ஆனது Senior Trainee Pilot பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Trainee Pilot பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.11.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TVS நிறுவனத்தில் வேலை தேடுவாரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

 TVS நிறுவனத்தில் வேலை தேடுவாரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Senior Applications Engineer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை TVS Motor Company ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நிறுவனம்TVS Motor Company
பணியின் பெயர்Senior Applications Engineer
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறைOnline

TVS Motor காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Applications Engineer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Applications Engineer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.TECH/M.TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS Motor வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Applications Engineer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS Motor முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Applications Engineer தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதிநாள் முடித்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


 Click here to join WhatsApp group for Daily employment news 

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை.. தேர்வு இல்லை..

 திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விவரங்கள் இதோ.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்Veterinary Consultant
காலிப்பணியிடம் 8
கல்விB.V.SC & A.H with computer Knowledge
சம்பளம்ரூ. 43,000/-
இடம்திருப்பூர்

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேரில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

Tirupur District Co-operative Milk producers Union Limited,

Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam road, Tirupur - 641 605.

நேர்காணல் நடைபெறும் நாள் : 14.12.2022 காலை 11 மணி. நேர்காணலுக்குச் செல்லும் போது தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்லவும்.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ஏன் உணவில் கொத்துமல்லி சேர்த்துக்கொள்வது அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

 ஒரு பொருள் கொத்தமல்லி ஆகும். பெரும்பாலும் சமைத்து பிடித்த பிறகு, உணவுக்கு அழகூட்டவும், மனமூட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று கொத்தமல்லி விதைகளையும் நாம் தனியா தூள் அல்லது மல்லித்தூள் என்ற பெயரில் அனைத்து வகை சமையல்களிலும் சேர்த்துக் கொள்கிறோம்.

டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கொத்தமல்லி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் கொத்தமல்லி மற்றும் மல்லி விதைகள் இரண்டுமே பல விதமான தைராய்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன.

தைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள இந்த உறுப்பு தான் நமது மெடபாலிச நடவடிக்கைகள் தொடர்பான ஹார்மோன்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கிறது.

இந்த ஹார்மோன்களில் சீரற்ற நிலை ஏற்படுவதைத் தான் ஹைபோதைராய்டிஸம் அல்லது ஹைப்பர்தைராய்டிஸம் என்று குறிப்பிடுகிறோம். முதலாம் பிரச்சினை என்பது தைராய்டு சுரப்பி செயல்படாத நிலையை குறிப்பிடுவது ஆகும். இரண்டாவது பிரச்சினை என்பது தைராய்டு சுரப்பி மிகுதியாக வேலை செய்வதை குறிப்பிடுவதாகும்.

கொத்தமல்லி பலன் தருமா?

தைராய்டு பிரச்சினையை சமாளிக்க கொத்தமல்லி உதவிகரமாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துவம் பரிந்துரை செய்கிறது. கொத்தமல்லியில் உள்ள பல்வேறு பண்புக்கூறுகள், இரண்டு விதமான தைராய்டு பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகின்றன.

ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள்

கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தைராய்டு போன்ற குறைபாடுகள் மற்றும் நோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்க உதவுகிறது. பொதுவாக, பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கான மருந்தாக மல்லி விதைகள் பயன்படுகின்றன.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு

உடலில் தைராய்டு பிரச்சினை ஏற்படுவதற்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும். கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தக் கூடியது என்ற நிலையில், அதன் விளைவாக தைராய்டு பிரச்சினையும் கட்டுக்குள் வரும்.

உடல் எடை இழப்பு

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு கொத்தமல்லி விதைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். அத்துடன் உடல் எடையை குறைத்தால் தைராய்டு பிரச்சினையும் கட்டுப்படும்.

கொத்தமல்லியை எப்படி சாப்பிடலாம்..?

கொத்தமல்லியை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து தமிழர்களுக்கு விரிவாக சொல்லத் தேவையில்லை. இருப்பினும் இந்த சமயத்தில் நினைவூட்டுவது சிறப்பாகும். காலை டிபனுக்கான சட்னியில் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.

சுக்கு, கொத்தமல்லி, ஏலக்காய், வெல்லம் ஆகியவை சேர்த்து 10 முதல் 20 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி கொத்தமல்லி காஃபி அருந்தலாம். பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் மிகுதியான பலன்கள் கிடைக்கும்.

 Click here to join whatsapp group for daily health tip

அடிக்கடி நீங்கள் ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 5 உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!

 

மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை, மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், உடல் காரணிகள், மருந்துகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.ஆனால் சில நேரங்களில் நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் அல்லது பானங்கள் கூட உங்களது ஒற்றை தலைவலிக்கு காரணமாக இருக்க கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா.? குறிப்பாக சாலட்டி ப்ராசஸ்டு உணவுகள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியை தூண்டலாம். அதிக அளவு சோடியம் உட்செல்வது ரத்த அழுத்தத்தை அதிகரித்து தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியை தூண்ட கூடும்.


நீங்கள் அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால் அதற்கான காரணத்தை முதலில் கண்டறிவது முக்கியம். இதற்கு நீங்கள் சாப்பிடும் உணவுகள் தான் காரணம் என்பதை கண்டறிய எளியவழி நீங்கள் என்ன உணவுகளை சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன பானம் குடிக்கிறீர்கள் என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். உங்களுக்கு ஒற்றை தலைவலி தொடங்கும் முன்பே நீங்கள் இதில் கவனமாக இருப்பது, அது ஏற்பட்டவுடன் எந்த உணவால் எளிதாக கண்டறிய உதவுகிறது. கீழ்காணும் இந்த உணவு & பானங்கள் உங்களது ஒற்றை தலைவலியை தூண்ட கூடும்.

சீஸ் : நீங்கள் சீஸ் அதிகம் விரும்பி சாப்பிடுபவர் என்றால் உங்களது மைக்ரேனுக்கு இது காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இதில் ஒற்றைத்தலைவலியை தூண்ட கூடிய நேச்சுரல் கெமிக்கலான டைரமைன் (tyramine) அதிகம் உள்ளது. இந்த tyramine ரத்த நாளங்களை சுருக்கி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை ஏற்படுத்த கூடும். இந்த கெமிக்கல் புரதம் நிறைந்த உணவுகள் வயதாகும் போது அதில் உருவாவதாக கூறப்படுகிறது. ப்ளூ , ப்ரி, செடார், ஃபெட்டா, மொஸரெல்லா, மியூன்ஸ்டர், பர்மேசன் மற்றும் சுவிஸ் சீஸ் உள்ளிட்டவை டைரமைன் அதிகம் உள்ள சில சீஸ் வெரைட்டிகள் ஆகும்.

அடிட்டிவ்ஸ் : இன்டஸ்டன்ட் நூடுல் பொருட்கள், சூப்கள், சுவையூட்டும் கலவைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உள்ளிட்ட பல உணவுகளில் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) சேர்க்கப்படுகிறது. இது ஒற்றை தலைவலியை தூண்டலாம் என தெரிகிறது. இதை எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஒற்றை தலைவலியை தூண்டுவதாக கூறப்படுகிறது. சோயா சாஸ் மற்றும் இறைச்சி டெண்டரைசர்களிலும் MSG முக்கிய மூலப்பொருளாக காணப்படுகிறது. all natural preservatives மற்றும் hydrolyzed protein என லிஸ்டட் செய்யப்பட்ட பேக்கேஜ்டு உணவுகளில் MSG காணப்படுகிறது.

காஃபின் : காஃபின் அடினோசின் எனப்படும் இயற்கையாக நிகழும் மற்றும் அவசியமான மூளைப் பொருளின் செயல்பாட்டை பாதிக்கிறது. ஒற்றை தலைவலியின் போது ரத்தத்தில் அடினோசின் அளவு அதிகரித்து நரம்புக்குள் செல்வது ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது. காஃபின் இரு சாத்திய வழிகளில் மைக்ரேனை தூண்டுகிறது. காபி அல்லது மற்ற காஃபினேட்டட் பானங்கள் குடிப்பது ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் அதே நேரம்,காஃபின் பழக்கத்தை கைவிடும் முயற்சிகளும் அடிக்கடி ஒற்றைத் தலைவலியை தூண்ட கூடும். காபி 6.3% - 14.5% வரை ஒற்றை தலைவலியைத் தூண்டுவதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆல்கஹால் : ஆல்கஹால் எடுப்பது ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஒற்றை தலைவலியை ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் சுமார் 35.6% பேருக்கு மதுபானங்கள் வலியை தூண்டுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 77.8% பேர் மைக்ரேநாய் தூண்டுவதில் ரெட் ஒயின் பொதுவான மதுபானமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

சாக்லேட் : ஒற்றைத் தலைவலியை தூண்டும் முக்கிய உணவு தூண்டுதலாக சாக்லேட் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரேனை தூண்டும் உணவாக சாக்லேட் இருக்க காரணம் அதில் இருக்கும் காஃபின் மற்றும் பீட்டா-ஃபைனிலெதிலமைனாக இருக்கலாம். இந்த இரண்டுமே ஒற்றைத் தலைவலியை தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. ஒற்றைத் தலைவலி உள்ள நோயாளிகளுக்கு நிபுணர்கள் வழங்கும் முக்கிய அறிவுரை சாக்லெட்டை தவிர்த்து விடுங்கள் என்பது தான்.

 Click here to join whatsapp group for daily health tip

காலை அல்லது மாலை... எந்த நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை விரைவில் குறையும்

நீங்கள் தினமும் செய்யும் சில விஷயங்கள் உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ளது. இதில் உங்கள் தினசரி உணவுகள், உடற்பயிற்சிகள் அடங்கும். இருப்பினும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது என்பது குறித்து அடிக்கடி குழப்பமடைகிறார்கள். 
சிலர் மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் நாள் ஆரோக்கியமாகவும், அமைதியான வழியிலும் தொடங்க காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய விரும்புகின்றனர். மற்றவர்கள் சோர்வில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழியாக மாலையில் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். 
உடல் எடையை(weight) குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும்(weight) ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦ முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும். காலையில் உடற்பயிற்சி செய்வதால் வளர்சிதை மாற்றம் மேம்படும். அதாவது இது நாள் முழுவதும் உடம்பில் உள்ள கலோரிகளை தொடர்ந்து எரிக்கும். உண்மையில், காலையில் உடற்பயிற்சி செய்வது 
மாலையில் உடற்பயிற்சி செய்வதை ஒப்பிடும்போது நன்றாக தூங்க உதவும். மேலும் காலை உடற்பயிற்சி உங்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. காலை உடற்பயிற்சியின் போது வெளியிடப்பட்ட எண்டோர்பின்கள் உங்களது நாளை உற்சாகத்துடன் தொடங்க உதவுகிறது. 

காலை உடற்பயிற்சியானது மாலை உடற்பயிற்சியை விட ஒரு நபரின் மனநிலையை ஆக்டிவாக வைத்து கொள்கிறது. மேலும், இது நாள் முழுவதும் உங்கள் மனதை விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறது. மாலை உடற்பயிற்சி சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. உடல் தசைகளை வலுப்படுத்த மாலை சிறந்த நேரமாக உள்ளது. அதிக தீவிரம் கொண்ட பயிற்சி மற்றும் சக்தி வாய்ந்த உடற்பயிற்சி, எடை பயிற்சி மற்றும் உயர்-தீவிரம் கொண்ட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம். 
உடல் வெப்பநிலை பொதுவாக பிற்பகலில் சூடாக இருக்கும், என்பதால் இது உங்கள் தசைகளை வலுவாக்க சிறந்த நேரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காலை அல்லது மாலை நேர உடற்பயிற்சிகளுக்கும் வெவ்வேறு நன்மைகள் உள்ளன. ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாளின் எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். உங்கள் உடற்பயிற்சியின் நோக்கம் மற்றும் உங்கள் வசதியை பொறுத்து நீங்கள் வொர்க்அவுட் செய்ய நேரத்தைத் தேர்வு செய்யலாம். ஆனால் உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழி வழக்கமான உடற்பயிற்சி செய்வது தான் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் அதனுடன் உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நான் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். கடுமையான உடற்பயிற்சியை செய்து விட்டு நன்றாக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்காது.

 Click here to join whatsapp group for daily health tip

காலை நேர உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோமா

 சோம்பலை உதறி காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அது உடலிலும் மனதிலும் புரியும் மாயாஜாலங்கள் என்னென்ன தெரியுமா? மன அழுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட அதிகாலை உடற்பயிற்சியே அருமையான வழி. காலைநேர உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்பின், டோபமைன் ஆகியவை அதி கரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன்கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. 


உடற்பயிற்சி என்றாலே கடினமான பயிற்சிதான் பலன் தரும் என்று சிலர் கருதுகிறார்கள். கடினமான 'ஜிம்' பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. எளிதான 10 நிமிட 'வார்ம் அப்' பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முதல் 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. உடற்பயிற்சியானது வாழ்நாளை அதிகரிப்பதோடு, உடல் முதுமை அடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது.

 காலை உடற் பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காலைப் பயிற்சி அவசியம். நவீன தொழில்நுட்ப வசதிகளால் இன்று உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்டது. இந்நிலையில், உடற்பயிற்சியின் மூலம் உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுப்பது அவசியம். வெளிப்புறங்களில் பயிற்சியில் ஈடுபட சரியான நேரம் அதிகாலை வேளைதான். இரைச்சலும், சுற்றுச் சூழல் மாசுபாடும் குறைந்த அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, உடலையும் மனதையும் ஒருசேர உற்சாகப்படுத்தும். 

காலையில் தாமதமாக எழுந்து மந்தமாகத் தொடங்குவதைவிட, சூரியன் எழுவதற்கு முன் எழுந்து சுறுசுறுப்பாய் செயல்படத் தொடங்குங்கள். அதன் நற் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.



முருங்கையின் மகத்துவம்! முருங்கையின் அனைத்து பாகங்களும் மாமருந்து!

 முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால், உடலில் ஆற்றல் நிலை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது, இறைச்சி மற்றும் மீன் உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு, முருங்கை ஒரு வரப்பிரசாதம். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது. முருகைக்காயின் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

முருங்கைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

1. முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதனுடன், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

 2. தற்போதுள்ள கால கட்டத்தில் பெரும்பாலானோருக்கு இரத்த சோகை உள்ளது. முருங்கை உங்கள் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதன் காரணமாக, இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவது எளிது. இதில் உள்ள புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவற்றின் திசுக்களைப் பாதுகாக்கின்றன.

3. இதன் இலைகளை அரைத்தும் ஃபேஸ் பேக் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்தின் பொலிவை மீட்டுக் கொண்டு வந்து முகத்திற்கு புதிய பொலிவைத் தருகிறது. முருங்கை இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதனுடன் முடி உதிர்தலில் இருந்து விடுபட உதவுகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக முருங்கை காயையும் கீரையையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்றின் வளர்சிதை மாற்றத்தை சீர் செய்கிறது, இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேராது.

Click here to join whatsapp group for daily health tip

பொள்ளாச்சியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக பொள்ளாச்சியில் வரும் 27-ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 27-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் உற்பத்திதுறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், தகவல் தொழில்நுட்ப துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

மேலும், இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் நல்கும் நிறுவனங்களும் அதிக அளவில் கலந்துகொள்ள உள்ளன. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.

இம்முகாமிற்கு வருவோர் தங்களது சுயவிவரம், கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், இந்த முகாமின் சிறப்பம்சமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவுகளும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகளும் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login-ல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 9790199681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to join WhatsApp group for Daily employment news  

பணம் சேமிப்பது சம்பாதிப்பதற்கு சமம்…எப்படி?

 பணம் சம்பாதிப்பதைவிட, அதை புத்திசாலித்தனமாக செலவழிப்பதிலும், சேமிப்பதிலுமே இருக்கிறது லைஃப் ஸ்டைலின் வெற்றி. கிரெடிட் கார்டு தொடங்கி, ஹோம்லோன் வரை ஒவ்வொரு விஷயத்திலும் தேர்ந்தெடுப்பது முதல் பயன்படுத்துவது வரை தேவை... அதீத கவனம். எப்படி என்று பார்க்கலாமா?



ஆயுள் காப்பீடுகளில், டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகமுக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டும்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானத்தைப்போல 10 மடங்கு தொகைக்கு கவரேஜ் எடுக்கலாம். இளம்வயதிலே இந்தப் பாலிசியை எடுக்கும்போது, பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். அதாவது 30 வயதுடைய நபர், 30 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய நினைத்தால், ஆண்டு பிரிமியம் 9 ஆயிரம் ரூபாய்தான். இது மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் போல ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு, சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா... தேதி உறுதியாகத் தெரிந்தால், தேவைப்படும் தொகைக்கு ஆர்.டி அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இன்றே முதலீட்டை ஆரம்பியுங்கள். தேதி உறுதியாகவில்லை எனில், வங்கிக் கணக்கு அல்லது குறுகியகால டெபாசிட், ஃப்ளக்ஸி டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

தங்கத்தில் முதலீடு எனும்போது, தங்க நகைச் சீட்டுத் திட்டங்கள், தங்கக் காசுகள் என்று சிந்திப்பதைத் தவிர்க்கலாம். நகைச் சீட்டு என்பது சரிவர நெறிப்படுத்தப்படவில்லை என்பதால், ரிஸ்க் உங்களைச் சேர்ந்ததே! தங்கக் காசுகளை விற்கும்போது 23% கழிவு இருக்கும் என்பதால் இதுவும் நமக்கு நஷ்டமே. கோல்டு இ.டி.எஃப் அல்லது கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் தங்கம் உலோகமாக இல்லாமல் யூனிட்களாக சேமிக்கப்படுவதால், கழிவின்றி அன்றைய விலைக்கு யூனிட்களை விற்று, தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்காவது மருத்துவ காப்பீடு எடுப்பதுதான் இக்காலத்துக்கு நல்லது. மேலும் அடிக்கடி வரும் சின்னச் சின்ன மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகையை, வங்கிக் கணக்கு அல்லது ஃபிக்ஸ்ட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்து, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய நிலையில் இருவர் உள்ள குடும்பத்துக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தேவை. இதுவே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு பணவீக்கம் 7 சதவிகிதம் என்றிருந்தாலே சுமார் 58 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். எனவே, ஓய்வு காலத்துக்குத் திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகையுடன் கூடுதல் தொகையையும் முதலீடு செய்யலாம்.

நீண்டகால தேவைகளுக்கும், 500 ரூபாய் முதல் 1,50,000 வரை பி.பி.எஃப்  திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் சுமார் 3.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  வி.பி.எஃப், பி.பி.எஃப் திட்டங்களுக்கு கூட்டுவட்டி விகிதம் கணக்கிடப்படும். வருமான வரிச்சலுகையும் உண்டு.

குழந்தைகளின் உயர் கல்விக்கு, கிட்டத்தட்ட 13 - 15 வருடங்களுக்கு முன்பிருந்தே சேமித்து வரலாம். அதாவது ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் 2 ஆயிரம் ரூபாயை அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், 13,37,014 ரூபாய் கிடைக்கும். இதில் உங்களின் முதலீடு என்பது 3,60,000 ரூபாய்தான். கல்லூரியில் சேரும் காலத்துக்கு முன்பே நாம் டார்கெட் செய்த தொகை வந்துவிட்டால், அப்போதே பணத்தை எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துவிட வேண்டும் அப்போதுதான் சந்தையின் ஏற்ற இறக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

பிள்ளைகளின் திருமணத்தை நடத்த இன்றைக்கு 10 லட்ச ரூபாய் தேவை எனில், இன்னும் 20 வருடங்கள் கழித்து 70 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இதுபோன்ற நீண்டகால தேவைகளுக்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நல்ல வருமானம் தரும். அதாவது எஸ்.ஐ.பி முறையில் மாதம் 4,675 ரூபாய் என, 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில், 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வில் உங்களுக்கு 70 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் நீங்கள் மொத்தமாக 11.22 லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்திருப்பீர்கள்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கடன் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திப் பராமரித்தால் மட்டுமே பலன். இல்லையென்றால், வட்டிக்கு வட்டி என்று ஓய்ந்துவிட வேண்டியதுதான். வட்டி விகிதம் குறைந்தபட்சம் 24 - 36% என்பதால், இ.எம்.ஐ. முறையில் பொருட்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில் செலுத்தவில்லை எனில் அபராதம் இருக்கும். ஒழுங்காகச் செலுத்தவில்லையெனில், உங்களின் பெயர் சிபில் ரிப்போர்ட்டில் சேர்ந்துவிடும். பிறகு, உங்களால் வேறு எந்த வங்கியிலுமே கடன்கள் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்படும்!



பொதுத்துறை வங்கிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்கள் 16 - 18% வரையிலான வட்டியில் கடன் தருகின்றன. எனவே, சேமிப்புப் பணத்தில் வாகனம் வாங்குவதே சிறந்தது. அடுத்த வருடம் பைக் வாங்க வேண்டும் எனில், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) முறையில் வங்கிகளில் முதலீடு செய்யலாம். இதில் 7.5 - 9% வரை வட்டி கிடைக்கும். அதாவது, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தினால், ஓராண்டு முடிவில் சுமார் 38 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் வாங்கவிருக்கும் பைக்கின் விலையைப் பொறுத்து, மாதாந்திர தொகையை அதிகரிக்கலாம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட சரியான திட்டமிடல் இருந்தால் நாம் சம்பாதிப்பது குறைவாக இருந்தாலும் வாழ்க்கை நிறைவாக இருங்கள். எதையும் பிளான் பன்னாம பன்னக் கூடாது…ஓகே? 

Click here to join whatsapp group for daily health tip

அரசு சுகாதார அலுவலகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: 

1.  கணக்கு உதவியாளர் - 1

கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.16,000 /-

2. பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist)

கல்வி தகுதிபிசியோதெரபி  படிப்பில் இளம்நிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.13,000 /-

3. நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர்

கல்விதகுதி: செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம் ரூ.25,000

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,

திருவண்ணாமலை.

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here to join WhatsApp group for Daily employment news  

கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க வேண்டும் - அரசின் அசத்தல் திட்டம்!

 

NCS digisaksham portal: இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டு  மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை (National Career Service Portal)  தொடங்கியது. கிட்டத்தட்ட Naukri, Linkedin Job Search போன்ற இணைய சேவைகளுக்கு நிகரான வாய்ப்பை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது.

வேலை தேடக்கூடியவர்களை, பொருத்தமான வேலையளிக்கும் நிறுவனங்களோடு இணைப்பதுடன், தொழில் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 26ம் தேதி நிலவரப்படி, இந்த  இணையதளத்தில் 4,82,264 காலி இடங்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இந்த சேவையின் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம்: கிராமப்புற இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை  வழங்கி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட்  நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இணைந்து DIgisaksham எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து இளைஞர்களும் இந்த திறன் படிப்பில் எந்தவித கட்டணமின்றி சேர்ந்து கொள்ளலாம். Excel, Python, Azure, Java,  Security Fundamentals ஆகிய பாடநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

சுயமாக கற்கும் முறை, ஆன்லைனில் பயிற்ச்சியாளர்கள் மூலம் கற்கும், நேரடி பயிற்சி வகுப்புகள்  (  Digital Skills – Self paced learning, VILT mode training (Virtual Instructor led) and ILT mode training (Instructor led) என மூன்று வழிமுறைகளின் கீழ் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் (Model Career Centres) மற்றும் எஸ்சி/எஸ்டி தொழில்நெறி வழிகாட்டு மையங்களை தொடர்பு கொண்ட பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம். இணைய வழியாக பயிற்சியை மேற்கொள்ள  https://www.ncs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு - மாதிரி தொழிற்நெறி வழிகாட்டு மையம்

எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் (National Career Service Centre For SC/ST) சென்னை சாந்தோமில் இயங்கி வருகிறது.

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் NCS போர்டல் மூலமாகவோ, நேரடியாகவோ மைக்ரோசாப்ட் வழங்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் , உங்கள் கணினித் திறன்கள் அதிகரிப்பதுடன் சந்தையில் மிகச் சரியான வேலையை தேர்ந்தெடுக்க உதவும்.


 Click here to join WhatsApp group for Daily employment news  

வேலை தேடுபவரா நீங்கள்..! 40,000 காலியிடங்கள் - தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

 Private Job Fair: சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.

40,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்:

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள் காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ம் வகுப்பு., 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmailcom என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


 Click here to join WhatsApp group for Daily employment news  

குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...

 குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பல்வேறு நோய்களின் தாக்குதல்களும் அதிகரித்துவிட்டன. அதில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம்/ஹைப்பர் டென்சன்.

பொதுவாக குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் குறைவான வெப்பநிலையானது தற்காலிகமாக இரத்த நாளங்களை குறுகச் செய்யும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் குறுகிய நரம்புகள் மற்றும் தமனிகளின் வழியாக இரத்த செலுத்த அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கிறது.

எனவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க, உடலின் வெப்பநிலையை சீராக பராமரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அந்த வகையில் சில உணவுகள் குளிர்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்டிருப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைத்து பராமரிக்கவும் உதவுகின்றன. இப்போது குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி காண்போம்.


வெந்தயம்

வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை நிலையாக பராமரிக்க உதவும். வெந்தய விதைகள் மற்றும் வெந்தய கீரைகளில் உப்பின் அளவு மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் வெந்தய கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இருப்பினும் தினமும் வெந்தயத்தை உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். வெந்தய கீரை கிடைக்காவிட்டால், வெந்தயத்தை பொடி செய்து சேமித்து, உணவில் சேர்த்து வரலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பொதுவாக பச்சை இலைக காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் வெளியேற்றப்படுபதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். எனவே குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க பசலைக் கீரை, முட்டைக்கோஸ், கேல், லெட்யூஸ் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இது தவிர இதில் உள்ள பி வைட்டமின்கள் நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. ஆய்வுகளின் படி, பீட்ரூட்டில் உள்ள அதிகப்படியான நைட்ரேட்டுகள், நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய வைத்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது.

பூண்டு

அன்றாட உணவில் சேர்த்து வரும் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மட்டுமின்றி, பராமரிக்கவும் உதவுகிறது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குளிர்காலத்தில் அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது. வேண்டுமானால், அதிகாலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீர் குடிக்கலாம். இருப்பினும் எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்கும் முன் உங்களை மருத்துவரிடம் கேட்ட பின்னரே முயற்சிக்க வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு

குளிர்காலத்தில் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தொற்றுக்களின் தாக்கத்தை தடுக்க சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழங்கள் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதில் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும் மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. எனவே குளிர்காலத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், ஆரஞ்சு பழத்தை சாப்பிடுங்கள்.

முள்ளங்கி

முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அதைக் குறைக்கவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி, முள்ளங்கி இரத்தத்தை அமைதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், அவ்வப்போது முள்ளங்கியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

 Click here to join whatsapp group for daily health tip