தங்களது தோற்றத்தை வித்தியாசமாக, ஸ்டைலாக அதே சமயம் இளமையாக காட்ட விரும்புவோருக்கு ஹேர் கலரிங் என்பது பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. ஸ்மூத்தான மற்றும் ஷைனிங்கான கூந்தலை வழங்கும் அதே நேரம் கெமிக்கல் ஹேர் டை-க்கள் முடி வளர்ச்சியில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பலரும் யோசிக்க தவறி விடுகிறார்கள்.
ஹேர் டை-க்களுக்கு பின்னால் உள்ள கெமிக்கல்ஸ்…
கெமிக்கல் அடிப்படையிலான ஹேர் டை-க்கள் என்பவை முடியின் நிறத்தை மாற்றும் சிந்தடிக் காம்பவுண்ட்ஸ்களின் கலவையாகும். அதிலிருக்கும் அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பல்வேறு டை-க்கள் மற்றும் பிக்மென்ட்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூந்தலின் தண்டுக்குள் ஊடுருவி, கலர் மாலிக்யூல்ஸ்களை டெபாசிட் செய்யும் போது தலைமுடியை சேதப்படுத்துகின்றன. ஹேர் கலரிங் செய்து கொள்வது எதிர்பார்க்கும் லுக்கை கொடுக்கும் என்றாலும் காலப்போக்கில் அதிலிருக்கும் ரசாயனங்களின் ஆக்கிரமிப்பு தன்மை கூந்தல் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம்.
முடியின் ஸ்ட்ரக்ச்சரை சேதப்படுத்தலாம்…
கெமிக்கல் ஹேர் டையில் இருக்கும் கெமிக்கல்கள் முடியின் அமைப்பை சேதப்படுத்தும். இது போன்ற தயாரிப்புகளில் காணப்படும் அமோனியா, பொதுவாக முடியின் cuticle-ஐ திறந்து, டை-க்களில் இருக்கும் டை மாலிக்யூல்ஸ்களை ஊடுருவ அனுமதிக்கிறது. இது முடியின் இயற்கை எண்ணெய்கள் மற்றும் புரதங்களை அகற்றும். இந்த ப்ராசஸ்-ஆனது முடி தண்டு வறண்டு, கரடுமுரடாக மற்றும் உடையக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும் இது முடி உதிர்வை அதிகப்படுத்தி, முடியை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்த கூடும்.
ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை இழக்கும்…
பொதுவாக கெமிக்கல் டை-க்கள் முடியின் Ph லெவல் மற்றும் மாய்ஸட்ரைஸ் பேலன்ஸை சீர்குலைக்க கூடியவை. இதனால் தலைமுடி வறண்டு போவதோடு அதன் எலாஸ்டிக் தன்மையும் வெகுவாக குறையும். கெமிக்கல் ஹேர் டை-யில் சேர்க்கப்படும் அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்பு தன்மை முடியில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, முடியின் உலர வைத்து அதன் இயற்கையான அமைப்பை கடினமாக்கி விடும். இதனால் காலப்போக்கில் முடி அதிகம் சேதமடைய மற்றும் உடைய அதிக வாய்ப்புள்ளது.
உச்சந்தலை எரிச்சல்:
கெமிக்கல் அடிப்படையிலான ஹேர் டை-க்களில் தலைமுடிக்கு கீழே இருக்கும் சருமத்தை அதாவது ஸ்கால்ப்பை மிகவும் சென்சிட்டிவ் ஆக்கும் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளன. இவற்றில் இருக்கும் para-phenylenediamine மற்றும் பிற நறுமண அமின்கள் போன்ற கலவைகள் சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்த கூடும். இந்த அலர்ஜி அறிகுறிகளில் அரிப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் உச்சந்தலை மற்றும் சுற்றியுள்ள தோலில் கொப்புளங்கள் உள்ளிட்டவை இருக்கலாம்.
மேற்கண்ட காரணிகளை கருத்தில் கொண்டு உங்கள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க ஆர்கானிக் ஹேர் டை தயாரிப்புகளை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில் Kremlin hair gel கெமிக்கல் இல்லாத சிறந்த ஹேர் டையில் ஒன்றாகும். இது தாவரவியல் சாறுகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற இயற்கை கூறுகளை கொண்டு கூந்தலுக்கு சிறந்த நிறத்தை வழங்குவதோடு முடியை பலப்படுத்துகிறது.
மேலும் கிரெம்ளின் ஹேர் ஜெல் முடியின் தரத்தை உயர்த்த, கூந்தலை மிருதுவாக மற்றும் பளபளப்பாக வைக்க தயாரிக்கப்பட்டுள்ளது. கெமிக்கல்ஸ் அடங்கிய ஹேர் டை தயாரிப்புகள் உடனடி நிற மாற்றத்தை வழங்கும் என்றாலும், அவை ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு ஆபத்தை தான் ஏற்படுத்தும். எனவே கிரெம்ளின் ஹேர் ஜெல்லை பயன்படுத்துவது துடிப்பான மற்றும் அழகான கூந்தல் நிறத்தை பெற பாதுகாப்பான மாற்றாக இருக்கும்.
No comments:
Post a Comment