Search

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Senior Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master’s Degree in Natural or Agricultural Sciences/ M.V.Sc. படித்திருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 42,000 + HRA

Laboratory Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc./ Graduate Degree in Biotechnology / Microbiology/ Life sciences /Agricultural Sciences  படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 20,000 + HRA

வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும். .பி.சி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்

முகவரி: Poultry Disease Diagnosis and Surveillance Laboratory, Veterinary College and Research Institute Campus, Namakkal – 637 002

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment