பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :காலம் அறிதல்
குறள்எண்:486
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
பொருள்: ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
பழமொழி :
ஆசானுக்கும் அடைவு தப்பும்
யானைக்கும் கூட அடி சறுக்கும்
Good swimmers are sometimes drowned
இரண்டொழுக்க பண்புகள் :
*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .
*எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.
பொன்மொழி :
நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ, நாம் அவ்வளவு அதிகமாக நம் அறியாமையை அறிந்துகொள்கிறோம். –பெர்சி பைஷ் ஷெல்லி
பொது அறிவு :
உலகின் எட்டாவது அதிசயம் எனப் போற்றப்படுபவர் யார்?
விடை : ஹெலன் கெல்லர்.
இந்தியாவின் மிக நீளமான சாலை எவ்வாறு குறிப்பிடப் படுகிறது ?
விடை : NH 44
English words & meanings :
goal-இலக்கு,
target-நோக்கம்
வேளாண்மையும் வாழ்வும் :
ஆண்டவரின் அருள் கிட்டி இயற்கை நமக்கு உறுதுணை புரிந்து மழை பொழிய மண் செழித்து நாம் உயர்ந்து நாடும் உயர நாம் பிரார்த்திப்போம்.
ஆகஸ்ட் 20 இன்று
இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
உலகக் கொசு நாள்
உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1897 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.[1] இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மத நல்லிணக்க தினம்
சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
மரியாதை ராமன் தீர்ப்பு
மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர்.
ஒருமுறை சோமன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்து விட்டார்.அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு பணப்பை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்று சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்து தேடி பார்த்து யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.
ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க நினைத்து வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.
அங்கு இருந்த கடையில் விசாரித்த பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.
கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை.சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையை சொன்னார்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.
ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பையை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம்.
சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தை சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
நீதி: எப்போதும் நேர்மை மற்றும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள் - 20.08.2024
*:தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் இரவுக் காவலர்கள் விரைவில் நிரப்பப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
* புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமனம்: தமிழக அரசு உத்தரவு.
* கொல்கத்தா சம்பவம்: ஜிப்மரில் தொடரும் காலவரையற்ற போராட்டம் - வெளியூர் நோயாளிகள் பாதிப்பு.
* மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக குறைப்பு.
* தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு.
* ரஷியாவின் 2-வது முக்கிய பாலம் தகர்ப்பு; உக்ரைன் அதிரடி.
* சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அல்- ஹிலால் அணி வெற்றி.
* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர், ஜெசிகா பெகுலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
* Minister Anbil Mahesh Poiyamozhi said that night guards will soon be filled in government schools across Tamil Nadu.
* Appointment of NA Muruganandam as new Chief Secretary: Tamil Nadu Govt.
* Kolkata incident: Indefinite protest continues in Jipmar - Outpatients affected.
* Water release from Mettur dam is reduced to 16 thousand cubic feet.
* National Sports Day Celebration: UGC orders to hold competitions in colleges.
* Russia's 2nd major bridge blown up; lightning strike by Ukraine.
*Al-Hilal wins Saudi Super Cup football final.
* Cincinnati Open Tennis; Jannik Sinner and Jessica Pegula advance to the finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment