Search

நெய், அரிசி, உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்குமா..? டயட் இருப்போர் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 உடல் பருமனாக இருக்கும் நபர்களுக்கு தங்கள் உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைப்பது எப்போதுமே பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க சிறந்த வழி நீங்கள் உண்ணும் உணவிலும், உடல் செயல்பாடுகளிலும் ஆரோக்கியமான மாற்றங்களை செய்வதே.

ஆனால் எடை குறைப்பிற்காக சில விஷயங்களை செய்யும் போது சிலர் தங்கள் டயட்டில் பல உணவுகளை நீக்கி மிக கடுமையான உணவுமுறையை பின்பற்றுகிறார்கள். இதில் கொழுப்பு உணவு என்று முத்திரை குத்தப்படும் சில ஆரோக்கியமான உணவுகளும் அடக்கம். மிதமாக எடுத்து கொண்டால் கூட உடலில் கொழுப்பு கூடிவிடும் என எடை இழக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சில உணவுகளை அறவே தவிர்த்து விடுகிறார்கள்.

தங்களின் வெயிட் லாஸ் டயட்டின் போது பலர் தவிர்க்கும் பொதுவான உணவு பொருட்கள் தொடர்பான சில கட்டுக்கதைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணரான கரிஷ்மா ஷா விவரித்துள்ளார். இது தொடர்பாக தனது சோஷியல் மீடியாவில் ’ எடை குறைப்பிற்காக உங்கள் உணவை மாற்றியமைக்கும் போது, நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டியதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு பிடித்த உணவுகள் உங்கள் எடை இழப்பு குறிக்கோளுக்கு தடையாக இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று கேப்ஷன் கொடுத்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவற்றை கீழே பார்ப்போம்…

நெய்:

நெய் கொழுப்பு சத்து அதிகம் என கூறப்பட்டாலும், நம்முடைய வளர்சிதை மாற்றத்தை தூண்டி எடையைக் குறைக்க உதவும் கொழுப்பு அமிலங்களை (fatty acids) கொண்டுள்ளது. எனவே அதிக அளவு நெய் சேர்க்காமல் தினசரி ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்ப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளை அரிசி:

நாம் எப்போதும் வழக்கமாக எடுத்து கொள்ளும் வெள்ளை அரிசியை சாப்பிடுவதால் எடை அதிகரிப்பதாக தவறாக கூறப்படுகிறது. உண்மையில் அரிசி உணவை மிதமான அளவில் சாப்பிடும் போது, தீங்கு விளைவிக்கும் ஆபத்தான கொழுப்புகள் இல்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. எனவே இதன் நன்மைகளை சரியாக பெற வெள்ளை அரிசியை காய்கறிகள் அல்லது லீன் ப்ரோட்டீன்களுடன் சேர்த்து நன்கு சமச்சீரான டயட்டை பின்பற்ற கரிஷ்மா ஷா பரிந்துரைக்கிறார்.

மாம்பழம்:

கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழம் அனைவருக்கும் பிடித்த பழம். ஆனால் இதில் உள்ள கலோரிகள் காரணமாக எடை குறைப்பு முயற்ச்சியில் இருக்கும் பலரால் தவிர்க்கப்படுகிறது. சுவை கொண்ட பழத்தில் வைட்டமின்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை சிறப்பாக வைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கொழுப்பு கூடும் என்பது ஒரு பொதுவான கட்டுக்கதையாகும். குறிப்பாக இதன் தோலை உரிக்காமல் எடுத்து கொள்ளும் போது உருளைக்கிழங்கில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகளை பெற அவற்றை நன்கு வறுப்பதை தவிர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வாழைப்பழம்:

ஆரோகியமான காலை உணவிற்கான பழம் மட்டுமல்ல, அதிக ஆற்றல், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளவையாக வாழைப்பழங்கள் இருக்கின்றன. இந்த பழங்கள் செரிமானம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தீவிர ஒர்கவுட்டில் ஈடுபடுபவர்கள் இந்த பழத்தால் அதிக பலன் பெறலாம்.

கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலையில் அதிக ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் சத்து உள்ளது, இதை சாப்பிட்ட உடன் நீண்ட நேரம் வயிற்று நிரம்பிய உணர்வை தரும் மற்றும் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தும். மேலும் இது திறம்பட உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment