இந்தியாவில் உள்ள அரசுத் துறைகளில் முக்கியமான துறைகளில் ஒன்றான அஞ்சல் துறையில் பணி வாய்ப்பு பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாகும். அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இளைஞர்கள் வெகு நாட்களாகக் காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அஞ்சல் துறையில் உள்ள கிராம் டக் சேவக்ஸ் (Gramin Dak Sevak) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பதாரருக்கான தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்…
அஞ்சல் துறையில் பிராஞ் போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டண்ட் போஸ்ட் மாஸ்டர் (ABPM/DakSevak), கிராம் டக் சேவக்ஸ் (GDS) உள்ளிட்ட பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு இல்லாமல் நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிகளுக்கு மொத்தம் 44,228 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 3,789 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கிளை தபால் அலுவலர் (BPM) பணிக்கு ரூ.12,000 - 29,380 வரையிலும், உதவி கிளை தபால் அலுவலர் பணிக்கு (ABPM/DakSevak) - ரூ.10,000 - 24,470 வரையிலும் சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பொதுப் பிரிவுக்கு ரூ.100, SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விண்ணப்பிக்கும் நபரின் கையெழுத்து, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 05.08.2024 தேதி கடைசி நாளாகும். இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment