ரூ. 27 ஆயிரம் சம்பளம்... உள்ளூரிலேயே அரசு வேலை காத்துகிட்டு இருக்கு.. முழு விவரம் இதோ..!

 தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர்  பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் தற்காலிகமான பணியிடமாகும்.

கல்வி தகுதி: Post Graduate degree in Social Work/Sociology/ Child Development/Human Rights Public Administration/Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University. OR Graduate in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health /Community Resource Management ஆகிய பட்டப்படிப்பை அதிகாரப்பூர்வமான பல்கலைக்கழகத்தின் கீழ் முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம்: இதற்கு தொகுப்பூதியமாக ரூ.27,804 வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 15.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:  மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, எண்:14. பெருமாள் கோவில் தெரு (SPA Hall). செவன்த்டே பள்ளி அருகில், தென்காசி - 627 811. தென்காசி மாவட்டம் என்ற அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை https://tenkasi.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04633 291125 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment