Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பவர்கிரிட் நிறுவனத்தில் களப் பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணிகளுக்காக 1543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலிப்பணியிடங்கள்: கள பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) -532; கள பொறியாளர் (சிவில்)- 198; கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல்) -535; கள மேற்பார்வையாளர் (சிவில்) -193; கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்) - 85,
மொத்தம் 1,543 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
களப் பொறியாளர் (மின்சாரம்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் மின் துறையில் முழுநேர BE / B.Tech / B.Sc (Eng.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
களப் பொறியாளர் (சிவில்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் பிரிவில் முழுநேர பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி.) முடித்திருக்க வேண்டியது அவசியம்.
கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கள மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். கள பொறியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.கள மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கள மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது.
செப்டம்பர் 17-ம் தேதி இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment