தற்போதைய ஆசிரியர் பணியில் பதவி உயர்வு - சில கேள்விகளும் பதில்களும் - Frequently Asked Questions - Agri Info

Adding Green to your Life

November 1, 2024

தற்போதைய ஆசிரியர் பணியில் பதவி உயர்வு - சில கேள்விகளும் பதில்களும் - Frequently Asked Questions

 

பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முதுகலை ஆசிரியர் ஆகாமலேயே மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆக முடியுமா?


*ஆக முடியும்*


@@@@@@@@@@@@@@@@@@@@@


அதே சமயம் தொடக்கக்  கல்வித் துறையில் ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்,நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆகாமலேயே நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆக முடியுமா?


*ஆக முடியாது*


@@@@@@@@@@@@@@@@@@@@@


ஒரு இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகாமலேயே பட்டதாரி ஆசிரியராக ஆக முடியுமா?


*ஆக முடியாது*


@@@@@@@@@@@@@@@@@@@@@


மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆக எத்தனை ஊட்டு பதவிகளில் உள்ளவர்கள் பதவி உயர்வு அடையலாம்?


*இரண்டு*


அவை என்னென்ன?


(1) மேல்நிலைப் பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர்


(2)உயர்நிலைப் பள்ளியின் மூத்த தலைமை ஆசிரியர்


@@@@@@@@@@@@@@@@@@@@@


உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு எத்தனை ஊட்டு பதவிகள்?


*இரண்டு*

(1)உயர்நிலைப் பள்ளியின் மூத்த பட்டதாரி ஆசிரியர் 


(2)வட்டாரக்  கல்வி அலுவலர்


@@@@@@@@@@@@@@@@@@@@@


நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக எத்தனை ஊட்டு பதவிகள் இருந்தன?


*இரண்டு*


(1)நடுநிலைப் பள்ளியின் மூத்த பட்டதாரி ஆசிரியர்


(2)தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்


@@@@@@@@@@@@@@@@@@@@@


தற்போது எத்தனை பதவிகள் உள்ளன?


*ஒன்று*


(1)நடுநிலை பள்ளியின் மூத்த பட்டதாரி ஆசிரியர் மட்டும்(அரசாணை 243 இன் படி)


@@@@@@@@@@@@@@@@@@@@@


நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற எத்தனை ஊட்டு பதவிகள் இருந்தன?


*இரண்டு*


(1)தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் 


(2)இடைநிலை ஆசிரியர்


@@@@@@@@@@@@@@@@@@@@@


தற்போது எத்தனை பதவிகள் உள்ளன?


*ஒன்று*


(1)தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டும்(அரசாணை 243 இன் படி)


@@@@@@@@@@@@@@@@@@@@@


மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி வேண்டுமா?


*இல்லை*


@@@@@@@@@@@@@@@@@@@@@


முதுகலை ஆசிரியராக நேரடி நியமனம் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி வேண்டுமா?


*இல்லை*


@@@@@@@@@@@@@@@@@@@@@



உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியர்,மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியராகும் போது, *அவர் தற்போது பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்*  என்பது கடைப்பிடிக்கப்படுகிறதா?


*இல்லை*


ஆனால் அவ்வாறு கடைபிடிக்கப்படுவது தான் சரியா?


*ஆம்*


*சரி என்பது ஏன்* ?


UG+BEd+ TET II என்ற A,B,C  என்ற மூன்று தகுதிகளை தன் நிலையில் அடையாமல் அவர் அடுத்த பதவி உயர்வு நிலையை அடைகிறார்

அதற்கு அரசும் அனுமதி அளிக்கிறது.


@@@@@@@@@@@@@@@@@@@@@


உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியர்,மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியராகும் போது, *அவர் தற்போது பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்*  என்பது  கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்பதால் நேரடி நியமனம் பெறும் உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் *ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டாம் என்பது பொருளா* ?


*அப்படியும் இல்லை*


@@@@@@@@@@@@@@@@@@@@@


*ஆசிரியர் தகுதி தேர்வு தாள்* *இரண்டில் தேர்ச்சி  *பெற்றவர்களையே*  *உயர்நிலைப்பள்ளி அல்லது*  *மேல்நிலைப் பள்ளியின்* *ஆசிரியராக/நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய முடியும்*


@@@@@@@@@@@@@@@@@@@@@

அப்படியானால் எந்த பதவி உயர்வு நிலையை அடைகிறாரோ *அந்தப் பதவி உயர்வு நிலைக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டாம் என்பதால்* 

*எந்த பதவியில் இருந்து பதவி உயர்வு அடைகிறாரோ அந்தப் பதவிக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டாம்* என்பதாக அரசு முடிவு செய்துள்ளதாக கருதலாமா?


*கருதிதான் ஆக வேண்டி உள்ளது* என்ற பதிலே தற்போது சரியாக இருக்கிறது.


*ஏனெனில் அப்படிதான் 

பதவி உயர்வுகள் 


HIGH/HIGHER SECONDARY SCHOOL BT 

( *NON TET HOLDERS*)

TO PG 


MIDDLE SCHOOL HM 

( *NON TET HOLDERS*)

TO BEO


PROMOTION நிகழ்ந்து கொண்டு உள்ளது*


இதை தடுக்க முடியுமா?


*முடியும்*


எப்படி முடியும்?


இரண்டு வழிகளில்

(1)உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கு கட்டாயம் என்ற தீர்ப்பு வந்த பிறகு அரசே நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடும் போது மேற்கண்ட பிரச்சனைகளை விவரங்களை சுட்டிக்காட்டி வெளியிடும்போது இதனை தடுக்க முடியும்


(2)அல்லது ஆசிரியர்கள் இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்று அரசிடம் சார்பில் வைக்கும் போது தடுக்கலாம்


(3)மற்ற வழிகளில் தடுக்க வாய்ப்பு இல்லை


(4)பல ஆசிரியர்களின் மனதில் இந்த உயர்நிலை பள்ளி அல்லது மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி  ஆசிரியர்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை,ஆனால் இவர் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்கிறார்.


இவர் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்.ஆனால் இவர் வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அடைந்து செல்கிறார் என்ற எண்ணங்களும் ஏக்கங்களும் மட்டும் இருக்கிறது.இதனை ஆசிரியர்களின் பல்வேறு குழுக்களின் புலன பதிவு வழியாக அறிய முடிகிறது.


ஆனால் வழக்கு தொடுக்கவோ கேள்வி கேட்கவோ யாரும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


@@@@@@@@@@@@@@@@@@@@@


வட்டார கல்வி அலுவலர் நிலைக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமா?


*இல்லை*


*ஏன் தேவை இல்லை,நேரடியாக நியமனம் செய்யப்படும் வட்டார கல்வி அலுவலருக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு தேவை என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணையில் எந்த அறிவிப்பும் இல்லை*


ஆனால் BT/BRTE நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பாணை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


@@@@@@@@@@@@@@@@@@@@@


அரசாணை 243 ல் முரண் உள்ளதாக கருதலாமா?


*ஆம்*


@@@@@@@@@@@@@@@@@@@@@

எப்படியெனில்

மாநிலத்திலேயே மூத்த ஆசிரியர் ஒருவர் தான் விரும்பும் இடத்தை பணியிட மாறுதலின் முதல் முயற்சியில் ,மாநிலத்தின் எந்த பள்ளியிலும்(எந்த ஒரு ஒன்றியம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் ) தேர்ந்தெடுக்கும் வசதி அரசாணை 243 படி உள்ளதா?


*இல்லை*


ஆனால் அரசாணை 243 மாநில பணிமூப்பு அடிப்படையில்தான் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒத்துக் கொண்டுதான் உள்ளார்கள்.


மாநிலப் பணி மூப்பு அடிப்படை பின்பற்றப்படும் போது Single window system என்று அழைக்கப்படும் ஒற்றைச் சாளர வழிமுறை தானே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.ஆனால் அவ்வாறு கடைபிடிக்கப்படுவதில்லை


@@@@@@@@@@@@@@@@@@@@@


உதாரணமாக C என்ற ஒன்றியத்தில் உள்ள ஒரு காலிப்பணியிடத்தை முதலில் C என்ற ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்


அவர்கள் எடுக்கவில்லை என்றால் அந்த C என்ற ஒன்றியம் எந்த  கல்வி மாவட்டத்தில் வருகிறதோ அவர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்


அவர்களும் எடுக்கவில்லை என்றால் வருவாய் மாவட்டத்திற்குள் கலந்து நடைபெறும் பொழுது அவர்கள் எடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்


அவர்களும் எடுக்காத பட்சத்தில் மட்டுமே மாவட்ட மாறுதலில் மாநில  அளவிலான பணி மூப்பு அடிப்படையில்,யார் அந்த மாநிலத்தின் மூத்த ஆசிரியரோ அந்த இடத்தை பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.இதைதான் *மாநில சீனியாரிட்டி* என்று புரிந்து கொள்ள வேண்டுமாம்


@@@@@@@@@@@@@@@@@@@@@


பணியிட மாறுதல் கலந்தாய்வில் பழைய முறைக்கும் இந்த முறைக்கும் மாற்றம் இருப்பதாக கருத முடியுமா?


*கருத முடியாது*


தொடக்கக்கல்வித்துறையை பொறுத்தவரையில் ஏற்கனவே உள்ள நடைமுறை போல் ஒன்றியத்திற்குள் , கல்வி மாவட்டத்திற்குள் ,

வருவாய் மாவட்டத்திற்குள் ,பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற ஏற்கனவே இருந்த நடைமுறையே மீண்டும் கடைப்பிடிக்கப்படுவதால்,அரசாணை 243 இன் படி மாநில சீனியாரிட்டி என்பது இடைநிலை ஆசிரியர்களிடையே பணியிட மாறுதல் கலந்தாய்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதாகவே கருதலாம்.


@@@@@@@@@@@@@@@@@@@@@


தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும்,நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என எங்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்ற ஒரு மாற்றத்தை தவிர வேறு மாற்றத்தை பணியிடமாறுதல் கலந்தாய்வில் இந்த அரசாணை 243 ஏற்படுத்தவே இல்லை ஆனால் பெயர் மட்டும்  *STATE SENIORITY*


@@@@@@@@@@@@@@@@@@@@@

பதவி உயர்வில் முக்கிய பங்கு வகிக்க உள்ள அரசாணை 243,பணியிட மாறுதல் கலந்தாய்வில் மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படாதது ஏன் ?


*விடை தெரியாத கேள்விகளுள் இதுவும் ஒன்று*

@@@@@@@@@@@@@@@@@@@@@


ஒரு  ஒன்றியத்துக்குள்/கல்வி மாவட்டத்திற்குள்/வருவாய் மாவட்டத்திற்குள் இருக்கும் காலிப்பணியிடத்தை அந்த ஒன்றியத்தை/கல்வி மாவட்டத்தை/ வருவாய் மாவட்டத்தை

சார்ந்த ஆசிரியர் மட்டும்தான் பதவி உயர்வில் செல்ல முடியுமா ?


முடியாது. காரணம் G.O 243


@@@@@@@@@@@@@@@@@@@@@


ஒரு  ஒன்றியத்துக்குள்/கல்வி மாவட்டத்திற்குள்/ வருவாய் மாவட்டத்திற்குள் இருக்கும் காலிப்பணியிடத்தை அந்த ஒன்றியத்தை / கல்வி மாவட்டத்தை வருவாய் மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்கள் மட்டும்தான் பணியிட மாறுதலில் எடுக்க முடியுமா ?


ஆம். காரணம் G.O 243


@@@@@@@@@@@@@@@@@@@@@


மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால் இரண்டும் அரசாணை 243 என்ற ஒரே அரசாணையின் படி செயல்படுவது வியப்பின் ஆச்சரிய குறி!!!!!!!!!!!


(பல ஆசிரியர்களுக்கு விடை தெரியாத கேள்விகளுள் இதுவும் ஒன்று)


@@@@@@@@@@@@@@@@@@@@@


தகுதித் தேர்வு I &II,

Ug & Pg Trb போன்ற தேர்வுகள் பணி நியமனத்திற்காக மட்டுமே .

அது எப்படி பதவி உயர்வுக்கு பொருந்தும்?

@@@@@@@@@@@@@@@@@@@@@


அனைவரும் ஏதோ ஒரு வகை நியமன முறையில் பணி நியமனம் ஆகி உள்ள போது பதவி உயர்வுக்கு தேர்வு கட்டாயம் எனில் மீண்டும் அனைவரும் தேர்வு எழுதுவதே சரியான ஒன்றாகும்...


You Can Add More Questions in Comments 



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment