Search

AI படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு.. ஏன் தெரியுமா? ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம்

 உலக அளவில் மாணவர்கள் விரும்பி படிக்கும் முதன்மை படிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு (Artificial Intelligence) இருப்பதாக மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஐசிஎஸ்ஆர் கட்டடத்தில் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவாக 2023 -24 ஆம் நிதி ஆண்டில் ரூ. 513 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.    

இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஐஐடி இயக்குநர் காமகோடி, நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.513 கோடி நிதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

’AI’ டா ’நெருப்புடா’ என்பது போல உலக அளவில் மாணவர்கள் விரும்பி படிக்கும் நம்பர் ஒன் படிப்பாக தற்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த படிப்பு மாறியுள்ளதாக கூறினார். ஏஐ பற்றி தெரிந்து கொள்வதற்கும் படிப்பதற்கும் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் ஏஐ மற்றும் கணிப்பொறி அறிவியல் துறையில் எதிர்கால தேவைகள் அதிகம் இருப்பதால்  அந்த துறை தற்போது வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.  

சென்னை ஐஐடியில் ஏஐ மற்றும் டேட்டா அனலிட்டிக்கல் பிடெக் (B.Tech)பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு மூலம் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாணவர்கள் ஐஐடியில் தான் படிக்க வேண்டும்.ஏஐ தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தங்களுக்கு பிடித்த படிப்பை எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் நன்றாக படித்தால் தான் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆசைப்பட்டதை எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும்.

ஐஐடியில் படித்தவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை என்ற தகவலான தகவல் பரவி வருகிறது. தவறான தகவலை மக்கள் நம்ப வேண்டாம். படித்த எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து துறை சார்ந்த பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்ஜினியரிங் பாடப் பிரிவில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்து அதனை பிரதானமாக வைத்துக்கொண்டு ஏஐ படிப்பை படிக்கலாம் என தெரிவித்தார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

0 Comments:

Post a Comment