மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்து விட்டதா? கவலையே படாதீங்க. இந்த பதிவில் உங்களுக்கான அற்புதமான ஒரு டிப்ஸ் காத்திருக்கு. மன அழுத்தத்தை குறைப்பதற்கு இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
எப்பொழுதும் அவசர அவசரமாக கடைசி நேரத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்பவர்களின் அறை அல்லது மேசை ஒழுங்கற்று இருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆனால் இதுவே பெரும்பாலான சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பவர்களின் அறை சுத்தமாக இருப்பதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இதற்கு பின்னணியில் முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. உங்களுடைய அறையை சுத்தம் செய்வது உங்களுடைய மனநலனை பல வகையில் மேம்படுத்துவதற்கு உதவும். ஆச்சரியமாக உள்ளதா? ஆம், அது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
வீட்டை ஒழுங்குப்படுத்தி அதனை சுத்தம் செய்வதால் உங்களுக்கு நல்ல இரவு தூக்கம் கிடைக்கிறது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காக அமைக்கப்படாத அறையில் படுத்து உறங்கும் பொழுது அது ஒருவருடைய தூக்கத்தின் தரத்தை மோசமாக பாதிக்கிறது. அதுவே சுத்தமான அறையில் படுத்து உறங்குவது ஒருவருடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
உங்களுடைய அறையை அடுக்கி வைத்து சுத்தம் செய்யும் பொழுது உங்களுடைய கவனத்திறன் மேம்படுத்தப்படுகிறது. இது ஹார்வேர்ட் பிசினஸ் ரிவ்யூ, 2020 நடத்தப்பட்ட ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய அறையை நீங்கள் சுத்தம் செய்யும் பொழுது அதனால் உங்களுக்கு மனதெளிவு ஏற்படும். இது தேவையற்ற தடங்கல்களை தவிர்த்து உங்களுடைய உடலில் டோபமைன் என்ற மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இதனால் உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது.
உங்களுடைய அறையில் உள்ள பொருட்களை நீங்கள் அடுக்கி வைக்கும் பொழுது உங்களுடைய மனநிலை மேம்படுத்தப்படுகிறது. சுத்தம் செய்வதனால் உங்கள் மூளை ஆக்டிவேட் செய்யப்பட்டு அதனால் நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள். சுத்தமான அறையில் இருப்பவர்களின் மனநிலை சாந்தமாக இருக்கும் என்பது 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.
உங்களுடைய அறையை நீங்கள் ஒழுங்கமைக்கும் பொழுது உங்களுடைய மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். இதுவும் 2020 ஆம் ஆண்டு ஹார்வேர்ட் பிசினஸ் ரிவ்யூ ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. கலைந்து கிடக்கும் பொருட்களை அடுக்கி வைப்பதால் குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படும். இதன் விளைவாக உங்களை சுற்றி உள்ள சூழ்நிலையை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.
எனவே இந்த எளிமையான விஷயத்தை செய்வதன் மூலமாக நமக்கு இவ்வளவு பலன்கள் கிடைக்கும் போது, உங்களுடைய மனநலனை மேம்படுத்த உங்கள் அறையை இன்றே சுத்தம் செய்ய ஆரம்பியுங்கள்.
0 Comments:
Post a Comment