அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்காக 236 பயிற்சி மையங்கள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

         Education News (கல்விச் செய்திகள்)

1371586

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.


இதுகுறித்​து, அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உயர்​ கல்விக்​கான நீட், ஜேஇஇ உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​கள் எழுத விருப்​ப​முள்ள மாணவர்​களுக்​காக வட்​டார அளவி​லான உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.


இதுத​விர, போட்​டித் தேர்​வு​களுக்கு தயார்​படுத்​து​வதற்​காக இந்த ஆண்டு 38 மாவட்​டங்​களில் இருந்து உயர் தொழில்​நுட்ப ஆய்வக வசதி​யுள்ள 236 வட்​டாரங்​களில் உயர்​கல்வி வழி​காட்டி மையங்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு மாணவர்​களின் உயர்​கல்வி விருப்​பத்​துக்கு ஏற்ப சனிக்​கிழமை​களில் உரிய பயிற்​சிகள் வழங்​கப்​படும். அதில் உயர்​கல்வி சேர்க்​கைக்​கான ஆலோ​சனை​கள், வழி​காட்​டு​தல்​களைப் பெறலாம். இந்த மையங்​களில் பயிற்சி தர முது​நிலைப் பாட ஆசிரியர்​கள் சுழற்சி முறை​யில் நியமிக்​கப்​பட்​டுள்​ளதை உறு​தி​செய்ய வேண்​டும்.

அதே​போல், பயிற்​சிகள் தடை​யின்றி நடை​பெறும் வகை​யில், சார்ந்த வட்​டாரத்​தின் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்​வொரு வார​மும் பணி புரிவதை உறுதி செய்ய வேண்​டும். பயிற்சி அளிக்​கும் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​களுக்கு மதிப்​பூ​தி​யம் ரூ.1,000 வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.







Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

0 Comments:

Post a Comment