Navik, Yantrik பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய கடலோர காவல்படை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்./
Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:
Navik, Yantrik பணிக்கென மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Navik கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Coast Guard வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Navik ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.29,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Indian Coast Guard விண்ணப்ப கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.300/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Navik தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 03.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment