ராயல் லுக்கில் கெத்தாக நிற்கும் தஞ்சாவூர் டைடல் பார்க்... 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு... - Agri Info

Adding Green to your Life

July 19, 2024

ராயல் லுக்கில் கெத்தாக நிற்கும் தஞ்சாவூர் டைடல் பார்க்... 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு...

 தமிழகத்தில் படித்த இளைஞர்கள் பெண்களுக்கு ஐடி வேலைகளைப் பெற உதவும் வகையிலும் மாநிலம் சமூகப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்காகவும் தஞ்சாவூர், சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று கடந்த‌ 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே தஞ்சையின் முதல் ஐடி பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் 3.40 ஏக்கரில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைதளம்‌ மற்றும் 3 அடுக்கு மாடிகளுடன், ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு வருடமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒப்பந்தக் காரர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டு வந்தார். தற்போது பூங்காவின் கட்டுமான பணிகள் 95சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் டைடல் பூங்கா திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்டா இளைஞர்களுக்கு வாய்ப்பு: டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, மும்பையில் ஐடி துறைகளில் வேலை பார்க்கின்றனர். தஞ்சையில் டைடல் பூங்கா திறக்கப்பட்டால். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பூங்காவில் இரு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 நிறுவனங்கள் வர உள்ளன./

இதன்மூலம் தஞ்சாவூர்,திருவாரூர்,பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் படித்த பிள்ளைகள் கூட வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த ஐடி பூங்காவால் டெல்டாவில் தொழிற்புரட்சி ஏற்படும். என ஐடி நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment