PMEGP SCHEME ல விண்ணப்பம் செய்யக்கூடிய பெரும்பாலான நபர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மத்திய அரசின் கடனுதவி திட்டங்களிலேயே PMEGP திட்டத்துல விண்ணப்பம் செய்யக்கூடிய விண்ணப்பங்கள் தான் அதிகமா நிராகரிக்கப்படுகிறது.
சரியான ஆவணங்கள், தொழில் செய்வதற்கான திட்டம், விலை புள்ளி எல்லாமே சரியா இருந்தாலும் ஏன் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி சரியான முறையில் விண்ணப்பம் செய்வது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
PMEGP :
தொழில் தொடங்கணும்னு ஆர்வத்தோடு இருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தேவையான முதலீட்ட PMEGP திட்டம் மூலம் பெற முடியும் . இந்த திட்டம் தற்போது தான் அறிவிக்கப்பட்டது இல்லை . ஏற்கனவே இருந்த பிரதமரின் ரோஜ்கர் யோஜனா (PMRY)
மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (REGP)ஆகிய இரண்டு திட்டங்களும் 2008 ஆண்டு சேர்க்கப்பட்டு PMEGP என்று திட்டமாக உருவாகியது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்று சொல்லக்கூடிய PMEGP திட்டத்தினுடைய நோக்கமே வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவர் ஆக்கி அதனுடன் வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகும்.
இந்தத் திட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறு, குறு நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூபாய்
25 இலட்சமும், சேவை நிறுவனங்கள் துவங்க ரூ.10.00 இலட்சமும் வங்கிக் கடன் பெற முடியும் . திட்ட மதிப்பீட்டில் 25%மானியம் நகர்புறங்களுக்கும், 35%மானியம் ஊரகபகுதிகளில் தொழில் துவங்கவோருக்கும் அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் உற்பத்திபிரிவின் கீழ் ரூ.10.00 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5.00 இலட்சம் மேற்பட்ட திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு கிடையாது.
என்ன என்ன தொழிலுக்கு கடன் கிடைக்கும்:
தகுதியான நபர்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, உணவு எண்ணெய் தயாரித்தல், ப்ளோரிங் டைல்ஸ் மற்றும் ஹோலோப்ளாக், இலவம் பஞ்சுமெத்தை, தலையணை தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரிப்பு, ஆட்டோ மொபைல் சர்வீஸ் ஸ்டேசன், காயர் மற்றும் காயர் பித் ப்ளாக்ஸ், பேக்கரி மற்றும் உணவகம், அழகு நிலையம், பெட் பாட்டில்கள் தயாரிப்பு மசாலா பொருட்கள் தயாரிப்பு போன்ற உற்பத்தி மற்றும் சேவை. நிறுவனங்கள் தொடங்க முன்வரலாம்.
எந்த தொழிலுக்கு கிடைக்காது :
மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது. வியாபாரம் சார்ந்த தொழில்கள் (பல சரக்கு கடை,மளிகை கடை, பொருட்களை வாங்கி - விற்கும் தொழில்) தொடங்க PMEGP திட்டத்தில் விண்ணபிக்க இயலாது. படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு PMEGP மூலம் முதலீட்டை பெற இயலாது.இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவு விடுதிகள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க PMEGP திட்டத்தில் பயன் பெற இயலாது.
விண்ணப்பம் :
இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை, திட்ட மதிப்பீடு , விலைப்புள்ளி , முக்கியமா சிபில் ரிப்போர்ட் இது எல்லாமே சரியா இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவருடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட தொழில் மையத்திலையோ , காதி மற்றும் கதர் கிராம அலுவலகத்திலேயே விண்ணப்பம் செய்யலாம். www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பம் செய்யலாம் .
விண்ணப்பம் நிரகரிப்பு :
pmegp திட்டத்தில் கடனுதவி பெறுவதற்கு இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 2022 இலிருந்து 24 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இருந்து PMEGP திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களோட எண்ணிக்கை மட்டும் 3, 83, 720 விண்ணப்பம் . இதில் தமிழ்நாட்டில் மட்டும் 32,005 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது . குறிப்பா மதுரை டிவிஷனலில் மட்டுமே 7730 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. PMEGP விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுது .
சரியான ஆவணங்கள் இல்லாமல் இருப்பது , விண்ணப்பதாரர் ஆர்வத்துடன் இல்லாமல் இருப்பது , தவறான முகவரி, தவறான தகவல், முக்கியமா சிவில் ரிப்போர்ட் சரியா இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
PMEGP திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு முன், உங்களுடைய தொழில் பற்றிய முழு விவரங்கள் இருக்க கூடிய திட்ட விவரம் தயார் செய்ய வேண்டும். உங்களுடைய தொழிலுக்கு என்னென்ன மிஷனரி வாங்க போறீங்களோ அந்த மிஷினரி ஓட விலை புள்ளி கொட்டேஷன் இருக்க வேண்டும். உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை எல்லாத்துலயும் ஒரே மாதிரியான முகவரி, பெயர், பிறந்தநாள் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் பிழை இருந்தால் உங்களுடைய அப்ளிகேஷன் நிராகரிக்கப்படும் .
குறிப்பாக தொழில் செய்ய உள்ள கடை அல்லது இடம் அதற்கான வாடகை அல்லது ஒத்தி பத்திரம் இருக்க வேண்டும். உங்களுடைய வங்கி வரவு செலவு சரியா இருக்க வேண்டும். உங்களுடைய சிபில் ரிப்போர்ட் குறைந்தபட்சம் 650 க்கு மேல இருக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்துமே தயார் செய்துவிட்டு விண்ணப்பம் செய்தால் உங்களுடைய விண்ணப்பம் விரைவாக ஏற்றுக் கொள்ளப்படும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment