Education News (கல்விச் செய்திகள்)
10 Points About Kamarajar in Tamil | Kamarajar Speech in Tamil 10 points
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டின் காந்தி, பெருந்தலைவர் இவ்வாறு உலக மக்களால் அழைக்கப்படுபவர் தான் காமராஜர். இவருடைய ஆட்சி காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பாராட்டப்படிருக்கு. இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகள் இருந்து, அப்போது இருந்த அரசியல் வாதிகள் வரை அனைவரும் சொல்வது என்னவென்றால் காமராஜர் மாதிரி நாங்களும் நல்ல ஆட்சியை தருவோம் என்று தான். ஏராளமான தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் நலத்திட்டங்கள், கல்வியில் மிக பெரிய வளர்ச்சி இப்படி தமிழ்நாட்டிற்காகவே உழைத்த உன்னத தலைவர் தான் காமராஜர். இவரது வாழ்க்கை பற்றிய சில தகவல்களை இங்கு நாம் பார்க்கலாம்.
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் – Kamarajar History in Tamil 10 Points:-
குமார ஸ்வாமி காமராஜ் காம ராஜா என்று பிரபலமாக அறியப்படுகிறார். அவர் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் வறுமை மற்றும் பாகுபாடுகளுடன் போராடியது.1920-யில், அவருக்கு 18 வயதாக இருந்தபோது, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டார், மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.காமராஜர் தமிழக முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழ் நாட்டில் Sugar Factory ஒன்றுகூட இல்லாமல் இருந்ததாம். இதன் காரணமாக உடனடியாக காமராஜர் தமிழ் நாட்டில் 10 Sugar Factory-ஐ திறக்க வேண்டும் முடிவெடுத்தார்.
காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இலவச கல்வி மற்றும் சீருடை மற்றும் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறந்தார். 17,000 பள்ளிகளையும் புதிதாகவும் திறந்தார். இதனால் தான் இவர் கல்வி கண் என்றழைத்தார்கள். குழந்தைகள் வறுமையினால் சிறுவயதிலையே வேலைக்கு போனார்கள். இதனை பார்த்து வருத்தப்பட்டார். அதனால் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தார். முதல் முறையாக ஆயிரம் விளக்கு என்ற பகுதியில் தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஒரு வேளை உணவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆனது 37% உயர்ந்தது.
விவசாயம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு சமையம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் போது போற வழியில் சில கிராம மக்கள் ஒன்று சேர்த்து அவர் வந்துகொண்டிருந்த காரை வழிமறித்துள்ளனர். அப்பொழுது காமராஜர் அவரது வண்டியை நிருத்த சொல்லி காரில் இருந்து இறங்கி கிராம மக்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டாராம். அதற்கு அந்த கிராம மக்கள் அவர்கள் ஊரில் மின்சாரம் இல்லை என்று கூறியுள்ளார். உடனே காமராசர் இன்ஜினியர்களை வர சொல்லி என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிமிண்ட் கம்பம் இப்பொழுது இங்கு இல்லை அது வெஸ்ட்பெங்காலில் இருந்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
உடனே இரண்டு நிமிடம் தான் காமராசர் யோசித்தார் அந்த கிராம மக்களிடம் வீட்டுக்கு ஒரு பணம் மரம் குடிப்பிங்களானு கேட்டுருக்காரு. அந்த மக்களும் தரோம்னு சொல்லிருக்காங்க. அந்த பணம் மரத்தை வைத்து கரண்ட் கனெக்சன் கொடுக்க முடியுமா என்று காமராசர் இன்ஜினியரிடம் இன்ஜினியர்கள் கொடுக்கமுடியும் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அந்த கிராமத்திற்கு வெளிச்சம் கிடைத்தது.
இந்தியா சீனா போர் முடிந்த காலத்தின் போது அந்த யுத்தத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் சேதம். அந்த சாமியாயத்தில் காமராஜர் நேரு அவர்களை பார்க்க சென்றுருக்கிறார். அப்பொழுது நேரு ஒரே குழப்பத்தில் இருந்துள்ளார். அப்பொழுது காமராஜர் நேருவிடம் ஏன் இவ்வளவு குழப்பத்தில் இருக்கீங்கன்னு கேட்டுருக்காங்க அதற்கு நேரு நமது இந்திய ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்காவில் சில ஆயுதங்கள் வாங்க வேண்டி இருக்கு.
அதுவும் அங்கு உள்ள பொருட்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் அங்குல ஏதாவது ஒரு வங்கி கேரண்டி தர வேண்டும். ஆனால் எந்த வங்கியும் இந்தியாவிற்கு கேரண்டி தர மறுக்கின்றனர் என்று நேரு காமராஜரிடம் கூறியுள்ளார். அதற்கு காமராஜர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் இந்தியாவில் ஏதாவது அவர்கள் நடத்தும் நிறுவனம் இருக்கிறதா என்று கேட்டார். அப்படி இருந்தால் அந்த நிறுவனகளை உடனடியாக இந்தியாவில் மூட சொல்லுங்கள் என்றார்.
நேருவும் அதன்படி செய்ய அமெரிக்கா நடுங்கிப்போய் நின்றதாம். அதன் பிறகு நமது இந்தியாவிற்கு கேரண்டி கிடைத்ததாம். காமராஜருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தில் ஒன்று தான் பத்திரிகையாளர்களை சந்திப்பது. ஆகவே பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்து ஒரு நண்பரை போல் பழகுவாராம். தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் காமராஜர் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக சொல்லிவிடுவாராம்.
காமராஜர் காரில் செல்லும் போது மேடையில் ஒரு பையன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து, எதிர்க்கட்சியை கடுமையாக விமரிசித்து பேசியுள்ளான். உடனே அவர் சென்றுகொண்டிருந்த கரை நிறுத்தி அந்த பையன் பேசி முடித்த பின் அவனை கூப்பிட சொல்லிருக்காரு காமராஜர்.
அந்த பையன் வந்ததற்கு பிறகு ஓங்கு ஒரு அரைவிட்டுருக்காரு, உனக்கு அரிசியால் பத்தி என்ன தெரியும், படிக்கும் வயதில் உனக்கு அரசியல் தேவையா.. ஒழுங்காக படி, உங்க அப்பாவை அழைத்துக்கொண்டு நேரில் என்னை வந்து பாருன்னு சொல்லிருக்காரு. இந்த பாயிண்ட் எதுக்கு சொல்றேன் அப்படினா காசு கொடுத்து நிறைய ஆட்களை சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு அரசியல் தலைவரை பார்ப்பது அதிசயம் தான்.
ஒரு மனிதனுக்கு கல்வி, நிறம், செல்வம் இந்த மூன்றுமே மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள் ஆனால் இந்த மூன்றுமே பெரிதாக இல்லாத ஒருவர் இந்த உலகத்தையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் அப்படினா அது நமது பெரும் தலைவர் காமராசராக மட்டும் தான் இருக்க முIடியும். 1976-ல் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment