பக்கவாதம் என்பது ஒருவரை வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டு வாழ்க்கையே புரட்டிப் போடக்கூடிய ஒரு மோசமான உடல்நல பிரச்சனை. ஒருமுறை பக்கவாதம் வந்துவிட்டால் அது இரண்டாவது முறையோ அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டாவது முறை பக்கவாதம் வராமல் தடுப்பதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளை தீவிரமாக தடுப்பது மிகவும் அவசியம்.
பக்கவாதம் மற்றும் அதன் அபாயங்களை புரிந்து கொள்ளுதல் :
ரத்தக்கட்டு காரணமாகவோ அல்லது சேதமடைந்த ரத்த நாளங்கள் காரணமாகவோ மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது பக்கவாதம் ஏற்படுகிறது. போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மூளை பாதிப்படைய தொடங்குகிறது. இதனால் பேசுவது, நடமாட்டம் மற்றும் அறிவுத்திறன் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்படும். 2020ல் பக்கவாதம் காரணமாக இறந்தோர்களின் எண்ணிக்கை 6.6 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 9.7 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான பரிந்துரைகள் :
முதல் முறை பக்கவாதம் வந்தவர்கள் ஒரு சில முக்கியமான விதிகளை பின்பற்றுவது அவசியம். இதற்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தடுப்பு முறைகளில் ஈடுபடுவது அவசியம். பொதுவாக பக்கவாதம் என்பது உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பருமன் மற்றும் அதிக ரத்த சர்க்கரை அளவுகளால் ஏற்படலாம். ஆனால் இதனை வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஒரு சில மருந்துகள் மூலமாகவே நம்மால் சமாளிக்க முடியும்.
வழக்கமான பரிசோதனைகளை செய்து கொள்ளுதல் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான போதுமான முயற்சிகளை எடுப்பது மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பங்கு
பக்கவாதத்தை தடுப்பதற்கு உதவும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்கள் சில:-
ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது
எப்பொழுதும் உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்வது
புகையிலையை தவிர்ப்பது
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது
ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது
போதுமான அளவு தூக்கம் பெறுவது
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்
ஆலிவ் எண்ணெய், நட்ஸ் அடங்கிய மெடிட்டரேனியன் உணவை பின்பற்றுவதற்கு பெரியோர்கள் பின்பற்ற வேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். அதாவது ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
பெண்களுக்கான பரிந்துரைகள் :கர்ப்ப காலம் அல்லது வாய்வழி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது பெண்கள் உயர் ரத்த அழுத்தத்தை அனுபவிக்கின்றனர் இதன் காரணமாக அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. இதற்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். எனவே பக்கவாதம் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பெண்கள் அவ்வப்போது சோதனைகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள யுக்திகள் அனைத்தையும் பின்பற்றுவதன் மூலமாக நாம் அனைவரும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முடிந்த அளவு குறைக்கலாம்.
No comments:
Post a Comment