இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சூழல் குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. உணவு வகைகள், கொழுப்பு வகைகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூற்றுப்படி, 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் கிடைக்கும் மொத்த கலோரிகளில், 30% க்கும் குறைவான அளவு கொழுப்பிலிருந்து வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அதுமட்டுமின்றி, மருத்துவர்கள் அறிவுறுத்தும் வரையில், இளம் குழந்தைகள் கொழுப்புக் கட்டுப்படுத்தப்பட்ட உணவை பின்பற்றத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கவனிக்க வேண்டிய தீவிர பிரச்சனைகள் :
உங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குநர் வயதுக்கு ஏற்றதாக இல்லாத உடல் வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்தால், அதாவது பிஎம்ஐ அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து ‘அதிக எடை’ அல்லது பருமனான பிரிவில் இருந்தால் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
சாதாரண செயல்களைச் செய்யும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல்
மார்பு வலி மற்றும் படபடப்பு போன்ற பிரச்சனைகள் வருவது
தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
வீங்கிய கால்கள் அல்லது கணுக்கால் வீக்கம்
இது போன்ற பிரச்சனைகள் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவ ஆலோசகரை அணுகுவது சிறந்தது.
2 முதல் 18 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஆறு டீஸ்பூன் கூடுதல் சர்க்கரையை உட்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 100 கலோரிகள் அல்லது 25 கிராம் கூடுதலாக சேர்க்கப்பட்ட சர்க்கரைகளுக்கு சமம். உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பு அபாயங்கள், இதய நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவின் பெல்லந்தூரில் உள்ள கிளவுட்நைன் குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டல்ஸின் ஆலோசகரும், நியோனாட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தை நல மருத்துவருமான லக்ஷ்மி மேனன் அளித்த பேட்டியில், “நம் குழந்தைக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து அவர்களின் இதய ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியும். தாய்மார்கள் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், பின்னர் முடிந்தால் குறைந்தது 1 வருடம் வரை தொடர்ந்து கொடுக்கலாம். முதல் 6 மாதங்களுக்கு மருத்துவரின் அறிவுறுத்தல் இன்றி, பாலூட்டுவதை வழக்கமாகக் கொள்ளலாம். 6 மாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட உணவுகளை அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.
மேலும் அவர் “பல்வேறு உணவு வகைகளை சரியான வரிசையில் அறிமுகப்படுத்துவது மற்றும் அதன் அளவைக் கவனிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.
குழந்தையின் பசி மற்றும் மனநிறைவுக்கான விஷயங்களைப் புரிந்துகொள்வது, குழந்தையும் அதைப் புரிந்துகொள்வதற்கு உதவுவது மற்றும் குழந்தை சாப்பிட விரும்பாதபோது அதனை ஏற்றுக் கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்ப்பதற்கு முக்கியமானது. கட்டமைக்கப்பட்ட உணவு நேரங்கள் மற்றும் உணவில் கவனம் செலுத்துதல், குடும்பத்துடன் சாப்பிடுதல் ஆகியவை குழந்தைக்கு உணவு நேரத்தை கடைப்பிடிக்க உதவும் உதவும் நுட்பங்களாக கவனம் பெறுகின்றன. மேலும் அவர்கள் வளர வளர, ‘என் தட்டு’ என்ற கருத்தை அவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.
குழந்தைகள் அதிகளவில் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதும், சுறுசுறுப்பாக செயல்படுவதும் குறைந்து வருகிறது, இது இளம் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
உங்கள் தட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 5 வகை உணவுகள் :
முழு தானியங்கள் - கோதுமை, அரிசி, சோள மாவு, தினை ஆகியவை இதில் அடங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு குறைந்தப்பட்சம் பாதி உணவுகளை முழு தானியமாக வழங்க வேண்டும்.
காய்கறிகள் - தினசரி மாறுபட்ட காய்கறிகளை பரிமாறவும். பச்சை, சிவப்பு, மஞ்சள் கலந்த காய்கறிகளைப் பயன்படுத்தவும் மற்றும் அந்த பருவத்திற்கு ஏற்ற காய்கறிகளையும் உட்கொள்வது உடல்நலனை மேம்படுத்த உதவும். குறைந்தது அரை தட்டிலாவது காய்கறிகள் இருக்க வேண்டும்.
பழங்கள் - தினசரி உணவில் 1 பகுதி பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பருவத்திற்கு ஏற்ற பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 1 வயது குழந்தைகளுக்குப் பழச்சாறுகளை AAP பரிந்துரைக்கவில்லை மற்றும் 1-3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 4 அவுன்ஸ் வரை மட்டுமே வழங்க வேண்டும்.
பால் பொருட்கள் - தயிர், போதுமான அளவு பால், பன்னீர் போன்ற பொருட்களையும் இந்த தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புரோட்டீன் - சைவமாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கலாம். அசைவ உணவுகளில் இறைச்சி அல்லது முட்டை அடங்கும். மற்றும் காய்கறி உணவுகளில் பருப்பு, பட்டாணி, பீன்ஸ் போன்றவை அடங்கும். உணவு தயார் செய்யும் போது மட்டுமே சிறிதளவு எண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தலாம், மாறாக உண்ணும் போது அல்ல. ICMR இன் படி, மொத்த கலோரிகளில் சுமார் 2000 கிலோ கலோரி மருத்துவ நிலை இல்லாத குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படலாம். இது சம்பந்தப்பட்ட செயல்பாடு மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும்.
No comments:
Post a Comment