Search

சுகர் முதல் மாரடைப்பு வரை.. தொப்பை இருந்தால் இத்தனை பாதிப்புகள் வருமா..?

 
சிலருக்கு உடல் நிறை குறியீடு (BMI) குறைவாக இருந்தாலும், அவர்களது உடல்வாகுக்கு கொழுப்புகள் அனைத்தும் அடிவயிற்றுப் பகுதியில் சேகரமாகும். இதனால் தொப்பை வயிறோடு இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு குண்டாக இல்லையென்றாலும், இவர்களது உள்ளுறுப்புகளில் கொழுப்புகளின் சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது டைப்-2 டயாபடிஸ் உள்ளிட்ட வளர்சிதை கோளாறுகளையும் இதய நோய்கள் வரும் ஆபத்தையும் அதிகரிக்கும்.

இதற்கு முக்கிய காரணம் பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளே எனப் பலர் கூறினாலும், அதிக கார்போஹைட்டரேட், அதிக தானியம், குறைவான புரதம் கொண்ட இந்திய உணவுகளை குற்றஞ்சாட்டுகிறார்கள் சில ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அடிவயிற்றுப் பகுதியை சுற்றிலும் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை நாம் பொதுவாக தொப்பை என அழைக்கிறோம். இது நம் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் கேடு செய்வதோடு அழகியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. உங்களுக்கு தொப்பை இருந்தால், இந்த 5 விஷயங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


நாள்பட்ட நோய்கள் வருவது அதிகரிக்கும் : நம் அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் அழற்சி ரசாயனங்களை வெளியேற்றுவதன் காரணமாக டைப்-2 டயாபடீஸ், இதய நோய்கள், குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கிறது. உள்ளுறுப்பு கொழுப்புகள் உடலின் முக்கியமான உறுப்புகளான கணையம், கல்லீரல் ஆகியவற்றை பாதிப்பதோடு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை நோய்க்குறி வரும் ஆபத்தையும் அதிகரிக்கிறது.

இதய நோய் வரும் அபாயம் : தொப்பைக்கும் இதய நோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இது இதய தமனியில் அடைப்புகள் உருவாக காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக ஹைபர்டென்சன், மாரடைப்பு, பெருந்தமனித்தடிப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் ஆபத்து அதிகமாகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளைசைரடு அளவு அதிகமாகவும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தாலும் தொப்பை வரக்கூடும்.

மனநல ஆரோக்கியத்தை பாதிக்கும் : உள்ளுறுப்பு கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பிற்கும் ரத்தத்தில் கொழுப்புகள் அதிகமாவதற்கும் காரணமாக இருக்கிறது. இதை கவனிக்காமல் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி டைப்-2 டயாபடீஸ் வரக்கூடும். இது ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது.

சுவாச செயல்பாடை பாதிக்கும் : ஒருவருக்கு தொப்பை இருந்தால், அவரது அடிவயிற்றுப் பகுதி அதிக எடையோடு இருக்கும். இது மூச்சுவிடுவதில் சிரமத்தையும், தூக்கத்தில் மூச்சுத்திணறலையும் உண்டாக்கும். முக்கியமாக நீங்கள் இரவு தூங்கும் போது, மார்பு மற்றும் அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் நுரையீரல் சுருங்கி விரிவதை தடுத்து சுவாசிப்பதை சிக்கலாக்குறது. இது தீவிர சுவாசப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும்.

சுவாச செயல்பாடை பாதிக்கும் : ஒருவருக்கு தொப்பை இருந்தால், அவரது அடிவயிற்றுப் பகுதி அதிக எடையோடு இருக்கும். இது மூச்சுவிடுவதில் சிரமத்தையும், தூக்கத்தில் மூச்சுத்திணறலையும் உண்டாக்கும். முக்கியமாக நீங்கள் இரவு தூங்கும் போது, மார்பு மற்றும் அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் நுரையீரல் சுருங்கி விரிவதை தடுத்து சுவாசிப்பதை சிக்கலாக்குறது. இது தீவிர சுவாசப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும்.


🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment