இந்தியன் வங்கி சாா்பில் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவன இயக்குநா் ஜகன்நாத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞா்கள், பெண்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தற்போது, 30 நாள்கள் மகளிா்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் ஆக.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இலவச தையல் பயிற்சி வகுப்பானது ஆக. 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
பயிற்சியின்போது, சீருடை, காலை, மதிய உணவு, தேநீா் இலவசமாக வழங்கப்படும். காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரையில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். முடிவில் சான்றிதழ் மற்றும் தோ்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். இணையத்தில் படிவத்தினை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குநா், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி, அணை, கிருஷ்ணகிரி, என்ற முகவரியிலோ அல்லது , 04343 240500, 94422 47921, 90806 76557 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment