தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு விவரம்

  Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

44538400-0

ஆசிரியர்களது கல்வித்தரத்தை மேம்படுத்தவும், தரமான ஆசிரியர் கல்வியை வழங்கவும் தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ( TAMIL NADU TEACHER EDUCATION UNIVERSITY) ஆகும். இந்த பல்கலைக்கழகம் சென்னை காரப்பாக்கத்தில் அமைந்துள்ளது.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆசிரியர் கல்வியில் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. இவை தவிர புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கும் விதத்தில் பல பயிற்சிகளை வழங்கி கல்வித்தரத்தை மேம்படுத்த உதவியாய் அமைகிறது.


ஏராளமான கலந்துரையாடல்கள், பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றை சிறப்பான முறையில் நடத்தி, உலக தரத்தில் கல்வியை மேம்படுத்த பல்வேறு வகைகளில் பக்கபலமாக அமைகிறது.



இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெற்ற பலர், மிகச் சிறந்த ஆசிரியர்களாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறார்கள்.


இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்


1. கல்வியியல் அறிவியல் துறை (THE DEPARTMENT OF PEDAGOGICAL SCIENCES)


2. மதிப்புக் கல்வித் துறை (THE DEPARTMENT OF VALUE EDUCATION)


3. கல்வி உளவியல் துறை (THE DEPARTMENT OF EDUCATIONAL PSYCHOLOGY)


பட்டத்தையும் ,கல்வித்துறையின் பட்டத்தையும் ஒருங்கிணைந்து வழங்குகிறது .அதாவது ,பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் (பிஎஸ்சி) (BACHELOR SCIENCE)(B.Sc) மற்றும் பேச்சுலர் எஜுகேஷன் (பி. எட்) (BACHELOR OF EDUCATION) (B.Ed.)ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. இந்த படிப்பு நான்கு ஆண்டு படிப்பாகும்.


இந்த இரண்டு படிப்புகளிலும் பிளஸ் 2 முடித்தவர்கள் சேர்ந்து படிக்கலாம். பிளஸ் 2 தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . இருப்பினும் ,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் குறைந்த மதிப்பெண்ணில் தளர்வுகள் உண்டு .


II. முதுநிலை படிப்புகள் (POST GRADUATE PROGRAMMES)


1.எம் எட் (M.Ed) -முதுநிலை கல்வி இயல் பட்டம்)


2. எம். எட். (சிறப்புக் கல்வி) (SPECIAL EDUCATION)


எம்.எட். (M.Ed.) படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பி.எட். (B.Ed.), அல்லது அதற்குச் சமமான ஏதாவது ஒரு கல்வியியல் பட்டத்தில் (எ.கா. B.Sc.Ed., B.A.Ed., B.El.Ed., D.El.Ed. உடன் இளங்கலைப் பட்டம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற கல்வியியல் பட்டத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களை (தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டின்படி 45% மதிப்பெண்களை) பெற்றிருக்க வேண்டும்.


ஆராய்ச்சி படிப்புகள் (RESEARCH PROGRAMMES)


1. பி,எச்டி (Ph.D) (டாக்டர் பட்டம்)


பி,எச்டி (Ph.D) படிப்பில் சேர கல்வியியல் துறையில் (M.Ed.) அல்லது அதற்குச் சமமான முதுநிலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்களை (தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டின்படி 50% மதிப்பெண்களை) பெற்றிருக்க வேண்டும்.


ஆராய்ச்சித் தகுதித் தேர்வுகளில் (NET/SLET/SET) தேர்ச்சி பெற்றிருப்பதும் ஒரு தகுதியாகக் கருதப்படும் அல்லது பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் (ENTRANCE EXAMINATION) தேர்ச்சி பெற வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு


TAMIL NADU TEACHER EDUCATION UNIVERSITY)


GANGAIAMMAN KOIL STREET,


KARAPAKKAM,


CHENNAI - 600 097


இவைதவிர https://tnteu.ac.in இணையதளத்தில் இந்தப்படிப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment