10,12th Public Exam : பொதுத் தேர்வுக்கு இனி இந்த கார்டு கட்டாயம்... சிபிஎஸ்இ வாரியம்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அடையாள கார்டு (APAAR IDENTITY CARD) கட்டாயம் என்று மத்திய அரசு இடைநிலை வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 30ம் தேதியன்று, 2026 கல்வியாண்டில் வாரியத் தேர்வுகள் எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்து அனுப்புவது குறித்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் சிபஎஸ்இ அனுப்பியிருந்தது. இந்த பெயர் பட்டியலில் மாணவர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றுடன்  அபார் கார்டு அடையாள சான்றும் இடம்பெற வேண்டும் என்றும்சிபிஎஸ்இதெரிவித்துள்ளது.
அபார் அடையாள கார்டு என்றால் என்ன?  
அபார் (APAAR) என்பதும் ஆதார் போன்ற ஒரு அடையாளச் சான்றாகும். இதன் முழு விரிவாக்கம் ஆட்டோமேட்டெட் பெர்மனன்ட் அகாடமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்டரி (Automated Permanent Academic Account Registry) என்பதாகும். ஆதார் கார்டு போலவே 12 நம்பர்களை கொண்ட கார்டாக இந்த அபார் கார்டு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் மூலம் இந்த கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சிறார் மாணவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் முக்கியம். மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் ஃபோட்டோ மற்றும் UDISE+ Unique Student Identifier (PEN) உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொண்டு இந்த அபார் கார்டு சேவை தொடங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படும். 

பயன்கள் என்ன? 
'ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி என்னும் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதார் கார்டு போலவே இந்தியாவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கார்டு ஒரே சேவையை வழங்க இருக்கிறது. மாணவர்களின் விவரங்கள் இந்த அபார் கார்டு மூலம் நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளப்படுகிறது. இதில் ஆவணங்களும் (Documents) அடங்கும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கடன்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களின் விவரங்களும் இதில் பதிவு செய்யப்படும். ஆகவே, ஏபிசி (ABC) என்று அழைக்கப்படும் அகாடமிக் பேங்க் கிரெடிட் (Academic Bank Credit) சேவையும் இந்த 12 நம்பர் கொண்ட அபார் கார்டு மூலம் அணுகப்படும். இது டிஜிலாக்கர் (Digilockerசேவைகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். ஆகவே,பள்ளி சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெற்று கொள்ள முடியும். கல்விக் கடனை பெறுவதற்கான ஆவணங்களை கொடுக்கும்போது ஏற்படும் சிக்கல்களை இந்த அபார் கார்டு தவிர்த்துவிடும். அதேபோல ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

டிஜிட்டலாக மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எந்தவித சிக்கலும் இல்லாமல் அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இது ஒரு வாழ்நாள் அடையாள அட்டையாக இருப்பதால், மாணவர்கள் ஆரம்ப கல்வியை தொடங்குவது முதல் உயர் படிப்பு வரையில் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

சான்றிதழ்களை (Physical Certificates) எடுத்து செல்வதையும், இது குறைக்க இருக்கிறது. இது ஆதார் கார்டு ų (verification) செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதால், இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. இது வரும் நாட்களில் அனைத்து மாநிலங்களிலும்
ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பள்ளி ஆவணங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் பெயர் ஆதாரில் இடம்பெறுள்ள பெயருடன் பொருந்தி போகாமல் உள்ளன. இதனால், ஆதாருடன் இணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் 18.47% சதவிகித பள்ளிகள் மட்டுமே இணைய வசதியை கொண்டுள்ளன. மேலும், விளிம்பு நிலையில் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் போதிய ஆவணங்கள் இருப்பதில்லை. அத்தியாவசிய பொது சேவைகளுக்கு ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல்  கல்வியை விட்டு வெளியேறி வரும் நிலையில்,  அபார் காரட்டை கட்டாயமாக்கியிருப்பது மேலும் சில மாணவர்கள் மேல்நிலை கல்வியில் இருந்து விலக்கி வைப்பதாக முடியும் என்று கல்வியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.   மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 12 நம்பர்களை வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவது, ஆவணங்களை சமர்ப்பிப்பது போன்றவற்றை செய்து கொள்ள முடிவதால், மாணவர்களும் இதற்கு மாறலாம்.

சிக்கல்கள்அபார் (APAAR) அடையாளச் சான்று பெறுவது கட்டாயமில்லில் என்று மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே விளக்கமளித்திருந்த  நிலையில், அபார் திட்டத்தின் பலன் 100% சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அடையாள கார்டை (APAAR IDENTITY CARD) கட்டாயதாக்கியுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment