9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்குதல் - SPD செயல்முறைகள்
பொருள்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-600006 மாநிலத்திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர்: திருமதி மாஆர்த்திஇஆப., நக.எண்: 1292/ஆ2/நா.மு-26/ஒபக/2024, நாள்:09.11.2024 :
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 20242025 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி தொடங்கும் செயல்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து,
உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும். மின்னஞ்சல் தொடங்கும் செயல்பாடு: தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர் பொறுப்புகள்: எனவே, 2024 2025 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்குவதற்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கிட அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்கக் காணொளி இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. > மாணவர்களுக்கு புதியதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை EMIS இணைய தளத்தில் பதிவிடுதல் வேண்டும். மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்: மின்னஞ்சலை உருவாக்கிய பின், மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும். > அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச் சொல்லை (PASS WORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும் மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் வழிக…
இச்செயல்பாட்டினை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தினை (Hi.Tech Lab) பயண்படுத்தி மேற்கொள்ளுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட செயல்பாடு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment