DRDO Recruitment : பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு (DRDO) நிறுவனத்தில் 195 பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 195 அப்ரன்டீஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) - ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் இமாராத் (RCI), அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்களின் விவரம்
மொத்தம் 195 காலியிடங்கள் உள்ளன.

பட்டதாரி அப்ரென்டிஸ் (Graduate Apprentice): 40 காலியிடங்கள்
டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentice): 20 காலியிடங்கள்
ஐ.டி.ஐ. அப்ரென்டிஸ் (ITI Apprentice): 135 காலியிடங்கள்
கல்வித் தகுதிகள்
பட்டதாரி அப்ரென்டிஸ்: ஈ.சி.இ (ECE), ஈ.இ.இ (EEE), சி.எஸ்.இ (CSE), மெக்கானிக்கல் (Mechanical) அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering) ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


டிப்ளமோ அப்ரென்டிஸ்: மெக்கானிக்கல், கெமிக்கல், சி.எஸ்.இ, ஈ.இ.இ அல்லது ஈ.சி.இ இன்ஜினியரிங்கில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ. அப்ரென்டிஸ்: ஃபிட்டர் (Fitter), வெல்டர் (Welder), டர்னர் (Turner), மெஷினிஸ்ட் (Machinist), மெக்கானிக்-டீசல் (Mechanic-Diesel), டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) (Draughtsman), எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic), எலக்ட்ரீசியன் (Electrician), கோபா (COPA) அல்லது லைப்ரரி அசிஸ்டென்ட் (Library Assistant) ஆகியவற்றில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் சம்பளம்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
சம்பளம்: DRDO RCI-யின் ஆட்சேர்ப்பு விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
வயது தகுதி : செப்டம்பர் 1, 2025 அன்றைய நிலவரப்படி விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்களின் தேர்வு பின்வரும் முறைகளின் அடிப்படையில் நடைபெறும்:
கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு (Shortlisting of Application)
ஆவண சரிபார்ப்பு (Document Verification)
மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.drdo.gov.in/drdo/careers என்ற தளத்தில் உள்ள விபரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.09.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2025


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment