10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - கால அட்டவணை வெளியீடு!

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251104_112132

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - கால அட்டவணை வெளியீடு!

10,12rh Public Exam 2026 - Time Table👇👇👇

Download here


தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.


சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.

மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 27-ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடைபெறும். 11-ம் வகுப்பில் தவறிய மாணவர்களுக்கு மார்ச் 3-ம் தேதி முதல் மறுதேர்வு நடைபெறும். 11-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெறுகிறது.


மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 8.07 லட்சம் மாணவர்களும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர்.


கணக்குப்பதிவியல் தேர்வுகளுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்லலாம். ஓவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment