தமிழகத்தில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


1376731

தமிழகத்​தில் 350 இடங்​கள் உட்பட நாடு முழு​வதும் கூடு​தலாக 6,850 எம்​பிபிஎஸ் இடங்​களுக்கு அனு​மதி அளித்து தேசிய மருத்​துவ ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ம் தேதி வரை https://mcc.nic.in என்ற இணை​யதளம் வாயி​லாக ஆன்​லைனில் நடை​பெற்​றது.


மீத​முள்ள இடங்​கள் மற்​றும் முதல் சுற்று கலந்​தாய்​வில் இடஒதுக்​கீடு பெற்​றும் கல்​லூரி​களில் சேராதவர்​களால் ஏற்​பட்​டுள்ள இடங்​களை நிரப்​புவதற்​கான 2-ம் சுற்று கலந்​தாய்வு கடந்த 4-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​கியது. கலந்​தாய்வு வரும் 19-ம் தேதி வரை நடக்க உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.


கூடு​தல் இடங்​களை சேர்க்க இருப்​ப​தா​லும், என்​ஆர்ஐ ஆவணங்​களை ஆய்வு செய்ய வேண்டி இருப்​ப​தா​லும், 2-ம் கட்ட கலந்​தாய்வு நீட்​டிக்​கப்​பட்​டது. அதன்படி, 2-ம் சுற்று கலந்​தாய்வு ஆன்​லைனில் செப்​.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. அகில இந்​திய கலந்​தாய்வு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால், தமிழகத்​தில் மாநில கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.


இந்​நிலை​யில், நாடு முழு​வதும் கூடு​தல் மருத்​துவ இடங்​கள் அனு​ம​திக்​கான கல்​லூரி​கள் பட்​டியலை தேசிய மருத்​துவ ஆணை​யம் வெளி​யிட்​டுள்​ளது. அதில், தமிழகத்​தில் 7 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் தலா 50 இடங்​கள் என 350 எம்​பிபிஎஸ் இடங்​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் 6,850 எம்​பிபிஎஸ் இடங்​கள் கூடு​தலாக அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் மருத்​துவ இடங்​கள் எண்​ணிக்கை 1,23,700 ஆக உயர்ந்துள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment