ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தே மாற்றலாம் - புதிய செயலியில் வசதி!

 ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி வர உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

IMG_20251201_094630_wm

இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது. அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு துவக்கவும், நலத்திட்டங்களின் பலன்களை பெறவும் அவசியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, மொபைல்போன் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.



ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

 பள்ளிக்கல்வியின் செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆராய்வதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.


இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை: துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 4-வது வார இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.


அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படும். அதன்படி, வரும் டிசம்பர் மாதத்துக்கான கல்விசார் அலுவல் ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 5-ம் தேதி காணொலி மூலமாக நடைபெறுறது..


இதற்கான கூட்டப் பொருள், அதாவது பள்ளி ஆண்டாய்வு, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, திறன் திட்டம், குறைந்த செயல்திறன் கொண்ட பள்ளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து துரிதமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடக்கக்கல்வித் துறை சார்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடப்பு டிசம்பர் மாதம் பிரத்யேகமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடும் நடைபெறுகிறது.

அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்

 அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.


இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.


தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.




தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.



தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.