பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

    Education News (கல்விச் செய்திகள்)

பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது.


இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும்.


இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும் வழித்​தடங்​களில் மகளிர் மட்​டும் பயணிக்​கும் வகை​யில் 50 சிறப்பு பேருந்​துகளை இயக்​கலாம் என்று ஆலோசித்து வரு​கிறோம்.


இதேபோல், மாணவ-​மாணவி​கள் பேருந்​துகளில் இருக்​கை​யில் அமர்ந்​த​படி பயணிப்​பதை உறுதி செய்​வதற்​காக அவர்​களுக்கு என தனி​யாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்​க​வும் திட்​ட​மிட்​டுள்ளோம்.


அதாவது, பள்​ளி, கல்​லூரி நேரங்​களில் குறிப்​பாக காலை மற்​றும் மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களுக்​குள் நேரடி​யாக சென்று பேருந்து சேவை​கள் அளிக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதி​லும் குறிப்​பாக மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களில் இருந்து பேருந்து சேவை​களை தொடங்​கு​வதற்​கும் உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது.


இதற்​காக சுமார் 25 கல்வி நிறு​வனங்​களை சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் தேர்வு செய்​துள்​ளது. இதில் சுமார் 4 கல்​லூரி​கள் அடங்​கு​வதோடு பெரும்​பாலான பள்​ளி​கள் பெண்​கள் மட்​டும் பயிலும் மேல்​நிலைப்​ பள்​ளி​களாகும். இந்த மகளிர் சிறப்பு பேருந்​துகள் இயக்​கு​வது குறித்​தும், பள்ளி மாணவ-​மாணவி​களுக்​கான சிறப்பு பேருந்து சேவை குறித்​தும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்​பி​யுள்​ளோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்





Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்! 

0 Comments:

Post a Comment