Madurai Job Recruitment : மாதம் ரூ. 40 ஆயிரம் வரை சம்பளம்... அரசு மருத்துவமனையில் வேலை

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் மரபணு ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 22.08.2025 அன்று மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன. 
காலியிடங்கள்:  
முதுநிலை ஆய்வக நுட்புனர் (மரபணு) : கல்வி தகுதி - மரபணு தொழில்நுட்பம் தொடர்பான படிப்பில் முதுநிலை பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும். வயது 40 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ, 40 ஆயிரம். 


ஆய்வகம் மற்றும் பண்டக உதவியாளர் பணிக்கு மருத்துவ ஆய்வக படிப்பில் பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும்.வயது 40 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ.12 ஆயிரம். 
மண்டல தரக்கட்டுப்பாடு ஆலோசகர் பணிக்கு எம்பிபிஎஸ்/டெண்டல்/ முடித்திருக்க வேண்டும்.வயது 40 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ.40 ஆயிரம்.

EDSS –LIMS IT ஒருங்கிணைப்பாளர் - பணிக்கு MCA / BE /B.Tech  ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது 35 ற்க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம்- ரூ.16,500.
நிபந்தனைகள்:
  1. இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
  4. விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

  5. விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்
    1. பிறப்புச்சான்று
    2. மதிப்பெண் பட்டியல்கள்  (S.S.L.C, +2, Degree)
    3. மாற்று சான்றிதழ் (Transfer Certificate)
    4. சாதி சான்றிதழ் (Community Certificate)
    5. இருப்பிட சான்று
    6. முன் அனுபவச் சான்று (அரசு வழிகாட்டுதலின்படி)
    7. சிறப்பு தகுதிக்கான சான்று (Transgender / Differently abled person / Destitute Women or Widow / Ex-Service Man/ Any vulnerability as decided by the Chairman District Health Society) 

      விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம் : மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை 625 014 ஆகும்


      விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice category/recruitment/ என்ற  முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகபோ சமர்ப்பிக்க வேண்டும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment