இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவிகள்:
* கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM)
* உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM)
* தபால்காரர் (Dak Sevak)
மொத்த பணியிடங்கள்: சுமார் 30,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி: 2026, ஜனவரி 15
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி. கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி அவசியம்.
மொழித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியைப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
* குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
* அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்
வயது தளர்வு:
* SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
* OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
* மாற்றுத்திறனாளிகளுக்கு – 10 ஆண்டுகள்
விண்ணப்ப முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment