500 காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி - Agri Info

Adding Green to your Life

July 6, 2024

500 காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு மின்வாரியத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி

 தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்வதற்கான அறிவிப்பு தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆதிசேர்ப்பின் மூலம் மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும்  ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இன்ஜினியரிங் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாகப் தொழிற் நிறுவனங்களில் தொழிற் பழகுநர்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

News18

இத்திட்டம் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர்களுக்கும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளுக்கும் உள்ள இடைவெளிக்குப் பாலமாக உள்ளது.

மின்வாரியம் அறிவிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர்பயிற்சி வாரியத்துடன் (தென் மண்டலம் சென்னை) இணைந்து பட்டய  பொறியியலில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட் ரூமென்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர்சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், சிவில் இன்ஜினியரிங் என்ஜினியரிங்- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பட்டயப்படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு  ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற விரும்பும் நபர்கள் www. boat-srp.com எனும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத்தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment