8, 10, 12 தகுதி போதும்; பால் தொழிலில் கலக்கலாம் - ஆவில் வழங்கும் 3 இலவச பயிற்சிகள், வேலைவாய்ப்பும் தயார்!

 

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பல்துறைகளில் குறுகிய கால திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆவின் மூலம் 3 சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஆவின் மூலம் பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர், செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி பயிற்சி மற்றும் பால் தொழில்முனைவோர் பயிற்சி ஆகியவை முற்றிலும் இலவசமாக பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைத்து வெற்றி நிச்சயம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பல்துறைகளில் இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். மேலும், இதில் பயிற்சி பெறும் நபர்களுக்கு ரூ.12,000 வரை உதவித்தொகையுடம் உண்டு. பயிற்சியை முடித்தவுடன் அதற்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

ஆவின் வழங்கும் 3 சான்றிதழ் படிப்புகள்
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசின் ஆவின் மூலம் 3 சான்றிதழ் படிப்புகள் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படுகிறது. அவை,
  • பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர் (Milk Collection and Accounting Associate)
  • செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி பயிற்சி (Artificial Insemination and First Aid)
  • பால் உற்பத்தி தொழில்முனைவோர் பயிற்சி (Dairy Entrepreneur)
பால் சேகரிப்பு பயிற்சி
  • பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர் பயிற்சி மொத்தம் 20 நாட்கள் அதாவது 162 நிமிடங்களுக்கு வழங்கப்படும்.
  • பால் சேகரித்தல், அளவு பதிவு செய்தல், சங்கத்தில் கணக்குகளை பார்த்துகொள்ளுதல், உறுப்பினர்களின் விவரங்களை பராமரித்தல், பால் கூட்டுறவு சங்களுடன் இடையே உள்ள பரிவர்த்தனைகளை முறையாக மேற்கொள்ளுதல் ஆகியவற்றை குறித்து இப்பயிற்சில் கற்றுகொள்ளலாம். கிராம அளவில் நிர்வாகம், சந்திப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இப்பயிற்சியை பெற 12ஆம் வகுப்பு தகுதி போதுமானது.
  • கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி பயிற்சி
  • இப்பயிற்சி மொத்தம் 56 நாட்கள் வழங்கப்படும்.
  • இதன் மூலம் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்தல், அதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப பயன்பாடு, முதலுதவி ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.
  • இதற்கு 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது.
  • சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
பால் தொழில்முனைவோர் பயிற்சி
  • பால் உற்பத்தில் தொழிலில் தொழில்முனைவோராக வர விரும்புகிறவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம். மொத்தம் 30 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும்.
  • கால்நடைகளை பராமரித்தல், மருத்துவம், பால் உற்பத்தி முறைகள், தர பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான செயல்பாடுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். அவைமட்டுமின்றி, கால்நடைகளுக்கான ஆரோக்கியமான உணவு, குட்டிகளுக்கான பராமரிப்பு, பால் மூலம் விலைக்கூட்டிய பொருட்கள் தயாரித்தல் மற்றும் அதன் மூலம் லாபம் பெறுதல் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
  • பால் சேகரிப்பு பயிற்சி வழங்கப்படும் 29 மாவட்டங்களிலும் இப்பயிற்சியும் வழங்கப்படும்.


    விண்ணப்பிப்பது எப்படி?
    பால் தொழில் சார்ந்த ஆவின் வழங்கும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் திறன் மேம்பாட்டு கழகத்தின் பயிற்சிக்கான இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
    பால் சேகரிப்பு பயிற்சியை பெற விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4400 
  • என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    செயற்கை கருவூட்டல் பயிற்சி பெற விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4399 
  • என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    பால் தொழிலை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4401 
  • என்ற இணைப்பில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு
    இப்பயிற்சி அனைத்து முற்றிலும் நேரடி பயிற்சியாகவே வழங்கப்படும். பயிற்சியை முழுமையாக முடிக்கும் நபர்களுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, இத்தொழில் ஆர்வமுள்ளவர்கள், கிராமப்புற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக பயிற்சி பெறலாம்.

0 Comments:

Post a Comment