ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசின் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை இயக்​குநர் விஷ்ணு சந்​திரன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை​யின்​கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 311 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்​கைக்​கான காலஅவ​காசம் ஜூலை 31 வரை வழங்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர்​களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.



தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். தமிழக அரசு வழங்​கும் விலை​யில்லா சைக்​கிள், சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் மற்​றும் பஸ் பாஸ் வழங்​கப்​படும். இந்த அரிய வாய்ப்பை பயன்​படுத்தி தாங்​கள் விரும்​பும் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களுக்கு கல்​விச் சான்​றிதழ்​களு​டன் நேரில் சென்று விரும்​பும் தொழிற்​பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்​ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்​பாக ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால் 9499055642, 9499055618 ஆகிய செல்​போன்​ எண்​களில்​ தொடர்​பு​கொள்​ள லாம்​.இவ்​​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

0 Comments:

Post a Comment