தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பையும் பலரும் உற்றுநோக்கிக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்குத் தோராயமாக 3 மாதங்களிலிருந்து 6 மாத காலமேயாகும். ஆனால் கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சில காரணங்களால் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.
கடந்த 2014 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணத்தினால் 2020 மற்றும் 2021ல் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறவில்லை ஆகையால் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலாகத் தேர்வர்கள் பங்கேற்றனர். அதனால் மும்மடங்கு கூடுதலாக வேலைகள் இருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதம் ஆகியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மகளிருக்கான இடஒதுக்கீடு முறையில் மாற்றத்தை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் பெயராலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகின.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவிற்காக 17 லட்சத்திற்கு மேலான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்வு முடிவு தாமதமில்லாமல் விரைவாக வெளியாக வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்த்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்த இந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment