Search

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!

 டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் மொத்தம் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலி பணியிடங்கள் மற்றும் பதவிகள் :

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், முதுநிலை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர், என 20 வகையில் கீழ் 118 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயதுவரம்பு:

ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் வயதுவரம்புகள் வேறுபடும். 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிவாரியாக உச்ச வயதுவரம்பு மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருமுறைப்பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி. பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும். கணினி வழியில் பதிவு செய்யும் பொழுது, பத்தாம் வகுப்பு (SSLC) பதிவு எண், சான்றிதழ் எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதம், பயிற்று மொழி மற்றும் சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்களை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.பிறந்ததேதியை பத்தாம் வகுப்பு (SSLC) அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு(HSC) மதிப்பெண் பட்டியலுடன் சரி பார்க்க வேண்டியது அவசியம். தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டணமாக ரூ. 200 கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.06.2024 கடைசி தேதி ஆகும். டிகிரி மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மேலும் பணிவாரியான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உடைய விபரங்களை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை காணவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News




🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

0 Comments:

Post a Comment