Search

காயமடைந்த பின் ’டிடி தடுப்பூசி’ போடுவது ஏன் அவசியம்..? இதன் செயல் என்ன..? விளக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்..

 

உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டவுடன் TT Injection போட மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால் பலருக்கும் இதை ஏன் போடுகிறோம், எதற்கு இதை அவசியம் போட வேண்டும் என்பது தெரியாது. இதற்காகவே அறுவை சிகிச்சை மருத்துவர் கீர்த்தனா பிரியதர்ஷினி TT Injection குறித்த தகவல்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிடி தடுப்பூசி என்றால் என்ன..?

டிடி தடுப்பூசி என்பது ‘Tetanus toxoid vaccine’ என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கிறது. அதாவது டெட்டனஸ் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா மண் உட்பட சுற்றுச்சூழலில் இருக்கும். அவை வெட்டுக்காயங்கள், திறந்த காயங்கள் மூலம் உடலுக்கு எளிதில் நுழையலாம்.

பற்களில் ஏற்படும் நோய் தொற்றுகள், அறுவை சிகிச்சை செயல்முறைகள், எலும்பு முறிவு காயங்கள், நரம்பு வழியாக போதைப் பொருள் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலமும் டெட்டனஸ் நோய் தொற்று பரவலாம். எனவே இந்த டெட்டனஸ் நோய் தொற்றை தடுக்கவே டிடி தடுப்பூசி போடப்படுகிறது.


யாருக்கெல்லாம் தேவைப்படாது..?

1 முதல் 10 வயது குழந்தைகளுக்கு அட்டவனைப்படி தடுப்பூசி போடப்படும் என்பதால் அவர்களுக்கு டிடி தடுப்பூசி தேவைப்படாது.

ஏற்கெனவே டிடி தடுப்பூசி போட்டவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போதுமானவரை இருக்கும் என்பதால் அடுத்த 5 வருடங்களுக்கு டிடி தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை. அந்த 5 வருடத்திற்குள் காயம் ஏற்பட்டாலும் தடுப்பூசி போட வேண்டாம்.

பக்கவிளவுகள் வருமா..?

டிடி தடுப்பூசியை அடிக்கடி போடக்கூடாது. அவ்வாறு போடுவதால் serum sickness syndrome என்கிற பாதிப்பை உண்டாக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment